தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம்

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (National Institute for Research in Tuberculosis) தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள காசநோய் ஆராய்ச்சி நிறுவனமாகும். தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் காசநோய் மற்றும் எயிட்சு-காசநோய் மருத்துவ, பாக்டீரியாவியல், ,நடத்தை மற்றும் தொற்றுநோயியல் அம்சங்கள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்கிறது.[1]

National Institute for Research in Tuberculosis
நிறுவப்பட்டது1956
ஆய்வு வகைபொது
நிதிநிலை0 (US$0.00)
ஆய்வுப் பகுதிகாச நோய்
அமைவிடம்சென்னை, இந்தியா
Campusநகர்ப்புறம், சேத்துப்பட்டு
Affiliationsசென்னைப் பல்கலைக்கழகம்
Operating agencyஇந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை
இணையதளம்nirt.res.in

கல்வி மற்றும் ஆராய்ச்சி தொகு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை, உலக சுகாதார நிறுவனம் மற்றும் இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சி சபையின் கூட்டு அனுசரணையில் 1956ஆம் ஆண்டு 5 ஆண்டு திட்டமாகத் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (முன்னர் காசநோய் வேதிச்சிகிச்சை மையம் என அறியப்பட்டது) நிறுவப்பட்டது. முனைவர் பட்ட ஆய்விற்கு வழிவகுக்கும் முதுநிலை பயிற்சிக்காக இந்த நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பாக்டீரியாவியல், உயிர்வேதியியல், நோயெதிர்ப்பு மற்றும் புள்ளியியல் ஆகியவற்றில் சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மற்றும் இலங்கையின் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வாரியத்தால் பட்டங்கள் வழங்கப்படுகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Archived copy". Archived from the original on 26 July 2014. பார்க்கப்பட்ட நாள் 18 July 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "History". Archived from the original on 26 July 2014. பார்க்கப்பட்ட நாள் 18 July 2014.

வெளி இணைப்புகள் தொகு