தேபசிறீ சௌத்ரி

தேபசிறீ சௌத்ரி (Debasree Chaudhuri)(பிறப்பு: ஜனவரி 31, 1971) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய அரசாங்கத்தில் இரண்டாவது மோதி அமைச்சகத்தில் பெண் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான அமைச்சராகப் பதவி வகித்தார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள ராய்கஞ்ச் தொகுதியிலிருந்து 17வது மக்களவைக்குப் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

தேபசிறீ சௌத்ரி
Debasree Chaudhuri
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
பதவியில்
30 மே 2019 – 7 சூலை 2021
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்இசுமிருதி இரானி
முன்னையவர்வீரேந்திர குமார் காதிக்
பின்னவர்மகேந்திர முஞாபாரா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
தொகுதிராய்கஞ்ச்
முன்னையவர்முகமது சலீம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 சனவரி 1971 (1971-01-31) (அகவை 53)[1]
பாலூர்காட், மேற்கு வங்காளம், இந்தியா[1]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)தேசபந்து நகர், கொல்கத்தா[1]
கல்விமுதுகலை, பர்துவான் பல்கலைக்கழகம்[1]
கையெழுத்து
மூலம்: [1]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

தேபசிறீ சௌத்ரி பலூர்காட்டில் தேபிதாசு சௌத்ரிமற்றும் இரத்னா சௌத்ரிஆகிய இணையரின் மகளாகப் பிறந்தார். பர்த்வான் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தை முடித்தார்.[1]

அரசியல் வாழ்க்கை தொகு

 
31 மே 2019 அன்று புது தில்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக தேபசிறீ சௌத்ரி பொறுப்பேற்றுக் கொண்டார்.

16 திசம்பர் 2016 அன்று, கொல்கத்தாவில் உள்ள திப்பு சுல்தான் மசூதியின் ஷாஹி இமாம் மௌலானா நூர் உர் இரகுமான் பர்கதியின் கருத்துகளைக் கண்டித்து நடந்த போராட்டத்தில், பைஸ்னாப்நகர் சட்டமன்ற உறுப்பினர்சுவாதின் குமார் சர்க்கார் மற்றும் பிற உள்ளூர் பாஜக தலைவர்களுடன் தேபசிறீ சௌத்ரி கைது செய்யப்பட்டார்.[4] தேபசிறீ சௌத்ரி இதற்கு முன்பு 2019 வரை பாஜக கொல்கத்தா தெற்கு புறநகர் மாவட்டத்தின் மாவட்ட பார்வையாளராக இருந்தார்.

2019 இந்தியப் பொதுத் தேர்தலில் ராய்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு 511652 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[2] மே 2019-ல், சௌத்ரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான மாநில அமைச்சராகப் பொறுப்பேற்றார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Bio of Member of Parliament". www.loksabha.nic.in. பார்க்கப்பட்ட நாள் 13 July 2019.
  2. 2.0 2.1 "Raiganj Election Results 2019 Live Updates: Debasree Chaudhuri of BJP Wins". News 18. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  3. "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV. 31 May 2019. பார்க்கப்பட்ட நாள் 31 May 2019.
  4. "BJP leaders protest against Shahi Imam, arrested" (in en-IN). The Indian Express. 16 December 2016. https://indianexpress.com/article/india/bjp-leaders-protest-against-shahi-imam-of-tipu-sultan-mosque-arrested-4429175/. 
  5. "PM Modi allocates portfolios. Full list of new ministers", Live Mint, 31 May 2019, பார்க்கப்பட்ட நாள் 22 August 2020

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேபசிறீ_சௌத்ரி&oldid=3686612" இலிருந்து மீள்விக்கப்பட்டது