சித்தி (பருவம் 2)

சித்தி (பருவம் 2) அல்லது சாரதாவின் புதிய பயணம் என்பது 27 சனவரி 2020 ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஆகும். இது 1999 முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான சித்தி என்ற தொடரின் இரண்டாம் பாகம் ஆகும்.[1]

சித்தி - பருவம் 2
வகை குடும்பம்
நாடகம்
இயக்கம் சுந்தர் கே. விஜயன்
நடிப்பு
நாடு இந்தியா
மொழி தமிழ்
பருவங்கள் 1
தயாரிப்பு
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
சன் என்டர்டெயின்மெண்ட்
ராடான் மீடியாவொர்க்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசை சன் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 27 சனவரி 2020 (2020-01-27)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

இந்த தொடரில் முதல் பாகத்தில் நடித்த ராதிகா சரத்குமார் கதாநாயகியாக நடிக்க,[2] பாக்யராஜ், ரூபினி, பொன்வண்ணன், நந்தன் லோகநாதன், அஸ்வின் குமார், பிரீத்தி சர்மா, டேனியல் பாலாஜி போன்ற பலர் முன்னணி கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள். சுந்தர் கே. விஜயன் என்பவர் இந் தொடரை இயக்க, ராதிகாவின் ராடான் மீடியாவொர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தொடரின் முன்னோட்ட காட்சியை பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கியுள்ளார்.

நடிகர்கள்தொகு

தயாரிப்புதொகு

சின்னத்திரையில் 20 ஆண்டுகளாக 9:30 மணி நேரத்தில் ராதிகாவின் தொடர்களான சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி மற்றும் சந்திரகுமாரி போன்ற தொடர்கள் ஒளிபரப்பாகி வந்த தருணத்தில் கடைசியாக சந்திரகுமாரி என்ற தொடரில் நடித்த ராதிகா அந்த தொடர் சரியாக வராத காரணத்தாலும் சன் தொலைக்காட்சி அந்த தொடரை மாலை நேரத்தில் மாற்றியதாலும் தொடரிலிருந்து விளக்கினார். இவருக்கு பதிலாக நடிகை விஜி சந்திரசேகர் நடித்தார்.[3] இவரின் 9:30 மணி நேரத்தை நடிகை குஷ்பூ கைப்பற்றி கொண்டார். சில மாதங்கள் ஓய்வுக்கு பிறகு இவர் தனது வெற்றி தொடரான சித்தி தொடரின் இரண்டாம் பாகத்தை தயாரித்து நடிக்க முடிவெடுத்து அதை பற்றிய செய்திகளை வெளியிட்டார்.[4]

இந்த தொடரின் முன்னோட்ட காட்சிகளை இயக்குனர் சமுத்திரக்கனி இயக்க, தொடரை இயக்குனர் சுந்தர் கே. விஜயன் என்பவர் இயக்கியுள்ளார்.[5]இவர் அலைகள், லட்சுமி, யாழினி போன்ற தொடர்களை இயக்கியுள்ளார்.

நடிகர்களின் தேர்வுதொகு

முதல் பாகத்தில் நடித்த ராதிகா இந்த தொடரிலும் சாரதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாக நடிகர் சிவகுமார் நடித்த ராமசந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பொன்வண்ணன் நடிக்கின்றார்.[6] இவர் நடிக்கும் முதல் தமிழ் தொடர் இதுவாகும். சுபாலேகா சுதாகர் நடித்த கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் நடிக்க இவருக்கு ஜோடியாக பிரபாவதி கதாபாத்திரத்தில் முன்னாள் நடிகை ரூபினி என்பவர் நடிக்கின்றார். இவர் 14 வருடங்களுக்கு பிறகு முதல் முதலாக தொலைக்காட்சி தொடரில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணனின் மகன்களாக தாமரை செல்லமே போன்ற தொடர்களின் நடித்த மற்றும் வம்சம் தொடர் புகழ் சக்தி சரவணன் நடிக்கின்றார். இவர்களின் சகோதரியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் திருமணம் தொடரில் நடித்த பிரீத்தி சர்மா[7] என்பவர் நடிக்கின்றார். இவர்களுடன் வந்தாள் ஸ்ரீதேவி தொடரில் நடித்த நந்தன் லோகநாதன், நிகிலா ராவ், மகாலட்சுமி, சில்பா, நேகா போன்ற பலர் நடிக்கிறார்கள். முதல் பாகத்தில் நடித்த டேனியல் பாலாஜி இரண்டாம் பக்கத்திலும் நடிக்கின்றார்.[8]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை இரவு 9 மணி தொடர்கள்
Previous program சித்தி (பருவம் 2) Next program
ராசாத்தி -
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தி_(பருவம்_2)&oldid=2896559" இருந்து மீள்விக்கப்பட்டது