தொழிலாளர் மேம்பாட்டு சங்கம்
தொழிலாளர் மேம்பாட்டு சங்கம் (Workers Development Union) கோவா மாநிலத்தின் இயேசு சபைகளின் சமூக நடவடிக்கை பிரிவு மற்றும் ஒரு அரசு சாரா அமைப்பு ஆகும். இந்த அமைப்பு ஜன ஜாக்ரன் அல்லது சிராமிக் அபிவிருத்தி சங்கம் என்றும் அழைக்கப்படும். இந்த அமைப்பு பெல்காம் மற்றும் வடக்கு கர்நாடகாவின் பிற மாவட்டங்கள் மற்றும் மகாராட்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் கவனம் செலுத்துகிறது. [2] [3]
சுருக்கம் | சிராமிக் அபிவிருத்தி சங்கம் |
---|---|
தலைமையகம் | |
சேவை பகுதி | வடக்கு கருநாடகம் & கோல்காப்பூர் |
என்றும் அழைக்கப்படுகிறது | சன சாக்ரன் (விழித்துக்கொள்) |
இயக்குநர் | சோசப் செனகலா [1] |
சார்புகள் | கோவா மாகாணம் இயேசு சபை கத்தோலிக்க திருச்சபை |
பணிக்குழாம் | 42 |
வலைத்தளம் | சிராமிக் அபிவிருத்தி சங்கம் |
செம்மறியாடு பராமரிப்பு, நவீன மருந்துகள், நவீன வளர்ப்பு முறைகள் ஆகியவற்றில் மேய்ப்பர் பயிற்சித் திட்டம் கர்நாடகாவின் வடக்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகிறது.[4] [5] 1996 ஆம் ஆண்டில், சணல் மற்றும் பருத்தி நாரால் செய்யப்பட்ட கைப்பைகள் மற்றும் பிற கைவினைப் பொருட்களை உள்ளூர் பெண்கள் உற்பத்தி செய்து சந்தைப்படுத்த சிராமிக் அபிவிருத்தி சங்கம் உதவியது. 2005 ஆம் ஆண்டில், சிராமிக் அபிவிருத்தி சங்கம் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான சுவிசு நிறுவனத்துடன் இணைந்து, கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்தில் உள்ள குருபா பெண்களுக்கு தக்காணப் பீடபூமியில் செம்மறி ஆடுகளிலிருந்து கம்பளி பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்த உதவியது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Shepherds seek compensation". The Hindu. 8 June 2010. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Shepherds-seek-compensation/article16252761.ece. பார்த்த நாள்: 20 September 2018.
- ↑ "Marketing wool from an endangered sheep breed in the Deccan Plateau of India" (PDF). Gopi Krishna, PR Sheshagiri Rao, and Kamal Kishore. Food and Agriculture Organization. pp. 17–28. பார்க்கப்பட்ட நாள் 12 September 2018.
- ↑ "Belgaum District, Karnataka State". Indiana University. பார்க்கப்பட்ட நாள் 2 October 2021.
- ↑ "Karnataka / Belgaum News : Workshop on coarse wool begins today". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/workshop-on-coarse-wool-begins-today/article27537986.ece. பார்த்த நாள்: 27 September 2021.
- ↑ "A big, overseas market for coarse wool is waiting to be tapped". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/a-big-overseas-market-for-coarse-wool-is-waiting-to-be-tapped/article27538496.ece. பார்த்த நாள்: 27 September 2021.
- ↑ "Marketing wool from an endangered sheep breed in the Deccan Plateau of India" (PDF). Gopi Krishna, PR Sheshagiri Rao, and Kamal Kishore. Food and Agriculture Organization. pp. 17–28. பார்க்கப்பட்ட நாள் 12 September 2018."Marketing wool from an endangered sheep breed in the Deccan Plateau of India" (PDF).