நதியா சர்மீன்

வங்கதேச பத்திரிக்கையாளர்

நதியா சர்மீன் (Nadia Sharmeen) வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒரு குற்ற அறிக்கை அளிக்கும் பின்னணியில் பணிபுரியும் பத்திரிக்கையாளர் ஆவார். இவர் 2015இல் அமெரிக்க வெளியுறவுத் துறை வழங்கிய சர்வதேச வீரதீர பெண்கள் விருதை வென்றார்.[1]

நதியா சர்மீன்
2015இல் ஒரு நிகழ்ச்சியில் நதியா சர்மீன்
பணிபத்திரிக்கையாளர்
பணியகம்ஏக்கத்தார் தொலைக்காட்சி
விருதுகள்சர்வதேச வீரதீர பெண்கள் விருது, 2015

சுயசரிதை தொகு

 
சர்மீன் 2015 இல் சர்வதேச வீரதீர பெண்கள் விருதைப் பெறுகிறார்.

தான் நடுநிலைப் பள்ளியில் படித்த காலத்திலிருந்தே, நதியா ஒரு பத்திரிகையாளராக மாற விரும்பினார். 2009இல், இவர் வங்காளதேசத்தில் வெளியாகும் ஒரு பத்திரிக்கையில் சேர்ந்தார். மேலும் அதில் ஒரு குற்ற அறிக்கை அளிக்கும் நிருபனார்.

தாக்குதல் தொகு

2013ஆம் ஆண்டில் இவர், தான் பணிபுரியும் ஏகுஷே தொலைக்காட்சிக்காக ஒரு இசுலாமியப் பேரணியை ஒளிபரப்பிக்கொண்டிருந்தார். அப்போது கிபாசத்-இ-இஸ்லாமிய ஆர்வலர்களால் இவர் தாக்கப்பட்டார். ஒரே இடத்தில் ஆண்களும் பெண்களும் வெளிப்படையாக இணைவது, நாத்திகர்களைத் தண்டிப்பது, பெண்கள் தாவணி அணிவது மற்றும் பிற மத அடிப்படையிலான கட்டளைகளைக் கட்டுப்படுத்தக் கோரி இந்தப் பேரணி நடத்தப்பட்டது.[2] கிபாசத் ஆர்வலர்களின் 13 அம்ச கோரிக்கை பட்டியல் குறிப்பாக பாலின சமத்துவத்தை உருவாக்க வடிவமைக்கப்பட்ட தற்போதைய மகளிர் கொள்கையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்பதாகும்.[3] கிபாசத் ஆர்வலர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், டாக்கா மற்றும் சிட்டகொங்கில் பல இடங்களில் பத்திரிகையாளர்களும், குப்பை சேகரிக்கும் பென்களும் தாக்கப்பட்டனர். மேலும், சித்திரவதை செய்யப்பட்டனர்.[4][2] [5] சர்மீனின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் முக்காடு அணியாத பெண்களை குறிவைத்தனர். "தான் ஒரு பெண் என்பதால்தான்" தாக்கப்பட்டதாக நதியா நம்பினார்.[6]

கிபாசத் ஆர்வலர்களான 50-60 ஆண்கள் இவரைத் துரத்திச் சென்று தண்ணீர் பாட்டில்களாலும், செங்கல் துண்டுகளை வீசியும் தாக்கினர். இவர் கீஅஏ விழுந்தபோது, மற்றவர்கள் இவரை அடித்து துன்புருத்தினர். பல ஆண் நிருபர்களும், புகைப்படக் கலைஞர்களும் இவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் அந்த கும்பலின் இலக்குகளாக மாறினர்.

அவசர சிகிச்சைக்காக சர்மீன் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். [7] சில நாட்களுக்குள், தானாவில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சூலை, 2013 வரை வங்காளதேசத்திற்கான மனித உரிமைகள் ஆணையம் சர்மீனுக்கான நிவாரணத்திற்காக வங்காளதேச உச்சநீதிமன்றத்தில் மனு செய்யும் வரை கைதுகள் எதுவும் நடக்கவில்லை. குற்றவாளிகளை கைது செய்து ஆஜர் படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு இட்டது. மேலும் இவரது மருத்துவ பராமரிப்புக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென தீர்ப்பளித்தது. நாட்டிற்குள் அல்லது வெளிநாட்டில் [8] நிகழ்வு நடந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, எந்த அடையாளங்களும் கைதுகளும் ஏற்படவில்லை.

தாக்கம் தொகு

இவர் குணமடைந்த பிறகு, வேறு ஒரு செய்தி நிறுவனத்தில் சேர்ந்தார். இவரது தாக்குதலானது பெண்கள் உரிமை ஆர்வலர்களின் தீர்மானத்தை வலுப்படுத்தியது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து பல்வேறு பத்திரிகை சங்கங்கள், வங்காளதேச தேசிய பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கம் போன்ற பிற அமைப்புகளின் ஆதரவுடன் பல பேரணிகளை நடத்தப்பட்டது.[9] 2014 ஆம் ஆண்டில், 2014ஆம் ஆண்டில், இவரது கதை உலகளாவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நூறு கோடியினர் கிளர்ச்சி ஆர்வலர்களால் பயன்படுத்தப்பட்டது.வங்காளதேச அரசாங்கத்தை EDAW பாதுகாப்புகளை செயல்படுத்த வலியுறுத்தியது.[10]

மேற்கோள்கள் தொகு

  1. "Biographies of 2015 Award Winners". U.S. State Department. March 2015. https://www.state.gov/s/gwi/programs/iwoc/2015/bio/. 
  2. 2.0 2.1 "Women denied entry to Hifazat rally area". bdnews24.com. 6 April 2013. http://bdnews24.com/bangladesh/2013/04/06/women-denied-entry-to-hifazat-rally-area. 
  3. "ASK strongly protests and criticizes the attack on female journalist by Hefazat-a-Islam". Ain O Salish Kendra (ASK). Ain O Salish Kendra (ASK). 9 April 2013. பார்க்கப்பட்ட நாள் 13 March 2015.
  4. "Journalist Nadia Sharmeen, Shahbagh and Islamisation". GroundReport. 2 August 2013. http://groundreport.com/how-is-journalist-nadia-sharmin/. 
  5. "Islamists physically attacked and abused women, snatched their phones, looted their money". No Country For Women. 7 April 2013. http://freethoughtblogs.com/taslima/2013/04/07/islamists-physically-attacked-and-abused-women-snatched-their-phones-looted-their-money/. 
  6. "Bangladesh: Action needed now to stop gender-based violence against journalists". Article19. 10 April 2013. http://www.article19.org/resources.php/resource/3690/en/bangladesh:-action-needed-now-to-stop-gender-based-violence-against-journalists. 
  7. "60 sued for attacking ETV journo Nadia". Dhaka Tribune. 12 April 2013 இம் மூலத்தில் இருந்து 5 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305041334/http://www.dhakatribune.com/crime/2013/apr/12/60-sued-attacking-etv-journo-nadia. 
  8. "HC orders arrest of Nadia Sharmin’s attackers". Dhaka Tribune. 29 July 2013 இம் மூலத்தில் இருந்து 5 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305131558/http://www.dhakatribune.com/law-amp-rights/2013/jul/29/hc-orders-arrest-nadia-sharmin%E2%80%99s. 
  9. "Assault on female journo incites outrage in B'desh". The Daily Star. 8 April 2013. http://www.asianewsnet.net/Assault-on-female-journo-incites-outrage-in-Bdesh-45152.html. 
  10. "End to violence against women demanded". JournalBD. 15 February 2014 இம் மூலத்தில் இருந்து 14 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140314000605/http://journalbd.com/8623. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நதியா_சர்மீன்&oldid=3284723" இலிருந்து மீள்விக்கப்பட்டது