பூவே உனக்காக (தொலைக்காட்சித் தொடர்)

பூவே உனக்காக என்பது சன் தொலைக்காட்சியில் 10 ஆகஸ்ட் 2020 முதல் 18 சூன் 2022 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான காதல் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் ராதிகா பிரீத்தி, வர்ஷினி அர்சா மற்றும் முகமது அஸீம் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குனர் தங்கபாண்டியன் என்பவர் இயக்கியுள்ளார்.[1] இத்தொடர் 18 சூன் 2022 அன்று 572 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

பூவே உனக்காக
வகைகாதல்
குடும்பம்
நாடகத் தொடர்
உருவாக்கம்மைண்ட்செட் மீடியா பிரைவேட் லிமிடெட்
எழுத்துமுத்துச்செல்வன்
இயக்கம்ராஜீவ் கே. பிரசாந்த் (1-47)
தங்கபாண்டியன் (48-572)
நடிப்புவர்ஷினி அர்சா
முகமது அஸீம்
முகப்பு இசைபா. விஜய்
முகப்பிசைபூவே உனக்காக
பாடியவர்கள்
கார்த்திக்
பிரியா ஹிமேஷ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்572
தயாரிப்பு
ஒளிப்பதிவுராம் சிங்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சன் என்டர்டெயின்மெண்ட்
மைண்ட்செட் மீடியா பிரைவேட் லிமிடெட்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்10 ஆகத்து 2020 (2020-08-10) –
18 சூன் 2022 (2022-06-18)

கதை சுருக்கம் தொகு

பூவரசி (ராதிகா பிரீத்தி) மற்றும் கீர்த்தி (ஜோவிதா லிவிங்ஸ்டன் ஜோன்ஸ்) இருவரும் சிறந்த நண்பர்கள். மேலும் இருவரும் நண்பர்களாக எப்போதும் நிலைத்திருப்பார்கள் என்று நம்புகிறார்கள். பூவரசி தனது தாயிடம் யாரையும் காதலிக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறாள். அதே தருணம் அவளுக்கு விரும்பாத திருமணத்தை அவளின் தாய் நடத்த ஏட்பாடுகள் செய்யப்படுகின்றது. இவளின் கனவில் ஒரு மர்ம மனிதனைப் பற்றி கனவு காண்கிறாள். அவன் பெய ர் கதிர் (அருண்), ஒரு பணக்கார மற்றும் அழகான இளைஞன், கீர்த்தியை முதல் பார்வையில் காதலிக்கிறான். ஆனால் விதியின் சதியால் பூவரசியை கதிர் திருமணம் செய்கின்றான். திடீரென கீர்த்தி இறக்க கதிர் மற்றும் பூவரசியின் வாழ்வில் நடக்கப்படும் மாற்றங்களை இந்த தொடர் விளக்குகின்றது.

நடிகர்கள் தொகு

முதன்மை கதாபாத்திரம் தொகு

 • ராதிகா பிரீத்தி (2020-2022) → வர்ஷினி அர்சா (2022) - பூவரசி
  • கீர்த்தியின் சிறந்த நண்பி, கதிரின் மனைவி, இரத்தினவள்ளி மற்றும் செந்தமிழ்செல்வனின் மகள்.
 • அருண் (2020- ஜூன் 2021) → முகமது அஸீம் (2021-2022) - கதிர் சிவநாராயணன்
  • கீர்த்தியின் முன்னாள் காதலர், பூவரசியின் கணவர், கார்த்தியின் சிறந்த நண்பர்.
  • அஷ்வின் தத்தா, பூவரசியின் மெய்க்காப்பாளர் (ஒரு மனிதன் இரட்டை கதாபாத்திரம்)
 • சாயா சிங் - ரஞ்சனா சொக்கலிங்கம் (2021-2022)

துணை கதாபாத்திரம் தொகு

 • தேவப்பிரியா - மகேஸ்வரி
 • அருண் ராஜன் - மாரித்துறை
 • சுதா (2020 - மே 2021) → கிருபா கிருஷ்ணமூர்த்தி - ராஜலட்சுமி (மே 2021-2022)
 • சுபத்திரா - பத்மாவதி
 • ஜெயலட்சுமி - ஜெயந்தி
 • ராஜ்காந்த் - நாகராஜ் (2020-2022)
 • தஷ்வந்த் - குணசேகர் (2020-2022)
 • சியாம் - முத்துவேல் (2020-2022)

முந்தைய கதாபாத்திரங்கள் தொகு

 • ஜோவித்தா[2][3] - கீர்த்தி (2020 - மார்ச் 2021) தொடரில் இறந்துவிட்டார்
 • ஸ்ரீனிஸ் அரவிந்த் - கார்த்திக் (ஜூன் 2021 – ஆகஸ்ட் 2021) தொடரில் இறந்துவிட்டார்
 • ஆமணி - ரத்னவள்ளி (2020 - மார்ச் 2021) தொடரில் இறந்துவிட்டார்
 • அருன் குமார் ராஜன் - செல்வன் (2020 - ஜூன் 2021)
 • விக்னேஷ் - சக்திவேல் (2020 - ஜூன் 2021)
 • ரேகா நாயர் - தங்கம் (2020 - ஜூன் 2021)
 • ஸ்ரீலேகா ராஜேந்திரன் - மாரியம்மா (2020 - ஜூன் 2021)
 • ஸ்ரீதேவி அசோக் - தனலட்சுமி (2020 - மே 2021)
 • சுராஜ் நாயுடு - கேசவன் (2020 - 2021)
 • அஜய் ரத்தினம் - சிவநாராயன் (2020)
 • ஜி.எம்.குமார் - சங்கரலிங்கம் (2020 - 2021)
 • உஷா எலிசபெத் - கற்பகம் (2020) தொடரில் இறந்துவிட்டார்
 • பிரேமலதா - லட்சுமி (2021)
 • சுதா - ராஜலட்சுமி சிவநாராயணன்

ஒளிபரப்பு நேரம் மாற்றம் தொகு

இந்த தொடர் முதலில் கல்யாண வீடு என்ற தொடரின் ஒளிபரப்பு நேரத்திற்கு பதிலாக 10 ஆகத்து 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை சனி இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் 16 நவம்பர் 2020 முதல் 28 நவம்பர் 2020 வரை இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை 1 மணித்தியாலம் ஒளிபரப்பாகி, நவம்பர் 30, 2020 முதல் இரவு 8 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பானது, பின்னர் 18 அக்டோபர் 2021 முதல் இரவு 10 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி, 7 பிப்ரவரி 2022 முதல் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாயங்கள்
10 ஆகத்து 2020 - 13 நவம்பர் 2020
திங்கள் - சனி
19:30 1-76
16 நவம்பர் 2020 - 28 நவம்பர் 2020
திங்கள் - சனி
19:30 - 20:30 77-88
30 நவம்பர் 2020 - 16 அக்டோபர் 2021
திங்கள் - சனி
20:00 89-365
18 அக்டோபர் 2021 - 5 பிப்ரவரி 2022
திங்கள் - வெள்ளி
22:30

மதிப்பீடுகள் தொகு

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2020 7.9% 8.4%
8.1% 9.4%
8.5% 10.2%
7.9% 9.6%
2021 8.6% 10.3%
5.30% 7.1%

சர்வதேச ஒளிபரப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

சன் தொலைக்காட்சி : திங்கள் - வெள்ளி இரவு 10:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி பூவே உனக்காக அடுத்த நிகழ்ச்சி
சித்தி–2 -
சன் தொலைக்காட்சி : திங்கள் - வெள்ளி இரவு 10 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி பூவே உனக்காக அடுத்த நிகழ்ச்சி
சித்தி–2
(15 பிப்ரவரி 2021 - 16 அக்டோபர் 2021)
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 8 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி பூவே உனக்காக
(30 நவம்பர் 2020 - 16 அக்டோபர் 2021)
அடுத்த நிகழ்ச்சி
கல்யாண வீடு
(27 ஜூலை 2020 – 13 நவம்பர் 2020)
வானத்தைப்போல
(ஒரு மணி நேர சிறப்பு அத்தியாயங்கள்)
(16 அக்டோபர் 2021 - )
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி பூவே உனக்காக
(10 ஆகத்து 2020 - 28 நவம்பர் 2020)
அடுத்த நிகழ்ச்சி
கல்யாண வீடு
(16 ஏப்ரல் 2018 – 3 ஏப்ரல் 2020)
வானத்தைப்போல