திரிகுணா சென்
திரிகுணா சென் (Triguna Sen; 24 திசம்பர் 1905-11 சனவரி 1998) இந்திய அரசின் மத்தியக் கல்வி அமைச்சராக இருந்தவரும் கல்வியாளரும் ஆவார். 1965-இல் இந்திய அரசு சென்னுக்குபத்ம பூசண் விருது வழங்கியது.[1] சென் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகவும் (1956 முதல் 1966 வரை), பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் 11வது துணைவேந்தராகவும் இருந்தார். 1967 முதல் 1974 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் உறுப்பினராகவும் இருந்தார்.[2] விஜய்கர் ஜோதிசு ரே கல்லூரியில் (ஜாதவ்பூர்) விருந்தினர் விரிவுரையாளராக நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
திரிகுணா குமார் சென் | |
---|---|
ত্রিগুণা কুমার সেন | |
11வது துணைவேந்தர்-பனாரசு இந்து பல்கலைக்கழகம்]] | |
பதவியில் 9 அக்டோபர் 1966 – 15 மார்ச்சு 1967 | |
நியமிப்பு | சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் |
முன்னையவர் | நட்வர்லால் ஹரிலால் பகவதி |
பின்னவர் | ஏ. சி. ஜோசி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 திசம்பர் 1905 சாகிர்கஞ்ச், அசாம், இந்தியா |
இறப்பு | 11 சனவரி 1998 (வயது 92) கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
பெற்றோர் | கோலக் சந்திர சென் (தந்தை), சுசீலா சுந்தரி தேப் (தாய்) |
முன்னாள் கல்லூரி | ஜாதப்பூர் பல்கலைக்கழகம், மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம்,விஜய்கர் ஜோதிசு ரே கல்லூரி |
வேலை | கல்வியாளர், பேராசிரியர், அரசியல்வாதி, செயற்பாட்டாளர் |
விருதுகள் | பத்ம பூசண் (1965) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ "List of members of Rajya Sabha elected from Tripura 1952–2010". Tripura Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 7 November 2018.