த ஆர்ட்டிஸ்ட் (திரைப்படம்)
த ஆர்ட்டிஸ்ட் (The Artist) 2011ஆம் ஆண்டு வெளியான ஓர் பிரெஞ்சு[1] காதல் திரைப்படமாகும். இதனை மிஷேல் ஹசானவிசியஸ் இயக்க, யான் துயார்டன், பெரெனீசு பெஜோ நடித்துள்ளனர். கதைக்களமாக ஒலியில்லா திரைப்படங்களிலிருந்து பேசும் திரைப்படங்கள் வரத் துவங்கியிருந்த 1927 - 1932 காலகட்ட ஆலிவுட் சூழலில் ஒலியில்லாத் திரைப்படங்களில் நடித்திருந்த ஓர் வயதான நடிகருக்கும் வளரும் இளைய நடிகைக்கும் இடையே நிலவும் உறவை மையப்படுத்தி உள்ளது. திரைப்படத்தின் பெரும்பகுதி ஒலியின்றியே எடுக்கப்பட்டுள்ளது; கருப்பு-வெள்ளைத் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.திரை விமரிசகர்களிடமிருந்து பாராட்டுக்களையும் பல விருதுகளையும் பெற்று வருகிறது. முதன்முதலாக திரையிடப்பட்ட 2011 கான் திரைப்பட விழாவில் கதாநாயகன் துயார்டன் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றார்.
த ஆர்ட்டிஸ்ட் | |
---|---|
திரைப்பட வெளியீட்டு சுவரொட்டி | |
இயக்கம் | மிஷேல் ஹசானவிசியஸ் |
தயாரிப்பு | தாமஸ் லேங்க்மான் |
கதை | மிஷேல் ஹசானவிசியஸ் |
இசை | லுடோவிச் போர்ஸ் |
நடிப்பு | யான் துயார்டன் பெரெனீசு பெஜோ யுக்கி |
ஒளிப்பதிவு | கியுலோம் ஷிஃப்மான் |
படத்தொகுப்பு | அன்னி-சோஃபி பியான் மிஷேல் ஹசானவிசியஸ் |
கலையகம் | லா பெடீட் ரீன் ஏஆர்பி செலக்சியோன் |
விநியோகம் | வார்னர் பிரதர்ஸ் (பிரான்சு) த வீன்ஸ்டைன் கம்பனி (அமெரிக்கா) |
வெளியீடு | மே 15, 2011(கான் திரைப்பட விழா) 12 அக்டோபர் 2011 (பிரான்சு) |
ஓட்டம் | 100 நிமிடங்கள் |
நாடு | பிரான்சு |
மொழி | மொழியின்மை ஆங்கில இடைத்தலைப்புகள் |
ஆக்கச்செலவு | $15 மில்லியன் |
மொத்த வருவாய் | $92,879,742 |
இத்திரைப்படம் ஆறு கோல்டன் குளோப்களுக்கு நியமிக்கப்பட்டு (2011 திரைப்படங்களில் மிகக் கூடுதலானது) மூன்றில் விருது பெற்றுள்ளது; இசை அல்லது நகைச்சுவைத் திரைப்பட வகையில் சிறந்த படம், சிறந்த பின்னணி இசை, இசை அல்லது நகைச்சுவைத் திரைப்பட வகையில் சிறந்த நடிகர் (துயார்டன்). சனவரி 2012இல் இந்தத் திரைப்படம் பன்னிரெண்டு பாஃப்டாகளுக்கு நியமிக்கப்பட்டு, திரும்பவும் 2011 திரைப்படங்களில் மிகக் கூடுதலானது,[2] ஏழு விருதுகளை வென்றுள்ளது. இவற்றில் முக்கியமானவை சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (துயார்டன்),சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதை (ஹசானவிசியஸ்) ஆகும். இந்த ஆண்டு பத்து அகாதமி விருதுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளது.[3] 84வது அகாதமி விருது நிகழ்ச்சியில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கினர், சிறந்த நடிகர் உட்ட ஐந்து விருதுகளைப் பெற்றது. பிரான்சில் பத்து சீசர் விருதுகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Festival de Cannes: The Artist". Cannes. பார்க்கப்பட்ட நாள் 24 January 2012.
- ↑ "Silent movie The Artist leads Bafta nominations". BBC News. BBC. பார்க்கப்பட்ட நாள் 17 January 2012.
- ↑ "Martin Scorsese's Hugo leads Oscar charge with 11 nods". BBC News. BBC. பார்க்கப்பட்ட நாள் 24 January 2012.
- ↑ "Kate Winslet to receive honorary Cesar award". BBC News. BBC. பார்க்கப்பட்ட நாள் 28 January 2012.