தேசிய நெடுஞ்சாலை 73 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 73 (தே. நெ. 73)(National Highway 73 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை இந்திய மாநிலமான கருநாடகாவில் செல்கிறது. இது கடல் துறைமுக நகரமான மங்களூரில் தொடங்கி துமகுருவில் முடிவடைகிறது.[1] தேசிய நெடுஞ்சாலை என்று பெயரிடப்பட்டாலும், மேற்குத் தொடர்ச்சி மலையின் சார்மாடி மலைப் பகுதியில் இந்த சாலை குறுகியது. மேலும் இச்சாலை நிலச்சரிவுகள், மரங்கள் விழும் அபாயத்திற்கு உட்பட்டது. இந்த நெடுஞ்சாலை முன்பு தேசிய நெடுஞ்சாலைகள் 48, 234 மற்றும் 206இன் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் மார்ச் 5, 2010 அன்று வர்த்தமானி அறிவிப்பால் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை எண்களைச் சீரமைத்ததைத் தொடர்ந்து இது தேசிய நெடுஞ்சாலை 73ஆக மாற்றப்பட்டது.[2]
தேசிய நெடுஞ்சாலை 73 | ||||
---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலை 73 | ||||
தேசிய நெடுஞ்சாலை 73 சார்மதி மலைத்தொடர் வழியே | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 317 km (197 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | மங்களூர் | |||
கிழக்கு முடிவு: | தும்கூர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | கருநாடகம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுதேசிய நெடுஞ்சாலை 73 (தே. நெ-73) மங்களூரு, பந்த்வால் பெள்தங்கடி, உஜிரே, சார்மாடி, கோட்டிகேஹரா, முடிகேர், பேலூர், ஹளேபீடு, ஜவகல், பனவாரா, அராசிகெரே, திப்தூர், கிப்பனவர, நிட்டூர், குப்பி மற்றும் கருநாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் வழியே நிடூரை இணைக்கிறது.[3]
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 66 மங்களூரு அருகே முனையம்.
- தே.நெ. 75 பன்ட்வால் அருகே
- தே.நெ. 173 முடிகேரே அருகே
- பெலூர் அருகே
- தே.நெ. 373 பானவாரா அருகே
- தே.நெ. 150A கிப்பனஹள்ளி அருகே
- தே.நெ. 48 துமகுரு அருகே முனையம்
மேலும் காண்க
தொகு- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
- கர்நாடகாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- காட் சாலைகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.
- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 4 December 2018. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.
- ↑ "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.