தேசிய கைவினை மற்றும் கைத்தறிகள் அருங்காட்சியகம்
தேசிய கைவினை மற்றும் கைத்தறிகள் அருங்காட்சியகம் (National Handicrafts and Handlooms Museum), பொதுவாக தேசிய கைவினைகள் அருங்காட்சியகம் என்று அறியப்படுவதாகும். இந்த அருங்காட்சியகம் இந்தியாவில் புது தில்லியில் அமைந்துள்ள பெரிய கைவினை அருங்காட்சியகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. .
நிறுவப்பட்டது | 1956 |
---|---|
அமைவிடம் | பிரகதி மைதானம், பைரான் சாலை புதுதில்லி, இந்தியா |
வலைத்தளம் | nationalcraftsmuseum.nic.in/ |
இந்த அருங்காட்சியகம் இந்திய அரசின் ஜவுளி அமைச்சகம் நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது. புராண கிலா வளாகத்தை எதிர்கொண்டு அமைந்துள்ள பிரகதி மைதானத்தின் மூலையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
வரலாறு
தொகுகமலாதேவி சட்டோபாத்யாய் அவர்களின் முயற்சியால் 1950 கள் மற்றும் 60 களில் தொடங்கி 30 ஆண்டுகளில் இது அமைக்கப்பட்டது, இந்த பகுதி ஒரு இனவழி இடமாக கருதப்பட்டு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கைவினைஞர்கள் பல்வேறு பாரம்பரிய கலைகளையும், கைவினைப் பொருள்களையும் பாதுகாப்பதற்காக வரும் நிலையில் இருந்தபோது இது செயலாக்கம் பெற்றது. 1980 களில் இது ஏற்கனவே கணிசமான கலைப் பொருள் சேகரிப்புகளைக் கொண்டிருந்தது, காலப்போக்கில் அருங்காட்சியக இடம் படிப்படியாக உருவாக்கம் பெற்று அதன் தற்போதைய வடிவத்தைப் பெற்றது. [1]
தற்போது இந்த அருங்காட்சியகத்தில் இந்திய கைவினைஞர்களின் தொடர்ச்சியான பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்ற 35,000 க்கும் மேற்பட்ட அரிய மற்றும் தனித்துவமான கலைப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஓவியம், எம்பிராய்டரி, ஜவுளி போன்றவையும், களிமண், கல் மற்றும் மரத்தால் ஆன கலைப்பொருள்களும் உள்ளன. இந்த பல்வேறு கைவினைப்பொருட்கள் அனைத்தும் 1975 மற்றும் 1990 க்கு இடையில் கட்டிடக் கலைஞர் சார்லஸ் கோர்ரியாவால் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன, [2] [3] நவீன வடிவமைப்பில் பாரம்பரிய கட்டிடக்கலை இணைப்பினை இங்கு காண முடியும்.[4]
கண்ணோட்டம்
தொகுஅருங்காட்சியகத்திற்குள் உள்ள பல்வேறு காட்சிக் கூடங்களில் பழங்குடியினர் மற்றும் கிராமிய கைவினைத் தொகுப்புகள், ஜவுளித் தொகுப்புகள், பிரபல பண்பாட்டின் தொகுப்புகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. [5] அதன் மதிப்புமிக்க சேகரிப்பில், 250 ஆண்டுகள் முதல் 300 ஆண்டுகள் வரையிலான காலத்தைச் சேர்ந்த கர்நாடகாவைச் சேர்ந்த பூட்டா சேகரிப்பு, 300 ஆண்டு பழமையான அரிய காஷ்மீரி 'துஷாலாக்கள்', தனித்துவமான எம்பிராய்டரிக்கு சிறப்பு பெற்றசம்பாவிவைச் சேர்ந்த கைக்குட்டைகள், அரிய ப்ரோக்கேட் மற்றும் பலுச்சாரி புடவைகள், கட்ச் எம்பிராய்டரி, விலைமதிப்பற்ற உலோக நகைகள் மற்றும் பல. ஜவுளிகளின் தொகுப்பு ஆகியவற்றை இந்த அருங்காட்சியகம் கொண்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் 5-ஏக்கர் (20,000 m2) பரப்பளவில் ஒரு கிராம வளாகமும் உள்ளது. அங்கு அமைந்துள்ள 15 கட்டமைப்புகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கிராமங்கள், முற்றங்கள் மற்றும் கோயில்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் உள்ளிட்வை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. முழு கிராம வளாகமும் 1972 ஆம் ஆண்டில் நடைபெற்ற தற்காலிக கண்காட்சியின்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கிராமப்புற இந்தியாவின் கருப்பொருளைக் கொண்டு அமைந்த கலைப்பொருள்களைக் கொண்ட எச்சமாகும். தற்போது அருங்காட்சியகத்தில் வசிக்கும் பல பாரம்பரிய கைவினைஞர்கள், அருங்காட்சியக வளாகத்திற்குள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பணிபுரிவதைக் காணலாம். அவர்கள் உருவாக்கும் கைவினைப் பொருள்கள் அங்கு அவர்களால் விற்கப்படுகின்றன. [6]
காட்சியில் உள்ள சேகரிப்புகளை தவிர, அருங்காட்சியகத்தில் ஆய்வு மற்றும் ஆவண வசதிகள், ஒரு குறிப்பு நூலகம், ஒரு பாதுகாப்பு ஆய்வகம், ஒரு புகைப்பட ஆய்வகம் மற்றும் ஒரு ஆடிட்டோரியம் ஆகியவை உள்ளன. இந்த அருங்காட்சியகம் திங்கட்கிழமை தவிர, பிற நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும். பிரகதி மைதானம் டெல்லி மெட்ரோ நிலையம் வழியாக இந்த அருங்காட்சியகத்தை வந்து அடையலாம்.
நிர்வாகம்
தொகுகட்டிடங்கள்
தொகு-
அங்கன் மன்ச் தியேட்டர்
-
கைவினைப்பொருள்கள் தயாரிப்புப் பகுதி
-
தேர்
-
புறா மாளிகை
-
குலு குடிசை
ஓவியங்கள்
தொகு-
வீணையுடன் பெண்
-
குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்மணி
-
இராமரும் சீதையும்
-
விளக்கம் தேவை
-
குழந்தையுடன் பெண், மர ஓவியம்
பூட்டா சிற்பம் தொகுப்பு
தொகு-
பூட்டா காட்சிக்கூடம்
பழங்குடி மற்றும் நாட்டுப்புற கலை
தொகுசடங்கு கைவினை தொகுப்பு
தொகு-
சமணக் கோயில், கைவினை அருங்காட்சியகம்
-
மர சமண சிற்பம்
-
கோயில் காட்சிக்கூடம்
கோர்ட்லி கைவினை தொகுப்பு
தொகு-
ஹவேலி, கோர்ட்லி கைவினை காட்சிக்கூடம், கிராஃப்ட்ஸ் மியூசியம்
-
கோர்ட்லி கைவினை காட்சிக்கூடம்
-
கோர்ட்லி கைவினை காட்சிக்கூடத்தின் தோற்றம்
கண்காட்சிகள்
தொகுமேலும் படிக்க
தொகு- இந்தியாவின் அருங்காட்சியகங்கள்: தேசிய கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி அருங்காட்சியகம், புது தில்லி, ஜோதிந்திர ஜெயின் மற்றும் ஆர்த்தி அகர்வால் ஆகியோரால். அகமதாபாத்: மேபின் பப்ளிஷிங், 1989.
குறிப்புகள்
தொகு- ↑ Jain, Jyotindra; Aggarwala, Aarti (1989). National Handicrafts and Handlooms Museum, New Delhi. Ahmedabad: Mapin Pub. p. 221. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-944142-23-3.
- ↑ "About Museum". Archived from the original on 2017-08-04. பார்க்கப்பட்ட நாள் 2020-01-09.
- ↑ "National Crafts Museum Delhi". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2020-01-09.
- ↑ Charles Correa - Finding a New Indian Architecture BBC Radio 3
- ↑ Crafts Museum
- ↑ "Uthhan Gallery". Archived from the original on 2019-11-28. பார்க்கப்பட்ட நாள் 2020-01-09.