தேசிய எழுத்தறிவுத் திட்டம் (இந்தியா)
தேசிய எழுத்தறிவுத் திட்டம் (National Literacy Mission) என்பது 1988 ஆம் ஆண்டில் இந்திய அரசினால் தொடங்கப்பட்ட தேசிய அளவிலான திட்டமாகும்.[1] 15 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட 80 மில்லியன் நபர்களுக்கு எண்பது வருடத்தில் எழுத்தறிவு ஏற்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்டது. எழுத்தறிவு என்கின்ற பொழுது வாசிப்பது, எழுதுவது மற்றும் கணக்கிடுவது மட்டுமில்லாமல் மக்கள் தங்களுக்குள் உதவிபுாிந்து புதியதொரு மாற்றத்தை நோக்கச் செல்ல பயனளிக்கிறது.
தேசிய எழுத்தறிவுத் திட்டம் (NLM) | |
---|---|
நாடு | இந்தியா |
துவங்கியது | 5 மே 1988 |
வரலாறு
தொகுதேசிய எழுத்தறிவுத் திட்டம் இந்திய அரசாங்கத்தால் மே மாதம் ஐந்தாம் நாள் 1988 அன்று நிறுவப்பட்டது. இத்திட்டம் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் உள்ள தேசிய மனிதவள மேம்பாட்டு ஆணையத்தி்னால் செயல்படுத்தப்படுகிறது.கேரள மாநிலத்திலுள்ள கோட்டயத்தில் முதன்முதலாக இத்திட்டம் தொடங்கப்பட்டது. 2002 நவம்பர் வரை நாட்டிலுள்ள 600 மாவட்டங்களில் 596 மாவட்டங்கள் வரை இத்திட்டத்தை செயல்படுத்தின. 1999-ல் யுனெஸ்கோ அமைப்பு நோமா எழுத்தறிவு விருது என்ற விருது வழங்கி சிறப்பித்தது. தொடக்கப்பள்ளிகளில் தரமான கல்விக்கு வழி வகுத்ததோடு விழிப்புணர்வையும் இது ஏற்படுத்தியுள்ளது. தேசிய எழுத்தறிவு இயக்கமானது நாடு முழுவதும் உள்ள அரசு சாரா நிறுவனங்களுக்கு நிதி உதவியளித்து இணைந்து செயலாற்றுகிறது.
நிதியளிப்பு
தொகுதேசிய எழுத்தறிவுத் திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான நிதியை வழங்குகிறது. மைய மற்றும் மாநில அரசின் பங்களிப்பு நிதியை 2:1 என்ற விகிதத்திலும் பழங்குடியினர்களுக்கான மாவட்ட துணை திட்டத்திற்காக 4:1 என்ற விகிதத்திலும் நிதியை வழங்குகிறது.
தேசிய எழுத்தறிவுத் திட்டப் பணி
தொகுயுனெஸ்கோ ஆய்வின்படி 2005 முதல் 2010 வரை இந்தியாவில் 15 வயது முதல் 24 வயது வரையுள்ள இளைஞர்களுக்கு 81 விழுக்காடும் மீதமுள்ள நபர்களுக்கு 63 விழுக்காடும் எழுத்தறிவு வழங்கியுள்ளது.
சான்றுகள்
தொகு- ↑ National Literacy Mission இந்திய அரசு portal.