தௌலத் ராம் சரண்

இந்தியாவின் இராசத்தான் மாநில அரசியல்வாதியும் சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார்.

தௌலத் ராம் சரண் (Daulat Ram Saran) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். இவர் 1924 ஆம் ஆண்டு சனவரி மாதம் 13 ஆம் தேதியன்று பிறந்தார். இராசத்தான் மாநிலத்தில் நன்கு அறியப்பட்ட உழவர் தலைவர் மற்றும் மகாத்மா காந்தியின் சீடர் என தௌலத் கருதப்படுகிறார்.[1] சுரு மக்களவைத் தொகுதியை இவர் மூன்று முறை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2] ஓர் அமைச்சராகவும் சந்திர சேகர் அமைச்சரவையில் 1990 முதல் 1991 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.[3]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

தௌலத் ராம் சரண், இராசத்தானின் சுரு மாவட்டத்தின் தானி பஞ்சேராவில் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை சர்தர்சாகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இவரது ஆசிரியர் ஒருவரை பள்ளி அதிபருக்கு நெருக்கமான சிலர் தாக்கினர் என்பதற்காக 16 வயதில், இவர் பள்ளி அதிகாரிகளுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றார்.[4]

1935 ஆம் ஆண்டு, தனது 11 ஆவது வயதில் இயாதவ் தேவியை திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு 3 மகன்கள் மற்றும் 4 மகள்கள் இருந்தனர்.[2] 1947 ஆம் ஆண்டுக்கு முன்னால் நடைபெற்ற தொடக்க கால சுதந்திரப் போராட்டத்தில் தீரமுடன் பங்கேற்றார்.[5]

அரசியல் வாழ்க்கை

தொகு

தௌலத் ராம் சரண் 1957 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை இராசத்தான் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். [2][5] இவர் ராசத்தான் அரசாங்கத்தில் துணை அமைச்சராகவும் பணியாற்றினார், ஆனால் முதல்வர் மோகன் லால் சுகாடியாவுடன் கருத்து வேறுபாடு காரணமாக பதவியைத் துறந்தார்.[2][5][6] இந்திரா காந்தியின் அவசர நிலை பிரகடனத்திற்குப் பிறகு உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் பராமரிப்பு சட்டம் 27 சூலை 1975 (மிசா) [7] இன் படி கைது செய்யப்பட்டார். இக் காலத்தில் 19 மாதங்கள் சிறையில் இருந்தார்.[7] சுரு தொகுதியில் இருந்து சனதா கட்சி சார்பாக 6 ஆவது மற்றும் 7 ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8][9]

சனதா கட்சி பிளவுபட்டபோது முதலில் சனதா கட்சியில் இருந்த அவர், பின்னர் அசித் சிங்கின் லோக்தளத்தில் இணைந்தார். சுரு தொகுதியில் இருந்து சனதா தளம் சார்பில் 9 ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][10] 1990 ஆம் ஆண்டு சனதா தளத்திலிருந்து வெளியேறி சந்திர சேகர் அரசாங்கத்தை அமைத்த 64 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவராக இடம்பெற்றிருந்தார்.[11] நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக சந்திர சேகர் அமைச்சரவையில் நவம்பர் 1990 முதல் சூன் 1991 வரையில் பதவி வகித்தார்.[3]

பதவிகள்

தொகு
  • 1950-1957 தலைவர், மாவட்ட காங்கிரசு கமிட்டி, சுரு.[2]
  • 1957–1967 இராசத்தான் சட்டமன்ற உறுப்பினர்.[5][7]
  • 1957–1966 இராசத்தான் அரசாங்கத்தில் விவசாயம், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, பஞ்சாயத்து, உள்ளாட்சி சுயாட்சி மற்றும் நீர்ப்பாசன துணை அமைச்சர்.[2][5]
  • 1967–1972 இராசத்தான் சட்டமன்ற உறுப்பினர் (3 ஆவது முறை).[2]
  • 1977–1979 உறுப்பினர், 6 ஆவது மக்களவை.[2]
  • 1980–1984 உறுப்பினர், 7 ஆவது மக்களவை (2 ஆவது முறை).[2]
  • 7 ஆவது மக்களவையின் பொதுக் கணக்குக் குழு, மதிப்பீட்டுக் குழு மற்றும் அவை உறுப்பினர்.[2]
  • 1989–1991 உறுப்பினர், 9 ஆவது மக்களவை (3 ஆவது முறை).[2]
  • 1989 நாடாளுமன்றத்தின் வணிக ஆலோசனைக் குழு உறுப்பினர் .[2]
  • 1990 விதிகள் குழு உறுப்பினர், பொது நிறுவனங்களுக்கான குழு, வணிகம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு.[2]

இறப்பு

தொகு

தௌலத் ராம் சரண் செய்ப்பூரில் 2 ஜூலை 2011 ஆம் ஆண்டு சூலை மாதம் 2 ஆம் தேதியன்று இறந்தார் [5][1] இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர்.[7] சுரு மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் தௌலத் தகனம் செய்யப்பட்டார்.[4] இந்தியக் கட்சிகளின் அரசியல்வாதிகள் அனைவரும் இவருக்கு அஞ்சலி செலுத்தினர் மற்றும் முதலமைச்சர் அசோக் கெலாட், சரணின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மாநில அமைச்சரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Former Union Minister Daulatram Saran dead". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/former-union-minister-daulatram-saran-dead/articleshow/9075147.cms?from=mdr. "Former Union Minister Daulatram Saran dead". The Economic Times. Retrieved 2022-01-15.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 "Saran, Shri Daulat Ram, Lok Sabha". Lok Sabha. Archived from the original on 15 ஜனவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. 3.0 3.1 "Chandrashekhar Cabinet" (PDF). Cabinet Secretariat. 21 November 1990. Archived (PDF) from the original on 4 ஜனவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. 4.0 4.1 "Daulat Ram Saran - Jatland Wiki". www.jatland.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 OBITUARY, REFERENCE (4 August 2011). "The Speaker made references to the passing away of Shri Daulat Ram Saran, member, 6" (PDF). Lok Sabha Digital Library. Archived (PDF) from the original on 15 ஜனவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help) பிழை காட்டு: Invalid <ref> tag; name ":4" defined multiple times with different content
  6. "Bharatpedia, Daulat Ram Saran". Bharatpedia.
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 "Daulat Ram Saran passes away". The Hindu. 3 July 2011. https://www.thehindu.com/todays-paper/tp-national/daulat-ram-saran-passes-away/article2155097.ece. 
  8. "Members of 6th Lok Sabha". Lok Sahba.
  9. "Members of 7th Lok Sabha". Lok Sabha.
  10. "Members of 9th Lok Sabha". Lok Sabha.
  11. "Decision of the Speaker under Tenth Schedule of the Constitution Disqualification of Members on Ground of Defection". Lok Sabha Digital Library. 11 January 1991.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தௌலத்_ராம்_சரண்&oldid=3946909" இலிருந்து மீள்விக்கப்பட்டது