தேசிய நெடுஞ்சாலை 13
தேசிய நெடுஞ்சாலை 13 (National Highway 13 -India), என்பது இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசத்தின் மிக நீளமான அருணாச்சல நெடுஞ்சாலை வலையமப்பின் ஒரு பகுதி ஆகும். இது 1,559 கி.மீ. நீளமான இருவழிப்பாதையாகும். இது வடமேற்கில் தவாங் நகரிலிருந்து தென்கிழக்கில் வக்ரோ வரை செல்கிறது.[1][2] முழு பாதையும் 2018-ல் 6.2 கி. மீ. நீளமுள்ள திபாங் ஆற்றின் குறுக்கே திபாங் நதிப் பாலம் கட்டி முடிக்கப்பட்டதும் செயலுக்கு வந்தது.[3][4] சனவரி/பிப்ரவரி 2022க்குள் இலக்கை நிறைவு செய்யும் குறுகிய மாற்றுப் பாதையான சேலா சுரங்கம், அனைத்து வானிலை இணைப்பையும் வழங்கும்.[5][6] நெடுஞ்சாலைகள் மறுபெயரிடப்படுவதற்கு முன்பு, இது தே. நெ. 229 மற்றும் தே. நெ. 52 என அறியப்பட்டது.[7] இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலை, இந்தியாவின் கிழக்குப் பகுதியின் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு எதிரே உள்ள சீனாவின் மேற்கு தியேட்டர் கட்டளையின் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதில் இந்திய இராணுவத்தின் திறன்களை மேம்படுத்துகிறது.
தேசிய நெடுஞ்சாலை 13 | ||||
---|---|---|---|---|
தே. நெ. 13 அருணாசலப் பிரதேசம் | ||||
சேலா கணவாய் வரவேற்பு வளைவு தே. நெ. 13-ல் | ||||
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 1,559 km (969 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
West முடிவு: | தவாங் | |||
East முடிவு: | வாக்ரோ, லோஹித் மாவட்டம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | அருணாச்சலப் பிரதேசம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
பாதை
தொகுதே. நெ. தவாங், பொம்டிலா, நெச்சிபு, செப்பா, சாகலி, ஜிரோ, டபோரிஜோ, அலோங், பாசிகாட், தேசு ஆகிய நகரங்களை இணைக்கிறது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் வக்ரோ அருகே தே. நெ. 15 சந்திப்பில் முடிவடைகிறது.[7][8]
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 713A ஜோரம் அருகில்
- தே.நெ. 713 ஹோஜ் அருகில்
- தே.நெ. 513 பாசிகாட் அருகில்
- தே.நெ. 515 பாசிகாட் அருகில்
- தே.நெ. 313 மேகா அருகில்
- தே.நெ. 115 மேகா அருகில்
- தே.நெ. 113 ஹாவாகேம் அருகில்
- தே.நெ. 15 முனையம், வாக்ரோ அருகில்[8]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Archived copy". Archived from the original on 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2011-07-20.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) Start and end points of National Highways-Source-Government of India - ↑ Road network funding, MODNER
- ↑ "Dibang bridge icing on road building cake". http://arunachalobserver.org/2018/02/19/dibang-bridge-icing-road-building-cake/.
- ↑ Largest and longest bridges in India, [www.tentaran.com Tentaran].
- ↑ Sela pass tunnel, Economic Times, 1 Feb 2018.
- ↑ Sela tunnel construction to start soon, Business Standard, 21 Nov 2018.
- ↑ 7.0 7.1 "New Numbering of National Highways notification" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 30 April 2019.
- ↑ 8.0 8.1 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 22 April 2019.
வெளி இணைப்புகள்
தொகு- ஓபன்ஸ்ட்ரீட்மேப்பில் NH 13, செப்டம்பர் 19, 2021 இல் பெறப்பட்டது.