நஞ்சை ஊத்துக்குளி கால்வாய்

நஞ்சை ஊத்துக்குளி கால்வாய் (Nanjai Uthukuli Canal) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு நகரின் தெற்குப் பகுதியில் ஓடும் ஒரு நீர்ப்பாசனக் கால்வாய் ஆகும். இந்தக் கால்வாய் சூரம்பட்டிக்கு அருகிலுள்ள பெரும்பள்ளம் அணைக்கட்டிலிருந்து இதன் நீர் ஆதாரத்தைப் பெறுகிறது.

இந்தக் கால்வாய் சுமார் 2,500 ஏக்கர் (1,000 ஹெக்டேர்) விவசாய நிலத்திற்கு இதன் 15 km (9.3 mi) கிமீ (9.3 மைல்) பயணத்தின் மூலம் நீர்ப்பாசனம் செய்கிறது. இதன் பயணப் பாதையில் காசிபாளையம், சாசுதிரி நகர், மூலப்பாளையம், நொச்சிக்காட்டுவலசு, கருக்கம்பாளையம், சுப்பராயவலசு, லக்காபுரம், 46 புதூர், முத்துகவுண்டன்பாளையம், சின்னியம்பாளையம் மற்றும் நஞ்சை ஊத்துக்குளி ஆகிய பகுதிகள் உள்ளன. இந்தக் கால்வாய் சவதிப்பாளையம் புதூரின் வடக்கே உள்ள ஈரநிலத்திற்கு அருகே இதன் பயணத்தை நிறுத்துகிறது.[1]

நகரமயமாக்கலின் தாக்கம்

தொகு

ஈரோட்டில் அதிக அளவில் நகரமயமாக்கல் இருப்பதால், சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளிலிருந்து திடக் கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றப்படுவதால் இந்தக் கால்வாய் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. நெகிழிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவது இக்கால்வாய் எதிர்கொள்ளும் முக்கிய அச்சுறுத்தலாகும். இதனால் ஆண்டின் பெரும்பகுதி வறண்டு போகிறது. ஈரோடு மாநகராட்சியின் பிற உள்ளாட்சி அமைப்புகளும் அவ்வப்போது தூய்மைப்படுத்தும் நடைமுறையை மேற்கொண்டு, நீர் வழித்தடங்களை மாசுபாட்டிலிருந்து தூய்மைப்படுத்துகின்றன.[2]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு