வந்தே பாரத் விரைவுவண்டி
இக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) டிரெய்ன்_18 கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக) Proposed since ஜனவரி 2023. |
தொடருந்து 18 (Train 18), என்பது வந்தே பாரத் விரைவு வண்டி எனவும் அழைக்கப்படுகின்ற[1]இந்திய நகரங்களுக்கிடையே செல்லக்கூடிய, ஒரு அதிவேக விரைவு வண்டியாகும்.[2] இந்த விரைவு வண்டியானது, இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழான முன்னெடுப்பில் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் 18 மாத கால பணியின் விளைவாக உருவானது.
வந்தே பாரத் விரைவுவண்டி | |
---|---|
கண்ணோட்டம் | |
நிகழ்நிலை | பயன்பாட்டில் உள்ளது |
நிகழ்வு இயலிடம் | இந்தியா |
முந்தையது | சதாப்தி விரைவுவண்டி,மெமு ரயில் |
முதல் சேவை | 15 பெப்ரவரி 2019 |
நடத்துனர்(கள்) | இந்திய இரயில்வே |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | AC இருக்கை (எகனாமி வகுப்பு) எக்ஸிகியூட்டிவ் இருக்கை (எக்ஸிகியூட்டிவ் வகுப்பு) |
தொழில்நுட்பத் தரவுகள் | |
வேகம் |
|
பாதை உரிமையாளர் | இந்திய இரயில்வே |
இந்த விரைவுவண்டியின் ஒரு அலகுக்கான தயாரிப்புச் செலவினமானது ரூ.100 கோடியாகும். இருப்பினும் அடுத்தடுத்த தயாரிப்புகளின் போது இந்த தயாரிப்புச் செலவு இன்னும் குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது.[3] ஐரோப்பாவில் இருந்து இதனையொத்த ஒரு தொடருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தால் அதன் விலையோடு ஒப்பிடும் போது தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இதன் விலையானது 40% குறைவானதாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.[4]
சோதனை ஓட்டம் மற்றும் முதல் பயணம்
தொகுஇந்த விரைவுவண்டியானது தனது முதல் பயணத்தை 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் நாள் தொடங்கியது. புது தில்லியிலிருந்து வாரனாசிக்கான சோதனை ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.[5] 2019 சனவரி 27 ஆம் நாளில் இந்த விரைவு வண்டியின் சேவையானது வந்தே பாரத் விரைவுவண்டி எனப் பெயரிடப்பட்டது.[6]முதல் நாள் சோதனை ஓட்டத்தின் போது, வாரணாசியிலிருந்து திரும்பிய போது நடுவழியில் பழுதானது. பின்னர் பழுது சரிசெய்யப்பட்டு புது தில்லியை வந்தடைந்தது. 2019 பெப்ரவரி 17 ஆம் நாள் அன்று வர்த்தகரீதியான தனது முதல் பயணத்தை வந்தே பாரத் விரைவுவண்டி தொடங்கியது.[7]
வகைகள்
தொகுவந்தே பாரத் 1.0 (VB1)
தொகு16 பெட்டிகளை கொண்டது. இருக்கை வசதி மட்டுமே கொண்டது
வந்தே பாரத் 2.0 (VB2)
தொகு16 பெட்டிகளை கொண்டது. இருக்கை வசதி மட்டுமே கொண்டது. முந்தைய வகையை காட்டிலும் எடை குறைவானது மற்றும் கவாச் ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது
மினி வந்தே பாரத் 2.0 (VB2)
தொகுஇந்த ரயில் 8 பெட்டிகளை கொண்டது. குறைந்த நேர பயண தூர வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.
வந்தே பாரத் 2.0 மாற்றியமைக்கப்பட்ட பதிப்பு 1 (VB2M1)
தொகுகூடுதல் பார்க்கிங் பிரேக்குகளை கொண்டது. செங்குத்தான மற்றும் மலைச்சரிவுகளை கொண்ட வழித்தடங்களில் இயக்கப்படுகிறது
வந்தே பாரத் 2.0 மாற்றியமைக்கப்பட்ட பதிப்பு 2 (VB2M2)
தொகுஉயரமான பாண்டோகிராஃப்களை கொண்டது. இரண்டடுக்கு சரக்கு ரயில்கள் செல்லும் வழித்தடத்தில் மின்சார கம்பிகள் அதிக உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும். அத்தகைய வழித்தடத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் பாண்டோகிராஃப்களை உயரமாக அமைத்துள்ளனர்.
வந்தே பாரத் 3.0 (VB3)
தொகுAC படுக்கை வசதியுடன் கூடிய ரயில்கள். இவை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.2025 ஆம் ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வந்தே பாரத் 4.0 (VB4)
தொகுமணிக்கு 200 கி.மீ வேகத்தில் செல்லும் ரயில்
சேவைகள்
தொகுவந்தே பாரத் ரயில் இயங்கும் தடங்களின் பட்டியல் (2023 ஜனவரி மாத நிலவரப்படி)
எண். | தொடக்க நிலையம் | முனைய நிலையம் | ரயில் பெயர் | ரயில் எண் | வகை | சேவைகளின் காலஅளவு | பயண தூரம் | பயண நேரம் | வேகம் (km/h) | துவக்கம் | நிறுத்தங்கள் | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகம் | சராசரி வேகம் | |||||||||||
1 | புது டெல்லி ரயில் நிலையம் | வாரணாசி சந்திப்பு ரயில் நிலையம் | புது தில்லி-வாரணாசி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் | 22435/22436 | VB1 | திங்கள், வியாழன் தவிர | 759 km (472 mi) | 8h 0m | 130 km/h (81 mph)[8] | 95 km/h (59 mph)[9] | 15 பிப்ரவரி 2019 | கான்பூர் சென்ட்ரல், அலகாபாத் சந்திப்பு |
2 | புது டெல்லி ரயில் நிலையம் | ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா தொடருந்து நிலையம் | புது டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் | 22439/22440 | VB1 | செவ்வாய் தவிர | 655 km (407 mi) | 8h 0m | 130 km/h (81 mph)[8] | 82 km/h (51 mph)[9] | 3 அக்டோபர் 2019 | அம்பாலா கன்டோன்மென்ட், லூதியானா சந்திப்பு , ஜம்மு தாவி |
3 | மும்பை சென்டிரல் தொடருந்து நிலையம் | காந்திநகர் கேப்பிட்டல் ரயில் நிலையம் | மும்பை சென்ட்ரல் - காந்திநகர் கேப்பிடல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் | 20901/20902 | VB2 | புதன் தவிர | 522 km (324 mi) | 6h 15m | 130 km/h (81 mph)[8] | 85 km/h (53 mph)[10] | 30 செப்டம்பர் 2022 | வாப்பி, சூரத், வடோதரா, அகமதாபாத் |
4 | புது டெல்லி ரயில் நிலையம் | ஆம்ப் ஆண்டௌரா | புது டெல்லி-ஆம்ப் ஆண்டௌரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் | 22448/22447 | VB2 | வெள்ளி தவிர | 412 km (256 mi) | 5h 25m | 130 km/h (81 mph)[8] | 79 km/h (49 mph)[9] | 13 அக்டோபர் 2022 | அம்பாலா கன்டோன்மென்ட், சண்டிகர், ஆனந்த்பூர், உனா ஹிமாச்சல் |
5 | சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் | மைசூர் சந்திப்பு | சென்னை சென்ட்ரல் - மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் | 20607/20608 | VB2 | புதன் தவிர | 496 km (308 mi) | 6h 30m | 110 km/h (68 mph)[11] | 76 km/h (47 mph)[9] | 11 நவம்பர் 2022 | காட்பாடி, பெங்களூர் KSR |
6 | பிலாஸ்பூர் சந்திப்பு | நாக்பூர் சந்திப்பு | பிலாஸ்பூர் - நாக்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் | 20825/20826 | VB2 | சனி தவிர | 412 km (256 mi) | 5h 30m | 130 km/h (81 mph) | 75 km/h (47 mph) | 11 டிசம்பர் 2022[12] | ராய்ப்பூர், துர்க், ராஜ்நந்த்கான், கோந்தியா |
7 | ஹவுரா சந்திப்பு ரயில் நிலையம் | புது ஜல்பாய்குரி ரயில் நிலையம் | ஹவுரா - புது ஜல்பாய்குரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் | 22301/22302 | VB2 | புதன் தவிர | 561 km (349 mi) | 7h 30m | 130 km/h (81 mph) | 75 km/h (47 mph) | 30 டிசம்பர் 2022 | போல்பூர் சாந்திநிகேதன், மால்டா டவுன், பார்சோய் |
8 | விசாகப்பட்டினம் சந்திப்பு ரயில் நிலையம் | செகந்திராபாத் ரயில் நிலையம் | விசாகப்பட்டினம் - செகந்திராபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் | 20833/20834 | VB2 | ஞாயிறு தவிர | 698 km (434 mi) | 8h 30m | 130 km/h (81 mph) | 82 km/h (51 mph) | 15 ஜனவரி 2023 | ராஜமுந்திரி, விஜயவாடா, கம்மம், வாரங்கல் |
9 | சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் | சோலாப்பூர் | மும்பை CSMT - சோலாப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் | 22225/22226 | VB2M1 | புதன்கிழமை தவிர (22225)
வியாழன் தவிர (22226) |
452 km (281 mi) | 6h 30m | 110 km/h (68 mph) | 70 km/h (43 mph) | 10 பிப்ரவரி 2023[13] | தாதர், கல்யாண், புனே, குர்துவாடி சந்திப்பு ரயில் நிலையம் |
10 | சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் | சாய் நகர் சீரடி ரயில் நிலையம் | மும்பை CSMT - சாய் நகர் சீரடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் | 22223/22224 | VB2M1 | செவ்வாய் தவிர | 339 km (211 mi) | 5h 20m | 110 km/h (68 mph) | 64 km/h (40 mph) | 10 பிப்ரவரி 2023[14] | தாதர், தானே, நாசிக் சாலை ரயில் நிலையம் |
11 | ஹபீப்ஹஞ்ச் தொடருந்து நிலையம் | ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம் | ராணி கமலாபதி - ஹசரத் நிசாமுதீன் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் | 20171/20172 | VB2 | சனி தவிர | 702 km
(436 mi) |
7h 30m | 160 km/h (99 mph) | 94 km/h (58 mph) | 1 ஏப்ரல் 2023 | ஆக்ரா கண்டோன்மெண்ட், குவாலியர், ஜான்சி |
12 | செகந்திராபாத் ரயில் நிலையம் | திருப்பதி தொடருந்து நிலையம் | செகந்திராபாத் - திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் | 20701/20702 | MVB2 | செவ்வாய் தவிர | 661 km (411 mi) | 08h 00m | 130 km/h (81 mph) | 78 km/h (48 mph) | 8 ஏப்ரல் 2023 | நல்கொண்டா, குண்டூர், ஓங்கோல், நெல்லூர் |
13 | சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் | கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் | சென்னை MGR சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் | 20643/20644 | MVB2 | புதன் தவிர | 495 km (308 mi) | 05h 50m [15] | 130 km/h (81 mph) | 85 km/h (53 mph) | 8 ஏப்ரல் 2023 | சேலம், ஈரோடு, திருப்பூர் |
14 | தில்லி கண்டோன்மென்ட் | அஜ்மேர் சந்திப்பு தொடருந்து நிலையம் | தில்லி கண்டோன்மென்ட் - அஜ்மேர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் | 20977/20978 | VB2M2 | புதன் தவிர | 428 km (266 mi) | 05h 15m | 110 km/h (68 mph) | 82 km/h (51 mph) | 12 ஏப்ரல் 2023 [16] | குர்கான், அல்வர், ஜெய்ப்பூர் |
15 | திருவனந்தபுரம் சென்ட்ரல் | காசர்கோடு | திருவனந்தபுரம் - காசர்கோடு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் | 20634/20633 | VB2 | வியாழன் தவிர | 587 km (365 mi) | 08h 05m | 110 km/h (68mph) | 73 km/h (45 mph) | 25 ஏப்ரல் 2023 [17] | கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர், ஷொறணூர், கோழிக்கோடு, கண்ணூர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "India's fastest to be called Vande Bharat Express". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 28 January 2019.
- ↑ "Train 18, India's first engine-less train, set to hit tracks on October 29", இந்தியன் எக்சுபிரசு, 24 October 2018
- ↑ Prabhakar, Siddarth (23 October 2018). "First Made-in-India engineless train gets on track for trial run - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/chennai/first-made-in-india-train-set-ready-for-trial-run/articleshow/66324376.cms. பார்த்த நாள்: 4 November 2018.
- ↑ Arora, Rajat (16 March 2018). "Made-in-India 160 km per hour train to run from June". தி எகனாமிக் டைம்ஸ் (New Delhi, India). https://economictimes.indiatimes.com/industry/transportation/railways/made-in-india-160-km-per-hour-train-to-run-from-june/articleshow/63323107.cms. பார்த்த நாள்: 5 November 2018.
- ↑ PTI (7 February 2019). "Train 18: PM Modi to flag off Vande Bharat Express on February 15 from New Delhi". Business Today. https://www.businesstoday.in/current/economy-politics/train-18-pm-modi-to-flag-off-vande-bharat-express-on-february-15-from-new-delhi/story/317978.html. பார்த்த நாள்: 15 February 2019.
- ↑ "Minister of Railways & Coal Shri Piyush Goyal Announces 'Vande Bharat Express'". Press Information Bureau, India. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "டெல்லி-வாரணாசி இடையே வர்த்தக ரீதியான பயணத்தை தொடங்கியது 'வந்தே பாரத்' ரெயில்". மாலை மலர். 18 பெப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ 8.0 8.1 8.2 8.3 "Vande Bharat train reaches 16 minutes early; activists bat for more speed". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 December 2022.
- ↑ 9.0 9.1 9.2 9.3 "Vande Bharat Express: From fastest to slowest semi-high speed trains in India - Full List HERE". Zee News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-05.
- ↑ "PM to flag off Vande Bharat 2 from Gandhinagar to Mumbai on Sept 30". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 13 September 2022.
- ↑ Bureau, The Hindu (12 November 2022). "Speed of Vande Bharat will be increased, say railway officials". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 5 December 2022.
- ↑ "6th Vande Bharat train to be inaugurated on December 11". Hindustan Times (in ஆங்கிலம்). 4 December 2022. பார்க்கப்பட்ட நாள் 5 December 2022.
- ↑ "PM Modi Flags Off 2 Vande Bharat Trains From Mumbai To Shirdi, Solapur". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
- ↑ "PM Modi flags off 2 Vande Bharat Express trains in Mumbai; travelling to Shirdi, Pune, Solapur becomes easier". TimesNow (in ஆங்கிலம்). 2023-02-10. பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
- ↑ "Chennai-Coimbatore Vande Bharat Express: Fare, timings, stoppages,". mint (in ஆங்கிலம்). 2023-04-08. பார்க்கப்பட்ட நாள் 2023-04-08.
- ↑ "Ajmer-Delhi Vande Bharat vs Shatabdi Exp: A look at fares, stoppages,travel time". mint (in ஆங்கிலம்). 2023-04-14. பார்க்கப்பட்ட நாள் 2023-05-03.
- ↑ "Kasaragod –Trivandrum Vande Bharat Exp: Fare,timings, stoppages, other details". mint (in ஆங்கிலம்). 2023-04-24. பார்க்கப்பட்ட நாள் 2023-05-03.