தேசிய பசுமை தீர்ப்பாயம்
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal , NGT) இந்திய அரசியலமைப்பின் 21வது சட்டப்பிரிவுக் கூற்றின் கீழ், சுற்றுச்சூழல் தொடர்பான பிணக்குகளை விரைவாக தீர்க்கவும் உயர்நீதிமன்றங்களில் நடப்பில் இருக்கும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளைக் குறைக்கவும் இந்தியக் குடிகளுக்கு நலம்மிகு சுற்றுச்சூழலுக்கான உரிமையை நிலைநாட்டவும் 2010இல் நிறுவப்பட்டது. இந்தத் தீர்ப்பாயத்தின் முதன்மை இருக்கை புது தில்லியிலும் கிளை இருக்கைகள் சென்னை, போபால், புனே மற்றும் கொல்கத்தாவிலும் நிறுவப்பட்டுள்ளன.[1]
தற்போது இதன் தலைமை நடுவராக சூலை 7,2018 முதல் நீதியரசர் ஆதர்ஷ் குமார் கோயல் (சூலை 7,2018 முதல்) பரணிடப்பட்டது 2018-07-04 at the வந்தவழி இயந்திரம் பொறுப்பாற்றி வருகிறார்.[2]
சென்னைக் கிளை
தொகுதேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளை அக்டோபர், 2012 முதல் செயல்படத் துவங்கியுள்ளது. இதன் நீதித்துறை சார் உறுப்பினராக ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, நீதியரசர் எம். சொக்கலிங்கம் பொறுப்பாற்றி வருகிறார்; துறைசார் வல்லுநராக அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆர். நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார்[3]. அரும்பாக்கத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் மூன்று மாடிக் கட்டிடத்தில் இயங்குகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-14. பார்க்கப்பட்ட நாள் 2013-02-25.
- ↑ http://www.uniindia.com/news/india/adarsh-kumar-goyal-is-new-ngt-chairman/1281554.html
- ↑ 3.0 3.1 "NGT waiting for better facilities, more manpower". ஆர். சிவராமன். தி இந்து. 25 பெப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் ஃபிப்ரவரி 25, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
- http://www.indiaenvironmentportal.org.in/node/300742
- http://envfor.nic.in/legis/others/envapp97.html பரணிடப்பட்டது 2013-05-01 at the வந்தவழி இயந்திரம்
- http://www.envfor.nic.in/legis/env/env1.html பரணிடப்பட்டது 2013-02-18 at the வந்தவழி இயந்திரம்
- http://www.indiaenvironmentportal.org.in/files/National%20Green%20Tribunal.pdf
- http://moef.nic.in/modules/recent-initiatives/NGT/ பரணிடப்பட்டது 2012-07-14 at Archive.today