தொம்மசந்திரம், பெங்களூர் நகர மாவட்டம்

கருநாடக சிற்றூர்

தொம்மசந்திரம் (Dommasandra) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். தொமசந்திரா சிற்றூரானது பெங்களூர் நகர மாவட்டம் மற்றும் ஆனேக்கல் வட்டத்திற்கு உட்பட்டது. [1] [2] இது கர்நாடகத்தின் பெங்களூர் நகர மாவட்டத்தில் உள்ள ஆனேகல் வட்டத்தில் அமைந்துள்ளது.

தொம்மசந்திரம்
சிற்றூர்
தொம்மசந்திரம் is located in கருநாடகம்
தொம்மசந்திரம்
தொம்மசந்திரம்
கருநாடகத்தில் அமைவிடம்
தொம்மசந்திரம் is located in இந்தியா
தொம்மசந்திரம்
தொம்மசந்திரம்
தொம்மசந்திரம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°52′41″N 77°45′15″E / 12.878070°N 77.7542800°E / 12.878070; 77.7542800
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு நகர மாவட்டம்
வட்டம்ஆனேகல்
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்9,165
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம் தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
562 125
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA-01, KA-05 , KA-51, KA-53
இணையதளம்karnataka.gov.in

மக்கள்தொகையியல்

தொகு

2015 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தொம்மசந்திராவில் 10000 மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 5000 பேர் ஆண்கள் மற்றும் 5000 பெண்கள் உள்ளனர். [1] ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் மிகவும் பிரபலமான கிராம விழா நடக்கிறது. இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் இங்கு வாரசந்தை கூடுகிறது. சந்தையில் ஒவ்வொரு விவசாயியும் வந்து அறுவடை செய்த பயிர்களை விற்கலாம். சந்தையில் புதிய காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்க சுற்றுப்புறப் பகுதி மக்கள் வருகிறார்கள். ஓக்ரிட்ஜ் பன்னாட்டுப் பள்ளி, இன்வென்ச்சர் அகாடமி, கிரீன்வுட் ஹை, டிஐஎஸ்பி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் ஸ்மிருதி அகாடமி, சாந்தீபனி அகாடமி போன்ற பல சர்வதேச பள்ளிகள் அருகாமையில் உள்ளன. ஈரோ கிட்ஸ், போடர் ஜம்போ கிட்ஸ், லிட்டில் இலே போன்ற பாலர் பள்ளிகளும் இந்த இடத்தில் குழந்தைகளுக்காக இயங்குகின்றன. இந்த இடத்தில் கே.எம்.எப் பால் பால் பண்ணை உள்ளது. பல கோவில்களும் உள்ளன. இந்த கிராமத்தில் தருண் டெக்ஸ்டைல்ஸ், பவன் சில்க்ஸ், வரலட்சுமி டெக்ஸ்டைல்ஸ், மானுவேலா பாய் நெசவு போன்ற பல தொழில்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Village code= 2084800 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
  2. "Yahoomaps India :". பார்க்கப்பட்ட நாள் 2008-12-18. Dommasandra, Bangalore Urban, Karnataka

வெளி இணைப்புகள்

தொகு