நமோ பாரத் விரைவு இரயில்

இந்திய நகரங்களுக்கு இடையேயான ரயில்

நமோ பாரத் விரைவு இரயில்[1][2] (Namo Bharat Rapid Rail) Vande Metro ) தொடருந்துகள் பொதுவாக, இரண்டு நகரங்களுக்கிடையே பயணிக்கும் குளிர்சாதன வசதி கொண்ட முன்பதிவில்லா விரைவு மெமு ரயில் ஆகும்.[3] கபூர்தலா இரயில் பெட்டி தொழிற்சாலையானது வந்தே மெட்ரோ இரயில் பெட்டிகளை தயாரிக்கிறது.[4]

நமோ பாரத் விரைவு இரயில்
சோதனை ஓட்டத்தில் வந்தே மெட்ரே இரயில்
கண்ணோட்டம்
வகைநகரங்களை இணைக்கும் தொடருந்து
நிகழ்நிலை16 செப்டம்பர் 2024 முதல் பயன்பாட்டில்
வழி
ஓடும் தூரம்100 முதல் 360 கிலோ மீட்டர் வரை
பயணச் சேவைகள்
இருக்கை வசதிஆம்
உணவு வசதிகள்இல்லை
காணும் வசதிகள்அகலமான கண்னாடி சன்னல்கள்
சுமைதாங்கி வசதிகள்தலைக்கு மேல் பகுதியில்
மற்றைய வசதிகள்
  • தானியங்கி கதவுகள்
  • புகை, நெருப்பு அலாரம்
  • பயோ-வாக்கும் கழிவறைகள்
தொழில்நுட்பத் தரவுகள்
பாதைஅகலப் பாதை
வேகம்அதிக பட்சம் மணிக்கு 130 கிலோ மீட்டர்

முன்பதிவில்லா 12 அமரும் குளிர் சாதன பெட்டிகளைக் கொண்ட நமோ பாரத் விரைவு மெமு இரயிலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 16 செப்டம்பர் 2024 அன்று அகமதாபாத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.[5][6]

முதலாவது நமோ பாரத் விரைவு இரயில்

தொகு

இந்தியாவின் பெரிய நகரங்களை இணைக்கும் 12 அமரும் வகையிலான பெட்டிகளைக் கொண்ட முதல் நமோ பாரத் விரைவுத் தொடருந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்திலிருந்து, கட்ச் மாவட்டத்தின் தலைமையிடமான புஜ் நகரத்திற்கு இடையே 359 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கிறது. இந்த வண்டி எண்கள் 94802/94801 ஆகும். இது புஜ் நகரத்திலிருந்து அதிகாலை 5.05 மணி அளவில் புறப்பட்டு, அகமதாபாத் நகரத்திற்கு காலை 10.50 மணிக்கு சென்றடைகிறது. பயண நேரம் 5 மணி 40 நிமிடங்கள் ஆகும். அதே நாளில் மாலை 5.30 மணிக்கு அகதாபாத்திலிருந்து புறப்பட்டு, இரவு 11.10 மணிக்கு புஜ் நகரத்தை அடைகிறது. இந்த இரயிலின் பயணக் கட்டணம் ரூபாய்.455 மட்டுமே.

முன்பதிவில்லா இந்த வந்தே மெட்ரோ மெமு இரயிலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 16 செப்டம்பர் 2024 அன்று அகமதாபாத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.[5][6]

விளக்கம்

தொகு

12 அமரும் குளிர்சாதன வசதி பெட்டிகளைக் கொண்ட முன்பதிவி இல்லா மெமு இரயிலின் அதிக பட்ச வேகம் மணிக்கு 130 கிலோ மீட்டர் ஆகும்.[7] வந்தே மெட்ரோவின் பயணிகள் கொள்ளவு 3208 பயணிகள் மட்டுமே. இதில் 1150 பேர் அமரும் வகையிலும்; 2058 பேர் நின்று பயணிக்கும் வகையில் உள்ளது.

வந்தே மெட்ரோ இரயிலில் பயணிகள் பாதுகாப்பிற்கு கவாச் பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது.[8][9][10] வந்தே பாரத் விரைவுவண்டிக்கு பொருத்தப்படும் இழுவை எஞ்சின் இதற்கும் பொருத்தப்படுகிறது.

புஜ்-அகமதாபாத் வரை நமோ பாரத் விரைவு இரயிலின் பயண அட்டவணை

தொகு

புறப்படுமிடம் & நின்று செல்லும் இடங்கள்

தொகு

இரயில் எண் 94802

தொகு
  1. புஜ் 5.05 காலை
  2. அஞ்சார் 5.34 காலை
  3. காந்திதாம் 5.55 காலை
  4. பாசாவ் 6.36 மு ப
  5. சமக்கியாலி 6.45 காலை
  6. ஹல்வாத் 7.55 காலை
  7. திராங்கத்ரா 8.25 காலை
  8. வீரம்கம் 9.25 காலை
  9. சந்தோலியா 10.03 காலை
  10. சபர்மதி 10.15 காலை
  11. அகமதாபாத் 10.50 காலை

இரயில் எண் 94801

தொகு
  1. அகமதாபாத் 5.30 மாலை
  2. சபர்மதி 5.40 மாலை
  3. சந்தோலியா 5.47 மாலை
  4. வீரம்கம் 6.26 இரவு
  5. திராங்கத்ரா 7.19 இரவு
  6. ஹல்வாத் 7.49 இரவு
  7. சமக்கியாலி 8.55 இரவு
  8. பாசாவ் 9.13 இரவு
  9. காந்திதாம் 9.50 இரவு
  10. அஞ்சார் 10.18 இரவு
  11. புஜ் 11.10 இரவு

மேற்கோள்கள்

தொகு
  1. 'வந்தே மெட்ரோ' ரெயில் சேவைக்கு 'நமோ பாரத் ரேபிட் ரெயில்' என பெயர் மாற்றம்
  2. நமோ பாரத் ரேபிட் என பெயர் மாற்றப்பட்டது வந்தே மெட்ரோ ரயில்
  3. "RCF to roll out first prototype of Vande Metro coach by April: S Srinivas". Business Standard. 11 February 2024. https://www.business-standard.com/industry/news/rcf-to-roll-out-first-prototype-of-vande-metro-coach-by-april-s-srinivas-124021100139_1.html. 
  4. https://www.etnownews.com/infrastructure/indian-railways-first-vande-metro-at-rcf-kapurthala-amazing-pics-first-look-revealed-seephotos-article-108998895
  5. 5.0 5.1 Gujarat’s Bhuj-Ahmedabad Vande Metro renamed Namo Bharat Rapid Rail hours before inauguration
  6. 6.0 6.1 [1]
  7. "Vande Metro: Indian Railway Gears Up To Roll Out High-Speed New Intercity Train With 130 kmph Operational Capability". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 June 2024.
  8. "Vande Metro coach prototype to be revealed soon! Know RCF's ambitious plans – All about design, features, and convenience here". The Financial Express (India). 11 February 2024. https://www.financialexpress.com/business/railways-vande-metro-coach-prototype-to-be-revealed-soon-know-rcfs-ambitious-plans-all-about-design-features-and-convenience-here-3390686/. 
  9. "Kapurthala's Rail Coach Factory aims to roll out first prototype of Vande Metro coach by April". The Tribune (India). 11 February 2024. https://www.tribuneindia.com/news/punjab/rail-coach-factory-aims-to-roll-out-first-prototype-of-vande-metro-coach-by-april-says-general-manager-589707. 
  10. "RCF aims to roll out first prototype of Vande Metro coach by April, says its general manager". தி எகனாமிக் டைம்ஸ். 11 February 2024. https://economictimes.indiatimes.com/industry/transportation/railways/rcf-aims-to-roll-out-first-prototype-of-vande-metro-coach-by-april-says-its-general-manager/articleshow/107596683.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நமோ_பாரத்_விரைவு_இரயில்&oldid=4101995" இலிருந்து மீள்விக்கப்பட்டது