அவல்பூந்துறை
அவல்பூந்துறை, இந்தியாவின் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி ஆகும்.
அவல்பூந்துறை (ஆங்கிலம்:Avalpoondurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் ஈரோடு - காங்கேயம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. வேளாண்மையே இவ்வூரின் முக்கியமான தொழிலாகும்.
அவல்பூந்துறை | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | 11°13′56″N 77°43′06″E / 11.232200°N 77.718300°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
வட்டம் | மொடக்குறிச்சி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 26.26 சதுர கிலோமீட்டர்கள் (10.14 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/avalpoondurai |
அமைவிடம்
தொகுஅவல்பூந்துறை பேரூராட்சிக்கு வடக்கில் 15 கி.மீ. தொலைவில் ஈரோடு; கிழக்கில் மொடக்குறிச்சி 15 கி.மீ.; மேற்கில் வெள்ளோடு 8 கி.மீ.; தெற்கில் அரச்சலூர் 8 கி.மீ. தொலைவில் உள்ளன.
அருகிலுள்ள சிற்றூர்கள்
தொகு- கஸ்பா பேட்டை.
- முள்ளாம்பரப்பு.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு26.26 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 54 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,552 வீடுகளும், 11,789 மக்கள்தொகையும் கொண்டது. [5]
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ அவல்பூந்துறை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Avalpoondurai Population Census 2011