நசுரீன் அஞ்சும் பாட்டி

நசுரீன் அஞ்சும் பாட்டி (Nasreen Anjum Bhatti) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஓர் இருமொழி கவிஞராவார். பஞ்சாபி மற்றும் உருது மொழிகளில் இவர் கவிதைகள் எழுதினார். 1943 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இவர் வாழ்ந்தார். ஓவியர், வானொலி தயாரிப்பாளர், ஒளிபரப்பாளர், அமைதி, அரசியல் மற்றும் உரிமை ஆர்வலர், ஆராய்ச்சியாளர் என பன்முகங்களுடன் இயங்கினார். சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடிய ஒரு முற்போக்கு கவிஞராக இவர் சிறப்புப் பெற்றார். [1] [2]

நசுரீன் அஞ்சும் பாட்டி
Nasreen Anjum Bhatti
தாய்மொழியில் பெயர்نسرین انجم بھٹی
பிறப்புநசுரீன் அஞ்சும் பாட்டி
1943
இறப்பு2016
தேசியம்பாக்கித்தானியர்
பணிகவிஞர்,வானிலி தயாரிப்பாளர் மற்றும் ஒலிபரப்பாளர்
அறியப்படுவதுஉரிமை ஆர்வலர்,பெண்ணியவாதி,முற்போக்குக் கவிஞர்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில் தொகு

பாக்கித்தான் நாட்டிலுள்ள குவெட்டா நகரத்தில் நசுரீன் பிறந்தார், ஆனால் குழந்தை பருவத்தை சிந்து மாகாணத்தின் இயேக்கபாபாத்தில் கழித்தார். அசாரா பெண்கள் பாரசீக மொழி பேசும் குவெட்டாவில் உள்ள ஒரு பள்ளியில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். வீட்டில் கலை நயம் கொண்ட சூழலில் வளர்ந்தார். தேசிய கலைக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் கலை பாடத்தைப் படித்தார். ஆனால் இப்படிப்பில் பட்டயச் சான்றிதழ் எதுவும் இவர் பெறவில்லை. 1971 ஆம் ஆண்டு பாக்கித்தான் வானொலியில் சேருவதற்கு முன்பு 1970 ஆம் ஆண்டில் லாகூரில் உள்ள ஓரியண்டல் கல்லூரியில் உருதுவில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் வேலை செய்து கொண்டே பஞ்சாபியில் முதுநிலை முடித்தார். [3] [4]

1970 ஆம் ஆண்டுகளில் சகமத் சேபாய், பாகிம் இயோசி, சாகித் மெகமூத் நதீம் மற்றும் கன்வால் முசுடாக் ஆகியோரின் படிப்பு வட்டங்களில் கலந்து கொள்ளத் தொடங்கியபோது, நசுரீன் லாகூரின் இலக்கிய வட்டத்தின் ஒரு பகுதியாக ஆனார். நசும் ஒசைன் சையத்து இவருடைய இலட்சிய எழுத்தாளராக இருந்தார். வாராந்திர பஞ்சாபி கவிதை அமர்வுகளில் அவருடைய இடத்திற்குச் சென்று நசுரீன் கலந்து கொண்டார். தனது ஒன்பது வயதில் இவரும் கவிதை எழுதத் தொடங்கினார், குழந்தைகளின் புகழ்பெற்ற பாக்கித்தான் பத்திரிகையான 'தாலிம்-ஓ-தர்பியாத்' என்ற பத்திரிகையில் இக்கவிதை அச்சிடப்பட்டது. தனது கல்லூரியில் பத்திரிக்கையின் ஆசிரியராக நசுரீன் இருந்தார் உருது மற்றும் ஆங்கிலம், சிந்தி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் கவிதைகளை வழங்கினார். ஆனால் பின்னர் இவர் பஞ்சாபி மற்றும் உருது கவிதைகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்திக் கொண்டார். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு திறமை வேட்டை திட்டத்தின் மூலம் நசுரீன் பாக்கித்தான் வானொலியில் சேர்ந்தார். அங்கு இவர் மாணவர் செயல்பாடுகளை ஏற்பாடு செய்தார். வானொலி இலக்கிய நிகழ்ச்சிகளில் கட்டுரைகள் மற்றும் கவிதைகளைப் படித்தார். [5]

டான் நியூசு என்ற பாக்கித்தான் செய்தி அலைவரிசைக்கு அளித்த பேட்டியில், இலக்கிய மாணவராக, அப்துல்லா உசைன், அனீசு நாகி, இன்டிசார் உசைன், கிசுவர் நகீத் மற்றும் அயிசுல் அக் போன்ற இலக்கிய ஆளுமைகள் தனது வளர்ச்சிக்கு உதவியதாக இவர் கூறினார். முனீர் நியாசி, அமானத் அலிகான், கி.ஏ சிசுட்டி, நசீர் காசுமி, சகீர் காசுமிரி, வசீர் அப்சல் மற்றும் சூஃபி தபசம் போன்றவர்களுடன் பணிபுரிந்தபோது இவர் ஒரு கலைஞராக மாறினார். பாக்கித்தான் வானொலி தயாரிப்பாளர், ஒளிபரப்பாளர் மற்றும் துணை கட்டுப்பாட்டாளராக பணியாற்றினார். சாகிர் அலி அருங்காட்சியகத்தின் இருப்பிட இயக்குனராகவும் பணியாற்றினார். 2011 ஆம் ஆண்டு இவருக்கு பாக்கித்தான் நாட்டின் தம்கா-இ-இம்தியாசு [6] [7] [8] விருது வழங்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டில் நசுரீனுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இவருக்கு லாகூரிலுள்ள சிஎம் எச் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், இவர் கராச்சிக்கு சென்றார், அங்கு பிஎன்எசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நசுரீனுக்கு ஒரு மகன் இருக்கின்றார். அவர் வெளிநாட்டில் வசிக்கின்றார். [9] [10]

பஞ்சாபி இலக்கியம் மற்றும் பெண்ணியம் தொகு

நசுரீன் ஒரு பெண்ணியவாத பஞ்சாபி கவிஞர் மற்றும் உரிமை ஆர்வலர் ஆவார். நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் இரண்டு பஞ்சாபி மொழியிலும் இரண்டு உருது மொழியிலும் எழுதினார் [11] "நீல் கரையான் நீல்கன் (1979), "அதாய் பெர் தாரா" (2009), [12] "பின் பாசு" மற்றும் "தேரா லேயா பேதால்னே தக் என்பவை அந்நூல்களாகும்.

நசுரீன் பாட்டி "எதிர்ப்பு இலக்கியத்தின்" கடைசி ஒருவராகக் கருதப்பட்டார். [13] [14] மரபுவழி ஆணாதிக்கத்தால் உந்தப்பட்ட சமூக-கலாச்சார நெறிமுறைகள் மற்றும் வர்க்க அடிப்படையிலான அரசியல்-பொருளாதார கட்டமைப்பை இவர் தனது கவிதை வெளிப்பாட்டின் மூலம் செய்தார். ஒரு சமூக உணர்வுள்ள கலைஞர், அனைத்து அடிப்படை உரிமைகளிலும் மக்களின் பங்கை சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அமைப்பின் தன்மையை அம்பலப்படுத்தினார். ஒரு பெண்ணியக் கவிஞராக இருந்த இவர், ஆணாதிக்கம், கலாச்சார விழுமியங்கள், சமூக நெறிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் எவ்வாறு பாலினப் பாகுபாட்டை உருவாக்கி பெண்களை ஒரு போகப் பொருளாகக் குறைத்தது என்ற சிக்கலான செயல்முறையை ஆராய்ந்தார். [15] இவரது கவிதை ஆணாதிக்க நடைமுறைகளுக்கும் அரசியல் ஒடுக்குமுறைக்கும் இடையே ஓர் உள்ளார்ந்த இணைப்பை சித்தரிக்கிறது. [16]

மேற்கோள்கள் தொகு

  1. "In memoriam: Nasreen Anjum Bhatti euologised" (in en). The Express Tribune. 10 February 2016. https://tribune.com.pk/story/1044527/in-memoriam-nasreen-anjum-bhatti-euologised. 
  2. "`Wah wah` for poets at PU mushaira" (in en). DAWN.COM. 25 November 2011. https://www.dawn.com/news/675795/wah-wah-for-poets-at-pu-mushaira. 
  3. "Nasreen Anjum Bhatti — an integral name among Urdu and Punjabi poets". Daily Times. 28 December 2019. https://dailytimes.com.pk/528459/nasreen-anjum-bhatti-an-integral-name-among-urdu-and-punjabi-poets/. 
  4. "Past in Perspective". The Nation. 5 August 2019. https://nation.com.pk/06-Aug-2019/past-in-perspective. 
  5. "Hurdles of translation | Literati | thenews.com.pk". www.thenews.com.pk. https://www.thenews.com.pk/tns/detail/562557-hurdles-translation. 
  6. Sadhu, Naeem (19 October 2014). "A poet with distinct accent" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1138906/newspaper/column. 
  7. Report, Dawn (27 January 2016). "Punjabi poet Nasreen Anjum Bhatti is no more" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1235678. 
  8. "One in a thousand years" (in en). DAWN.COM. 26 May 2002. https://www.dawn.com/news/37528/one-in-a-thousand-years. 
  9. "Rebel Punjabi poet Nasreen Anjum Bhatti died after a fight with cancer" (in en). Daily Pakistan Global. 26 January 2016. https://en.dailypakistan.com.pk/26-Jan-2016/rebel-punjabi-poet-nasreen-anjum-bhatti-died-after-a-fight-with-cancer. 
  10. "Nasreen Anjum Bhatti: classic case of forsaken writers" (in en). DAWN.COM. 2 June 2015. https://www.dawn.com/news/1185686. 
  11. "Nasreen Anjum Bhatti". Folk Punjab.
  12. "Punjabi Poetry - Nasreen Anjum Bhatti". apnaorg.com.
  13. "LAHORE LITERARY FESTIVAL: Resistance and Punjabi poetry" (in en). DAWN.COM. 2 March 2014. https://www.dawn.com/news/1090307. 
  14. "Punjabi finds its voice at LLF" (in en). DAWN.COM. 24 February 2014. https://www.dawn.com/news/1089082. 
  15. "Punjab Notes: You can hear her singing in the dark" (in en). DAWN.COM. 5 February 2016. https://www.dawn.com/news/1237562/punjab-notes-you-can-hear-her-singing-in-the-dark. 
  16. "PUNJAB NOTES: Nasreen Anjum Bhatti: an inimitable poetic voice" (in en). DAWN.COM. 5 June 2015. https://www.dawn.com/news/1186256. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=நசுரீன்_அஞ்சும்_பாட்டி&oldid=3275627" இலிருந்து மீள்விக்கப்பட்டது