த. ஆனந்தகிருஷ்ணன்

(த. அனந்தகிருஷ்ணன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தத்பரானந்தம் ஆனந்தகிருஷ்ணன் (Ananda Krishnan, 1 ஏப்ரல் 1938 – 28 நவம்பர் 2024, A. K. எனவும் அனந்தகிருஷ்ணன் எனவும் அழைக்கப்பட்டவர்) மலேசியத் தொழில்முனைவோர் ஆவார்.[1] இவர் உசாகா தெகாசு நிறுவனத்தின் நிறுவனரும் முன்னாள் தலைவரும் ஆவார்.[2][3]

த. ஆனந்தகிருஷ்ணன்
பிறப்புதத்பரானந்தம் ஆனந்தகிருஷ்ணன்
(1938-04-01)1 ஏப்ரல் 1938
பிரிக்பீல்ட்ஸ், சிலாங்கூர், பிரித்தானிய மலாயா
இறப்பு28 நவம்பர் 2024(2024-11-28) (அகவை 86)
சுவிசு ஆல்ப்சு, சுவிட்சர்லாந்து
குடியுரிமைமலேசியர்
கல்வி
பணிதொழிலதிபர்
பட்டம்
  • நிறுவனர், தலைவர் உசாகா தெகாசு
  • நிறுவனர் ஆசுட்ரோ மலேசியா
  • நிறுவனர் யூ காய் அறக்கட்டளை
பிள்ளைகள்3

இவர் இறக்கும் போது, 5.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்[4] நிகர மதிப்பைக் கொண்டிருந்தார் என்று போர்ப்ஸ் கூறுகிறது, இது இவரை உலகின் 671வது பணக்காரராகவும், மலேசியாவில் 3வது பணக்காரராகவும் ஆக்கியது.[5] கோலாலம்பூரில் இருக்கும் பெட்ரோனாஸ் கோபுரங்கள் எனப்படும் மாபெரும் கட்டடத்தைக் கட்டும் ஆலோசனையை அரசுக்கு வழங்கியவர் எனக் கூறப்படுகிறது.[6] அனந்தகிருஷ்ணன் பொது வெளிப்பாட்டைத் தவிர்த்து வந்திருந்தார்.[7]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

தமிழ் மலேசியரானன ஆனந்தகிருஷ்ணன் 1938 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் உள்ள பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் யாழ்ப்பாண வம்சாவளித் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். கோலாலம்பூர் பிரிக்பீல்ட்சில் உள்ள விவேகானந்தா தமிழ் பள்ளியில் தொடக்கக் கல்வியும், உயர்பள்ளிப் படிப்பை கோலாலம்பூரில் உள்ள விக்டோரியா கல்வியகத்திலும் பயின்றார். பிறகு பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பின் கொழும்புத் திட்டத்தின் கீழ் ஆத்திரேலியா மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் புலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பட்டப்பின் படிப்பை அமெரிக்காவில் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று 1964 இல் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றார்.[8]

அனந்தகிருஷ்ணன் பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர், மனைவி மோம்வஜரோங்சே சுப்ரிந்தா சக்ரபன் தாய்லாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன். ஒரே மகன் வென் அஜான் சிரிபான்யோ ஒரு தேரவாத பௌத்த துறவி. இவர் தனது தாயாரின் குடும்பத்தைப் பார்க்க தனது 18-ஆவது அகவையில் தாய்லாந்து சென்றவர், பௌத்த சமயத்தால் ஈர்க்கப்பட்டு தேரவாத பௌத்தத் துறவியானார்.[9][10]

வணிகம்

தொகு

இவர் மலேசிய மேக்சிஸ் கம்யுநிகேசன் மற்றும் இந்திய ஏர்செல் நிறுவனங்களின் முதன்மை பங்குதாரர்

இறப்பு

தொகு

ஆனந்தகிருஷ்ணன் சுவிட்சர்லாந்தில் ஆல்ப்சில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 2024 நவம்பர் 28 இல் தனது 86-ஆவது அகவையில் காலமானார்.[11][12]

மேற்கோள்கள்

தொகு
  1. "Stocks". www.bloomberg.com. பார்க்கப்பட்ட நாள் 11 November 2018.
  2. "Stocks". www.bloomberg.com. பார்க்கப்பட்ட நாள் 11 November 2018.
  3. "Tycoon Ananda Krishnan, launches Yu Cai Foundation - The Malaysian Reserve". themalaysianreserve.com (in அமெரிக்க ஆங்கிலம்). 31 March 2017. பார்க்கப்பட்ட நாள் 11 November 2018.
  4. "Forbes Profile: Ananda Krishnan" (in en). Forbes. https://web.archive.org/web/20241128095312/https://www.forbes.com/profile/ananda-krishnan/. 
  5. Reporters, F. M. T. (28 November 2024). "Tycoon Ananda Krishnan dies, aged 86". Free Malaysia Today | FMT (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 November 2024.
  6. மலேசிய தொழிலதிபர் அனந்தகிருஷ்ணன் காலமானார், Way2News, 29 நவம்பர் 2024
  7. "Who was Ananda Krishnan?". Sundaytimes. 27 May 2007. Archived from the original on 13 May 2008. பார்க்கப்பட்ட நாள் 26 May 2008.
  8. "Ananda Krishnan". போர்ப்ஸ். Archived from the original on 18 May 2008. பார்க்கப்பட்ட நாள் 26 May 2008.
  9. "The monk who flew in a jet". Business Bhutan. 1 January 2011. Archived from the original on 20 July 2016. பார்க்கப்பட்ட நாள் 25 December 2015.
  10. Chow, Tan Sin (24 April 2012). "Ananda Krishnan makes time for son". The Star. பார்க்கப்பட்ட நாள் 25 December 2015.
  11. Ananda Krishnan Passes Away at 86
  12. டான்ஸ்ரீ அனந்தகிருஷ்ணனின் நல்லுடக்கு இறுதி அஞ்சலி நிகழ்வு தொடங்கியது, திசைகள், 3 திசம்பர் 2024

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._ஆனந்தகிருஷ்ணன்&oldid=4169099" இலிருந்து மீள்விக்கப்பட்டது