நந்தன் லோகநாதன்

நந்தன் லோகநாதன் என்பவர் தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வந்தாள் ஸ்ரீதேவி (2018-2019) என்ற தொடரிலும் சித்திரம் பேசுதடி 2 (2019) என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

நந்தன் லோகநாதன்
பிறப்புசெப்டம்பர் 14, 1991 (1991-09-14) (அகவை 29)
சென்னை, தமிழ்நாடு
பணிநடிகர், தொலைக்காட்சி நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2017- தற்போது வரை

2018 ஆம் ஆண்டில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற இணைய நாளிதழ் வெளியிட்ட தமிழ் தொலைக்காட்சியில் சிறந்த விரும்பத்தக்க 15 நடிகர்கள் பட்டியலில் நந்தன் 14வது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[1]

ஆரம்பகால வாழ்க்கைதொகு

நந்தன் லோகநாதன் செப்டம்பர் 14, 1991 இல் தமிழ்நாட்டில் சென்னையில் லோகநாதன் மற்றும் கனகா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். சென்னையில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் இடைநிலைக் கல்வி பயிற்று இலயோலாக் கல்லூரி, சென்னையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் பிப்ரவரி 14, 2018 அன்று அனிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

திரைப்பட வாழ்க்கைதொகு

இவர் 2017ஆம் ஆண்டில் சாருஜன் இயக்கிய லட்சுமி என்ற குறும் திரைபபடத்தில் நடிகை லட்சுமி பிரியாவுடன் ஜோடியாக நடித்தார். இந்த குறும்படம் பலரால் விமர்சிக்கப்பட்டு வெற்றியும் அடைத்தது. அதை தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வந்தாள் ஸ்ரீதேவி என்ற தொடரில் சித்தார்த் என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்தார்.[2] இவர் கட்டம்[3] என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது.

2019ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி 2 என்ற திரைப்படத்தில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[4] அதை தொடர்ந்து நடிகை ராதிகா சரத்குமார் நடித்து மற்றும் தயாரிக்கும் தொடரான சித்தி (பருவம் 2) தொடரிலும் முக்கியாகதாபாத்திரத்தில் நடிக்கின்றார் இந்த தொடர் 2020ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

தொடர்கள்தொகு

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2018-2019 வந்தாள் ஸ்ரீதேவி சித்தார்த் கலர்ஸ் தமிழ்
2020-ஒளிபரப்பில் சித்தி (பருவம் 2) சன் தொலைக்காட்சி

திரைப்படம்தொகு

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
2017 லட்சுமி குறும்படம்
2019 சித்திரம் பேசுதடி 2 கதிர்
2019 கட்டம் தயாரிப்பில்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தன்_லோகநாதன்&oldid=3146511" இருந்து மீள்விக்கப்பட்டது