தேஜசுவினி நிரஞ்சனா

தேஜசுவினி நிரஞ்சனா (Tejaswini Niranjana பிறப்பு 26 ஜூலை 1958) ஓர் இந்தியப் பேராசிரியர், கலாச்சாரக் கோட்பாட்டாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் கலாச்சார ஆய்வுகள், பாலினப் பயில்வுகள், மொழிபெயர்ப்பு மற்றும் இனவியல், குறிப்பாக இந்திய இசையின் பல்வேறு வடிவங்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராக பரவலாக அறியப்படுகிறார்.இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் அழகியலில் முதுகலைப் பட்டமும் , புனே பல்கலைக்கழகத்தில் மொழியியலில் எம்பில் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

தேஜசுவினி நிரஞ்சனா, ஒரு மாநாட்டில் பேசுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பணிகள்தொகு

இவர் கன்னட நாடக ஆசிரியரும் புதின எழுத்தாளருமானஅனுபமா நிரஞ்சனாவின் மகள். பெங்களூருவின் கலாச்சார மற்றும் சமுதாய ஆய்வு மையத்தில் இணை நிறுவனர் மற்றும் மூத்த ஆய்வாளர் ஆவார், அங்கு இவர் HEIRA பரணிடப்பட்டது 2017-09-19 at the வந்தவழி இயந்திரம் திட்டத்தில் முன்னணி ஆராய்ச்சியாளராகவும் இருந்தார். [1] மும்பையில் உள்ள டாடா சமூக அறிவியல் நிறுவனத்தின் , உயர்கல்விக்கான இந்திய மொழிகள் மையத்தின் உறுப்பினராக 2012 முதல் 2016 வரை இருந்தார். [2] 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவர் ஆங்காங்கின் லிங்னான் பல்கலைக்கழகத்தில் பண்பாட்டுக் கல்வி பிரிவின் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும், [3] அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் அறிவியல் பள்ளியின் வருகை பேராசிரியராகவும் இருந்தார். [4] அவர் ஆசிய நாடுகளுக்கிடையேயான கலாச்சார ஆய்வு சங்கத்தின் தலைவராக உள்ளார். [5]

2013 முதல் 2016 வரை பெங்களூரு இணையம் மற்றும் சமூகத்துக்கான மையத்தின் (இந்தியா) சிறப்பு உறுப்பினராக இருந்தார். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் (1997-1999) செபிசு போஸ்ட்டாக்டோரல் ஆய்வுதவித் தொகை, சிகாகோ பல்கலைக்கழகத்தில் ராக்பெல்லர் ஆய்வுதவித் தொகை மற்றும் ஹோமி பாபா தேசிய ஆய்வுதவித் தொகை ஆகியவற்றினைப் பெற்றுள்ளார். 1993 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான மத்திய சாகித்ய அகாடமி விருதும் ,1994 ஆம் ஆண்டில் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான கர்நாடக மாநில சாகித்ய அகாடமி விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. [6]

ஜனநாயகத்திற்கு எதிரானது என்ற அடிப்படையில், 2009 ஆம் ஆண்டில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ஐ எதிர்த்த, 180 கல்வியாளர்களில் ஒருவராக இருந்தார். [7]

வெளியீடுகள்தொகு

புத்தகங்கள்தொகு

 • மியூசிக்ஃபிலியா இன் மும்பை: பெர்ஃபார்மிங் சப்ஜக்ட்சு அண்ட் தெ மெட்ரோபொலிட்டன் அன்காசியசு (டர்ஹாம்: டியூக் யுனிவர்சிட்டி பதிப்பகம், 2020) [8]
 • மொபிலைசிங் இந்தியா: விமன், மைக்ரேசன் அண்ட் மியூசிக் பெட்வீன் இந்தியா அண்ட் டிரினிடாட் (டர்ஹாம்: டியூக் யுனிவர்சிட்டி பதிப்பகம், 2006) [9]
 • சைட்டிங் டிரான்ஸ்லேசன்: ஹிஸ்டரி, போஸ்ட்-ஸ்டிரக்சுரலிசம் அண்ட் தெ காலனிய; காண்டெக்ஸ்ட் (பெர்கீலி: கலிபோர்னியா பல்கலைக்கழகப் பதிப்பகம் , 1992) [10]

சான்றுகள்தொகு

 1. "Distinguished Fellows — The Centre for Internet and Society". cis-india.org (in ஆங்கிலம்). 2017-06-09 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Prof Tejaswini NIRANJANA - ARI". ari.nus.edu.sg. 2017-06-09 அன்று பார்க்கப்பட்டது.
 3. author. "Lingnan University". www.ln.edu.hk. 2017-06-09 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Tejaswini Niranjana | Ahmedabad University". 2020-11-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-10-12 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 5. "About Us". culturalstudies.asia (in ஆங்கிலம்). 2018-02-24 அன்று பார்க்கப்பட்டது.
 6. "文化研究教學研究營Teaching Cultural Studies Workshop 2006". english.ncu.edu.tw. 2017-06-09 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Academics Support Delhi High Court Decision in Section 377 Case". 2011-02-08.
 8. Press, Berkeley Electronic. "SelectedWorks - Prof. NIRANJANA Tejaswini:Musicophilia in Mumbai". works.bepress.com (in ஆங்கிலம்). 2017-06-09 அன்று பார்க்கப்பட்டது.
 9. Press, Berkeley Electronic. "SelectedWorks - Prof. NIRANJANA Tejaswini:Mobilizing India". works.bepress.com (in ஆங்கிலம்). 2018-02-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-06-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 10. Press, Berkeley Electronic. "SelectedWorks - Prof. NIRANJANA Tejaswini:Siting Translation". works.bepress.com (in ஆங்கிலம்). 2018-02-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-06-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேஜசுவினி_நிரஞ்சனா&oldid=3369804" இருந்து மீள்விக்கப்பட்டது