நமீதா கோகலே

நமீதா கோகலே (Namita Gokhale) (பிறப்பு 1956) ஓர் இந்திய எழுத்தாளரும், இதழாசிரியரும், விழா இயக்குனரும், வெளியீட்டாளரும் ஆவார். பரோ: ட்ரீம்ஸ் ஆஃப் பேஷன் என்ற இவரது முதல் புதினம் 1984இல் வெளியிடப்பட்டது. பின்னர் இவர் புனைகதைகளையும் புனைகதை அல்லாதவற்றையும் எழுதியுள்ளார். மேலும் புனைகதை அல்லாத தொகுப்புகளைத் திருத்தி வெளியிட்டுள்ளார். இவர் கித்தாப்நாமா: புக்ஸ் அண்ட் பியாண்ட் என்ற தூர்தர்ஷன் நிகழ்ச்சியின் கருத்தாக்கத்திலும் பங்கு கொண்டிருந்தார். மேலும், ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் நிறுவனராகவும் அதன் இணை இயக்குனராகவும் இருந்தார்.

நமீதா கோகலே
நமீதா கோகலே
நமீதா கோகலே
பிறப்பு1956
இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா
தொழில்எழுத்தாளார், இதழாசிரியர், விழா இயக்குநர், வெளியீட்டாளர்
தேசியம் இந்தியா
இணையதளம்
www.namitagokhale.in

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும் தொகு

நமீதா கோகலே 1956இல் உத்தரபிரதேசத்தின் இலக்னோவில்[1] பிறந்தார். பின்னர் நைனித்தாலில்[2] [3] தனது அத்தைகளிடமும் தன்னுடைய பாட்டி சகுந்தலா பாண்டேவிடமும் வளர்ந்தார்.[1] இவர் தில்லி பல்கலைக்கழகத்தின் இயேசு மற்றும் மேரி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றார். தனது 18 வயதில்[4] ராஜீவ் கோகலே என்பவரை மணந்தார். இவர் ஒரு மாணவியாக இருந்தபோதே இரண்டு மகள்களைப் பெற்றார்.[5] [1] ஜெஃப்ரி சாகரின் எழுத்துக்கள் பற்றிய பாடத்திட்டத்தில் கலந்து கொள்ள இவர் மறுத்துவிட்டார். இதனால் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார். [1][5] இவரது நாற்பது வயதில் இவரது கணவர் புற்றுநோயால் இறந்தார்.[1]

தொழில் தொகு

நமீதா ஒரு மாணவியாக, தனது 17 வயதில்,[6] 1970களின் வெளிவந்து கொண்டிருந்த சூப்பர், என்ற திரைப்பட இதழை வெளியிடத் தொடங்கினார். 1980களின் முற்பகுதியில் மூடப்படும் வரை ஏழு ஆண்டுகள் இந்த இதழை தொடர்ந்து வெளியிட்டார்.[7] சூப்பர் மூடப்பட்ட பிறகு, இவர் தனது முதல் புதினமாக மாறிய கதையை எழுதத் தொடங்கினார்.[5]

தனது எழுத்து வாழ்க்கைக்கு மேலதிகமாக, கோகலே கித்தாப்நாமா: புக்ஸ் அண்ட் பியாண்ட்டின் நூறு அத்தியாயங்களை தொகுத்தார். இது தூர்தர்ஷனுக்காக இவர் கருத்தியல் செய்த ஒரு பன்மொழி புத்தகமாகும்.[8][9] 2013ஆம் ஆண்டில் தி இந்துவுக்கு எழுதிய இரக்சா குமாரின் கூற்றுப்படி, "கித்தாப்நாமா: புக்ஸ் அண்ட் பியாண்ட்" இந்திய இலக்கியத்தின் பன்மொழி பன்முகத்தன்மையை வெளிப்படுத்த முயன்றது. புத்தகக் கடைகள் தொழில்நுட்ப எழுத்து மற்றும் சுய உதவி புத்தகங்களால் மூழ்கடிக்கப்படாத நேரத்தை இது நினைவூட்டுகிறது; இலக்கியம் மற்றும் தரமான எழுத்து நேரத்தை வீணடிப்பதாக கருதப்படாதபோது; வாசிப்பின் இன்பத்தை பலர் அனுபவித்தபோது."[10]

இவர் வில்லியம் தால்ரிம்பில்[7][11],சஞ்சோய் கே ராய் ஆகியோருடன் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் நிறுவனராகவும் அதன் இணை இயக்குநராகவும் இருந்தார் [12] [1] பூட்டானில் நடந்த 'மவுண்டன் எக்கோஸ்' இலக்கிய விழாவின் ஆலோசகராகவும் இருந்தார்.[6] இவர் 'இந்திய இலக்கியத்தின் சர்வதேச விழா-நீம்ரானா' 2002, 'ஆப்பிரிக்கா ஆசிய இலக்கிய மாநாடு', 2006 ஆகியவற்றைக் கருத்தியல் செய்தார். கலை மற்றும் இலக்கியத்திற்கான இமயமலை எக்கோ குமோவோன் விழா அல்லது அபோட்ஸ்ஃபோர்ட் இலக்கிய வார இறுதிக்கும் கோகலே அறிவுரை வழங்கினார்.

இந்திய மொழியிலிருந்து ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் எட்டு மொழிகளில் சமகால இலக்கியங்களை மொழிபெயர்க்கும் திட்டத்திற்காக இந்திய அரசின் கலாச்சார அமைச்சின் ஒரு முயற்சியின் ஒரு பகுதியாக 2010 முதல் 2012 வரை, இவர் வெளிநாடு சென்று இந்திய இலக்கியத்தின் குழு உறுப்பினராக நிர்வாகப் பணிகளை மேற்கொண்டார். ஆனால் அரசாங்கத்தால் நிதி வழங்கப்படாத பிறகு, ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் பதிப்பு முத்திரையான ஜெய்ப்பூர் புக்மார்க்குடன் பணிபுரிய தனது முயற்சிகளை மாற்றினார்.[13]

நீதா குப்தாவால் 2005 இல் நிறுவப்பட்ட ஆங்கிலம், இந்தி மற்றும் இந்திய பிராந்திய மொழிகளில் படைப்பாக்க எழுத்து மற்றும் மொழிபெயர்ப்புகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு பன்மொழி வெளியீட்டு நிறுவனமான யாத்ரா புத்தகங்களின் இணை நிறுவனர்-இயக்குநராகவும் உள்ளார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "On the write track". Harmony - Celebrate Age Magazine. January 2018. https://www.harmonyindia.org/people_posts/on-the-write-track/. 
  2. "Namita Gokhale and her overpowering obsession with the hills". India Today. February 16, 1998. https://www.indiatoday.in/magazine/society-the-arts/books/story/19980216-namita-gokhale-and-her-overpowering-obsession-with-the-hills-825691-1998-02-16. 
  3. "In the shadow of the ‘deodar’". Mint. November 18, 2016. https://www.livemint.com/Leisure/ux9TuLsv5GAFN3IK3Da6pM/In-the-shadow-of-the-deodar.html. 
  4. "Summer of sequels". The Telegraph India. June 12, 2011. http://www.telegraphindia.com/1110612/jsp/graphiti/story_14100205.jsp. 
  5. 5.0 5.1 5.2 "Lounge Loves - Paro". Mint. April 12, 2014. https://www.livemint.com/Leisure/9pKGzuWyyE0MIWS7hCvJdK/Lounge-Loves--Paro.html. 
  6. 6.0 6.1 "Namita Gokhale takes potshots at elite society in new book". இந்தியன் எக்சுபிரசு. Agencies. May 30, 2011. https://indianexpress.com/article/news-archive/web/namita-gokhale-takes-potshots-at-elite-society-in-new-book/. 
  7. 7.0 7.1 Sathyendran, Nita (November 19, 2010). "A step beyond". தி இந்து. https://www.thehindu.com/books/A-step-beyond/article15695142.ece. 
  8. Krithika, R (December 15, 2017). "In the write space". தி இந்து. https://www.thehindu.com/books/books-authors/an-interview-with-namita-gokhale-about-her-new-ya-book/article21693382.ece. 
  9. Chakrabarti, Paromita (January 14, 2018). "Reading Time: Namita Gokhale on her new novel and why the Jaipur Literature Festival is a perfect fit for Rajasthan". இந்தியன் எக்சுபிரசு. https://indianexpress.com/article/express-sunday-eye/reading-time-namita-gokhale-on-her-new-novel-and-why-the-jaipur-literature-festival-is-a-perfect-fit-for-rajasthan-5023403/. 
  10. Kumar, Raksha (December 7, 2013). "Page turners". தி இந்து. https://www.thehindu.com/features/magazine/page-turners/article5433271.ece. 
  11. "Festival Directors and Producer". Jaipur Literature Festival. பார்க்கப்பட்ட நாள் June 19, 2021.
  12. "‘If journalists write the first draft of history from the ground, writers do it from a distance’". இந்தியன் எக்சுபிரசு. April 13, 2020. https://indianexpress.com/article/books-and-literature/jlf-digital-namita-gokhale-sanjoy-roy-interview-6360212/. 
  13. Sharma, Manik (April 16, 2016). "Why did India’s ambitious global translations project, die prematurely?". Scroll.in. https://scroll.in/article/806685/why-did-indias-ambitious-global-translations-project-die-prematurely. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நமீதா_கோகலே&oldid=3315357" இலிருந்து மீள்விக்கப்பட்டது