நடுவில் மடம்
நடுவில் மடம் (Naduvil Madhom) என்பது அத்வைதம் அல்லது இருமையற்ற தன்மையை பரப்புகின்ற பண்டைய தென்னிந்திய மடங்களில் ஒன்றாகும். இது கேரளாவின் திரிச்சூரில் அமைந்துள்ளது. மடத்தின் வரலாற்றை கி.பி 9 ஆம் நூற்றாண்டு வரை காணலாம். எனவே ஆதி சங்கரரின் நான்கு சீடர்களும் நான்கு மடங்களை நிறுவினர். மந்தன மிஸ்ரர் நடுவில் மடம், பத்மபாதர் தெற்கு மடம், அஸ்தாமலகர் இடையில் மடம், தோடகர் வடக்கே மடம் ஆகியவற்றை நிறுவினர். [1] நடுவில் மடத்தின் முதல் தலைவராக வில்வமங்கலத்து சுவாமியாரை சுரேசுவரச்சார்யா என்பவர் நியமித்தார்.
வில்வமங்கலத்து சுவாமியார் அல்லது திவாகர முனி
தொகுவில்வமங்கலத்து சுவாமியார், வில்வமங்கலத்து நீலகண்ட சர்மா என்பவருக்கும் அவரது மனைவிக்கும் பிறந்தார். பெற்றோர் தங்கள் மகனுக்கு திவாகர சர்மா என்று பெயரிட்டனர். இவரது குழந்தை பருவத்திலிருந்தே இவர் கிருட்டிணரின் சிறந்த பக்தராக இருந்தார். இவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் விரைவில் மனைவியை இழந்தார். இவரது தாயார் இறந்த பிறகு அவர் சுரேசுவரரிடமிருந்து சன்யாசத்தை ஏற்றுக்கொண்டார். இவ்வாறு முப்பத்திரண்டு வயதில் இவர் வில்வமங்கலத்து சுவாமியார் என்று அறியப்பட்டார். இவருடைய சீடர்களில் பெரும்பாலோர் துளு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால் இவரது தலைமை சீடரான குளுக்கல்லூர் சுவாமியார் ஒரு நம்பூதிரியாவார்.
மூத்த சுவாமியார் கேரளா முழுவதும் பயணம் செய்து அனைத்து பசந்தர்களையும் (வேதங்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களை) விவாதங்களில் தோற்கடித்தார்.
எட்டரை யோகமும் நடுவில் மடமும்
தொகுபாரம்பரியமாக, திருவனந்தபுரம் பத்மநாபசாமிக்கு புஷ்பாஞ்சலி செய்ய நடுவில் மடம், முஞ்சிற மடம் சுவாமியர்களுக்கு மட்டுமே உரிமை இருந்தது. இன்றும் பத்மநாப சுவாமி கோயிலின் சக்திவாய்ந்த நிர்வாகக் குழுவான எட்டரை யோகம் அதன் அமர்வுகளை புஷ்பாஞ்சலி சுவாமியர் முன்னிலையில் மட்டுமே நடத்துகிறது. திருவிதாங்கூர் மன்னர்களுக்கு அரச குடும்பத்திற்கு ஒரு புதிய உறுப்பினரைத் தத்தெடுக்க யோகத்தின் அனுமதி தேவைப்பட்டது. [2] கடந்த காலத்தில், திருவிதாங்கூர் குடிமக்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால், அவர்கள் பத்மநாபசுவாமி கோயிலின் மேற்கு நுழைவாயிலில் உத்திரக்குரா அல்லது ருதிரக்குரா (சிவப்புக் கொடி) எழுப்பலாம் . மேற்கு நுழைவாயிலின் வழியாக நுழையும் சுவாமியார் இதைக் கவனித்து, குறைகளைத் தீர்ப்பதற்கான உத்தரவுகளை அனுப்புவார். மதத்தைப் பொருட்படுத்தாத மக்கள் இந்த முறையிலிருந்து பயனடைந்துள்ளனர். கி.பி 1592 இல், ராஜாக்கமங்கலத்தின் கிறிஸ்தவ மீனவர்கள் இந்துக்களால் கன்னியாகுமரிக்கு விரட்டப்பட்டனர். ஒரு போர்த்துகீசிய பாதிரியார் மீனவர்களின் தலைவராக இருந்தார். கோயிலின் மேற்கு நுழைவாயிலில் சிவப்புக் கொடியை உயர்த்தினார். எட்டரை யோகத்தின் உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்து கிறிஸ்தவ மீனவர்களை ராஜாக்கமங்கலத்திற்கு மீண்டும் அழைத்து வந்தனர்.
மரவஞ்சேரி சுவாமியார்
தொகுமரவஞ்சேரி தெக்கேடத்து நீலகண்ட பாரதி என்பவர் நடுவில் மடத்தின் தற்போதைய மூத்த சுவாமியார் ஆவார். இவர் 1935 செப்டம்பர் 14, அன்று மரவஞ்சேரி தெக்கேடத்து சித்ரன் நம்பூதிரிப்பாடு, பண்டம்பறம்பத்து மனையைச் சேர்ந்த நீலி அந்தர்ஜனம் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். குடும்ப வாழ்க்கையை நடத்திய பின்னர், இவர் 2001 சூலை 1, அன்று சன்யாசத்தை ஏற்றுக்கொண்டார்.
பத்மநாப சுவாமி கோயிலின் இரகசிய அறை திறக்கப்படுவதை கடுமையாக எதிர்த்ததற்காக மரவஞ்சேரி சுவாமியார் செய்திகளில் இருந்தார். [3]