தேவ்குண்டு அருவி

தேவ்குண்டு அருவி என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் பீகீரா அருகே அமைந்துள்ள நீர்வீழ்ச்சியாகும். இது பாறை மேற்பரப்பிலிருந்து தண்ணீரை ஊற்றுகிறது. ஒரு நாள் பயணமாகச் சுற்றுலா செல்வதற்குப் பிரபலமான இடமாகும். [1] [2]

தேவ்குண்டு அருவி
தேவ்குண்டு அருவி, பீகிரா மாவட்டம், ராஜ்காட்
தேவ்குண்டு அருவி is located in இந்தியா
தேவ்குண்டு அருவி
தேவ்குண்டு அருவி
தேவ்குண்டு அருவி is located in மகாராட்டிரம்
தேவ்குண்டு அருவி
தேவ்குண்டு அருவி
Map
அமைவிடம்பிகீரா, ரோகா, ரெய்காட் மாவட்டம், இந்தியா
ஆள்கூறு18°27′36″N 73°23′22″E / 18.4599°N 73.3895°E / 18.4599; 73.3895
வகைவீழ்ச்சி

அமைவிடம்

தொகு

தேவ்குண்டு நீர்வீழ்ச்சி பீகீரா பட்னஸில் அமைந்துள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகி இப்பகுதி அறிமுகம் ஆனதிலிருந்து, இது மிகவும் நெரிசலான மற்றும் ஆபத்தான இடமாக மாறியுள்ளது. இந்த இடத்திற்குத் தாமாக எவ்வித உதவியும் இல்லாமல் செல்ல முயலும்போது பலர் உயிர் இழந்துள்ளனர். இது மூன்று நீர்வீழ்ச்சிகளின் சங்கமமாகும். மேலும் இது குண்டலிகா ஆற்றின் தோற்றம் என்று கூறப்படுகிறது. 'தேவ்குண்டு' என்று அழைக்கப்படும் இந்த இடத்தை அடைவதற்கு அணைப்பகுதி மற்றும் வனப்பகுதி வழியாக சுமார் மூன்று மணி நேர நடைப்பயணமாகச் செல்லலாம். மலையேற்றத்தின் ஒரு முக்கிய பகுதி, பகுதி உலர்ந்த காடுகள் வழியாகச் செல்கிறது. இதன் இணையாக ஆறு ஓடுகிறது. சில இடங்களில் மாற்றுப்பாதை வழியாகச் செல்லலாம்.[3] இப்பகுதியில் அடர்ந்த காடுகள் இருப்பதால் மலையேற்றத்தின் போது வழிகாட்டி ஒருவரின் துணை அவசியமாகிறது.[4] [5]

பரிமாற்றம்

தொகு

அருகிலுள்ள விமான நிலையங்கள்

தொகு

அருகிலுள்ள தொடருந்து சந்திப்புகள்

தொகு
  • கொங்கன் தொடருந்து மண்டலத்தில் உள்ள மங்கன் ரயில் நிலையம், 30 கி.மீ.
  • மத்திய ரயில்வேயில் உள்ள லோனாவாலா ரயில் நிலையம், 82 கி.மீ.

குளியல்

தொகு

தேவ்குண்டு நீர்வீழ்ச்சி குளிப்பதற்குச் சிறந்த பகுதியாக, தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.[6] அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வரத்தால், இந்த குடிநீர் மூலம் மாசுபட்டுள்ளது.

மலையேற்ற விவரங்கள்

தொகு
  • காலம் : 1.5-2 மணி (தொடக்க இடத்திலிருந்து நீர்வீழ்ச்சியை அடைய)
  • தூரம் : 6.5 கி.மீ. (ஒரு பக்க)
  • சிரமம் நிலை : மிதமான (மூன்று நீரோடைகளைக் கடக்க வேண்டியிருப்பதால் கனமழையில் உயிருக்கு ஆபத்தானது)
  • சகிப்புத்தன்மை தேவை: நடுத்தர

பாதுகாப்பு

தொகு

மழைக்காலங்களில் மலைகளின் வடிவமைப்பு காரணமாக நீரின் அளவு மிக விரைவாக அதிகரிக்கிறது, எனவே நீர்வீழ்ச்சியைப் பார்ப்பது பாதுகாப்பற்றது. 2017ஆம் ஆண்டில், தேவ்குண்டு நீர்வீழ்ச்சியில் நடைபெற்ற இரண்டு விபத்துகளுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களுக்கு அருவிக்குப் பயணிகளின் வருகை தடைசெய்யப்பட்டுள்ளது.[7] அருவியில் இரண்டு மலையேற்றப் பயணிகள் இறந்த பின்னர், உள்ளூர் நிர்வாகம் 144வது பிரிவின்கீழ் தடையுத்தரவு அமலில் உள்ளது. [ மேற்கோள் தேவை ]

மேற்கோள்கள்

தொகு
  1. "Devkund Waterfall Trek - Explorers | Adventure Treks Tours Pune Mumbai".
  2. "The Secret Devkund Waterfalls On The Mumbai-Panvel-Goa Road Are Not So Secret Anymore". 101india.com. 29 November 2016. Archived from the original on 25 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 7 ஜனவரி 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "Trek to Devkund Waterfall". Tripoto.
  4. Ganbote, Shubham (14 November 2016). "Trek to Unexplored Devkund Waterfalls". Adventures365.in Blog. Archived from the original on 1 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 7 ஜனவரி 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  5. "Enjoy Devkund Camping". Enjoy Devkund Camping. Archived from the original on 2019-07-17. பார்க்கப்பட்ட நாள் 2021-01-07.
  6. "Devkund Waterfall Trek". 6 September 2017. Archived from the original on 27 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 7 ஜனவரி 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "Devkund waterfall closed to tourists for 3 months". 15 July 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவ்குண்டு_அருவி&oldid=3789676" இலிருந்து மீள்விக்கப்பட்டது