தேசிய விரைவுசாலை 2 (இந்தியா)

தேசிய விரைவுச்சாலை 2 (National Expressway 2) அல்லது KGP (சோனிபத் (குன்ட்லி)-காசியாபாத்-பல்வல்) கிழக்குப்புறத்தில் தில்லியைக்கடந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய விரைவுச்சாலை ஆகும். இந்தியத் தலைநகரைச் சுற்றி அரை வட்டமாக இருக்குமாறு அமைக்கப்படவுள்ள இச்சாலை ஐந்து மாவட்டங்களை கடந்து செல்லும்: அரியானா மாநிலத்தின் சோனிபத் மற்றும் பரிதாபாத் & உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பாக்பத், காசியாபாத் மற்றும் கெளதம் புத் நகர். இச்சாலை முழுவதிலும் ஊர்திகளின் வேக வரம்பு மணிக்கு 120 கிமீ ஆகும். இச்சாலையை மேம்படுத்த இந்திய அரசு நிதியளிக்க ஒப்புக்கொண்டுள்ளது.[1]

Indian National Expressway 2
2

தேசிய விரைவுசாலை 2
National Expressway 2
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு இதேநெஆ
நீளம்:135 km (84 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:குண்டிலி
முடிவு:பால்வால்
அமைவிடம்
முக்கிய நகரங்கள்:காசியாபாத், நொய்டா பெருநகர், பால்வால், சோனிபத்
நெடுஞ்சாலை அமைப்பு

இந்தச் சாலையானது தில்லி வழியாகச் செல்லும் 50,000 சரக்குந்துகளுக்கு மாற்றுப் பாதையாக விளங்கும். மேலும் இது தில்லியின் காற்று மாசினை 27% வரை குறைக்கும்.[2][3] இது 27 மே 2018 அன்று பிரதமர் நரேந்திர மோதியினால் திறந்து வைக்கப்பட்டது.[4] இச்சாலை யமுனா விரைவுச்சாலையுடன் இணைக்கப்படும்.[5]

சாலையின் சிறப்புகள்

தொகு
  • சாலையின் இருபக்கமும் மிதிவண்டிக்கான தனித்தடம் (2.5 மீ அகலம்)
  • ஒவ்வோர் அரை கிலோமீட்டருக்கும் மழை நீர் சேகரிப்பு வசதி
  • அதிவிரைவாகச் செல்வோரைக் கண்காணிக்க கேமராக்கள்
  • 135 கி.மீ நீளமுள்ள இச்சாலையில் சென்ற தொலைவுக்கு மட்டுமே கட்டணம் செலுத்தும் வசதி

மேலும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. இந்தியச் சாலை மற்றும் நெடுஞ்சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அறிவிப்பு (ஆங்கில மொழியில்)
  2. Bhattacharya, Somreet (29 May 2018). "Day 1 of Eastern Peripheral Expressway: 50,000 fewer trucks in Delhi". Times of India. https://timesofindia.indiatimes.com/city/delhi/day-1-of-epe-50000-fewer-trucks-in-delhi/articleshow/64360999.cms. 
  3. "Eastern Peripheral Expressway inaugurated by PM Modi is likely to decrease Delhi pollution by 27 per cent". India Today. 28 May 2018. https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/eastern-peripheral-expressway-inaugurated-by-pm-modi-is-likely-to-decrease-delhi-pollution-by-27-per-cent-1243728-2018-05-28. 
  4. "Prime Minister Narendra Modi to Inaugurate Eastern Peripheral Expressway on May 27". News18. https://www.news18.com/news/auto/prime-minister-narendra-modi-to-inaugurate-eastern-peripheral-expressway-on-may-27-1759493.html. 
  5. "Interchange at Yamuna Expressway to connect Eastern Peripheral Expressway".