நட்வர்லால் ஹரிலால் பகவதி

நட்வர்லால் அரிலால் பகவதி (Natwarlal Harilal Bhagwati)(7 ஆகத்து 1894 – 7 சனவரி 1970) என்பவர் இந்திய நீதிபதியும் கல்வியாளரும் ஆவார். இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதியரசராக 8 செப்டம்பர் 1952 முதல் 6 சூன் 1959 வரையும், வாரணாசி, பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 16 ஏப்ரல் 1960 முதல் 15 ஏப்ரல்1966 வரையும் பணியாற்றியுள்ளார்.[4]முன்னதாக பகவதி பம்பாய் பல்கலைகழகத்தின் துணைவேந்தராக 1949 முதல் 1951 வரை பணியாற்றினார்.[5][6]இவரது மகன்களில் ஒருவரான பி. என். பகவதி 17வது இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசராகவும், மூத்த மகன் பி. என். ஜெகதீசு பகவதி பொருளாதார அறிஞராகவும், இளைய மகன் பி. என். சனத் பகவதி இந்திய நரம்பியல் சங்கத்தின் தலைவராகவும் இருந்தனர்.

நீதியரசர்
நட்வர்லால் ஹரிலால் பகவதி
10வது [[துணை வேந்தர், பனாரசு இந்து பல்கலைக்கழகம்]]
பதவியில்
16 ஏப்ரல் 1960 – 15 ஏப்ரல்1966
நியமிப்புஇந்தியக் குடியரசுத் தலைவர்
முன்னையவர்வேணி சங்கர் ஜா
பின்னவர்திரிகுண சென்
நீதியரசர், இந்திய உச்ச நீதிமன்றம்
பதவியில்
8 செப்டம்பர் 1952 – 6 சூன் 1959
நீதியரசர், பம்பாய் உயர் நீதிமன்றம்
பதவியில்
ஆகஸ்டு 1944 – 7 செப்டம்பர் 1952
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1894-08-07)7 ஆகத்து 1894
இறப்பு7 சனவரி 1970(1970-01-07) (அகவை 75) [1][2]
அகமதாபாத், குஜராத், இந்தியா
துணைவர்சரசுவதி[3]
பிள்ளைகள்பி. என். பகவதி உள்ளிட்ட 7 பேர்
முன்னாள் கல்லூரிஎல்பின்ஸ்டோன் கல்லூரி, பரோடா கல்லூரி

மேற்கோள்கள்

தொகு
  1. "Obituary". The Indian Express: p. 4. 9 January 1970. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19700109&printsec=frontpage&hl=en. பார்த்த நாள்: 6 February 2018. 
  2. Gadbois, Jr, George H. (2011). Judges of the Supreme Court of India: 1950–1989. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199088386. பார்க்கப்பட்ட நாள் 6 February 2018.
  3. Reed, Stanley (1950). The Indian And Pakistan Year Book And Who's Who 1950. The Times Group. p. 647. பார்க்கப்பட்ட நாள் 19 February 2018.
  4. Gadbois Jr., George H. (1968). "Indian Supreme Court Judges: A Portrait". Law & Society Review 3 (2/3): 317–336. doi:10.2307/3053006. 
  5. "Former Judges: Hon'ble Mr. Justice Natwarlal Harilal Bhagwati". Supreme Court of India. 2014. பார்க்கப்பட்ட நாள் 2017-12-10.
  6. "Vice Chancellors". Banaras Hindu University. 2013. பார்க்கப்பட்ட நாள் 2017-12-10.
முன்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகம்-துணைவேந்தர்
16 ஏப்ரல் 1960 - 15 ஏப்ரல் 1966
பின்னர்