மூலப்பாளையம்
மூலப்பாளையம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
மூலப்பாளையம்
Moolapalayam மூலப்பாளையம் | |
---|---|
ஆள்கூறுகள்: 11°27′08″N 77°40′21″E / 11.452100°N 77.672600°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு மாவட்டம் |
ஏற்றம் | 194 m (636 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 638 002 |
தொலைபேசி குறியீடு | +91424xxxxxxx |
வாகனப் பதிவு | TN-56 yy xxxx |
அருகிலுள்ள ஊர்கள் | ஈரோடு, சோலார், கொல்லம்பாளையம், முள்ளாம்பரப்பு, கஸ்பாபேட்டை மற்றும் அவல்பூந்துறை |
மாநகராட்சி | ஈரோடு மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | கிருஷ்ணன் உண்ணி |
மக்களவைத் தொகுதி | ஈரோடு மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | அ. கணேசமூர்த்தி |
சட்டமன்ற உறுப்பினர் | காலியிடம் |
இணையதளம் | https://erode.nic.in |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 194 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மூலப்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°27′08″N 77°40′21″E / 11.452100°N 77.672600°E (அதாவது, 11°27'07.6"N,) ஆகும். ஈரோடு, சோலார், கொல்லம்பாளையம், முள்ளாம்பரப்பு, கஸ்பாபேட்டை மற்றும் அவல்பூந்துறை ஆகியவை மூலப்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். மூலப்பாளையம் பகுதியில் நெரிசல் மிகுந்த மூன்று சாலை சந்திப்பு ஒன்று உள்ளது. இச்சந்திப்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த சாலை சமிக்ஞை விளக்குகள் சரிவர வேலை செய்யாததால், புதியன நிறுவ மக்கள் எதிர்பார்க்கின்றனர்.[2]
மூலப்பாளையம் பகுதியிலுள்ள பட்டத்தரசியம்மன் கோயில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[3]
மூலப்பாளையம் பகுதியானது, ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈ.வெ.ரா. காலமாகி விட்டதால், இத்தொகுதிக்கு 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Man̲n̲ārman̲n̲an̲ (1993). Pāvēntar paṭaippup pāṅku. Pūṅkoṭi Veḷiyīṭu.
- ↑ 2022-10-03. "மூலப்பாளையம் 3 ரோடு பிரிவில் சிக்னல் அமைக்க எதிர்பார்ப்பு - Dinamalar Tamil News". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2023-02-05.
{{cite web}}
:|author=
has numeric name (help) - ↑ "Arulmigu Pattatharasiamman Temple, Moolapalayam - 638104, Erode District [TM012092].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-05.