நந்திகிராம் படுகொலைகள்

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் எனும் ஊரில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு 14,500 ஏக்கர் வேளாண்மை நிலங்களை கையகப்படுத்திய புத்ததேவ் பட்டாசார்யா தலைமையிலான மேற்கு வங்காள அரசுக்கு எதிராக 2007-இல் பெரும் வன்முறைகள் எழுந்தது.[1][2]இதன் காரணமாக இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சி தலைமையிலான மேற்கு வங்காள அரசு, நந்திகிராமில் தொழிற்சாலைகள் அமைக்கும் சிறப்பு பொருளாதார மண்டல திட்டக் கொள்கையை கைவிட்டது.[2] இக்கொள்கையால் நந்திகிராமில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மம்தா பானர்ஜி தலைமையிலான அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியினர் சுவேந்து அதிகாரி தலைமையில் நந்திகிராமில் நிலங்களை கையகப்படுத்தியமைக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர். பின்னர் நடுவண் புலனாய்வுச் செயலகம் நடத்திய புலனாய்வின் முடிவில், நந்திகிராம் துப்பாக்கிச் சூட்டிற்கும், படுகொலைகளுக்கும் புத்ததேவ் பட்டாசார்யா அரசே காரணம் என அறிக்கை அளித்தது. [3]

ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் ராம்சே கிளார்க் நந்திகிராம் வனமுறையில் பாதிக்கப்பட்டவர்க்ளை சந்தித்து பேசுதல்

நந்திகிராம் வன்முறைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமாக, 2011-இல் நடைபெற்ற மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில், 1977 முதல் 2011 வரை 34 ஆண்டுகள் நடைபெற்ற இடதுசாரிகளின் ஆட்சி முடிவிற்கு வந்ததுடன், மம்தா பானர்ஜி தலைமையிலான அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு பெரும்பான்மை பலத்துடன் மேற்கு வங்க அரசை கைப்பற்றியது.[4] மேலும் முதலமைச்சராக இருந்த புத்ததேவ் பட்டாசார்யா அவரது சொந்த தொகுதியில் தோல்வியுற்றார்.

பின்னணி தொகு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டு தொழிற்சாலைகலை அமைக்க நந்திகிராம் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க 14,500 ஏக்கர் வேளாண்மை விளைநிலங்களை அரசு கட்டாயப்படுத்தி கையகப்படுத்தியது. இதனால் நந்திகிராம் பகுதியில் கடுமையான வன்முறை மோதல்களுக்கு வழிவகுத்து. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் வரை பலியானதை தொடர்ந்து நந்திகிராமில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

மேற்கோள்கள் தொகு

  1. "Singur, Nandigram Were Way to Writers' for Mamata". Outlook இம் மூலத்தில் இருந்து 2 பிப்ரவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140202162800/http://news.outlookindia.com/items.aspx?artid=722602. 
  2. 2.0 2.1 "2007-Nandigram violence: A state of failure" (in en). 28 December 2009 இம் மூலத்தில் இருந்து 15 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191015205327/https://www.indiatoday.in/magazine/cover-story/story/20091228-2007-nandigram-violence-a-state-of-failure-741632-2009-12-24. 
  3. "CBI clean chit to Buddha govt on Nandigram firing". The Times of India. Archived from the original on 5 January 2017. பார்க்கப்பட்ட நாள் 6 May 2016.
  4. 2011 West Bengal Legislative Assembly election

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்திகிராம்_படுகொலைகள்&oldid=3640582" இலிருந்து மீள்விக்கப்பட்டது