நம்போங்கு

இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தில் ஒரு நகரம்

நம்போங்கு (Nampong) என்பது இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சங்லங்கு மாவட்டத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். பாங்சாவ் கணவாய்க்கு அருகில் அமைந்துள்ள இந்நகரம் இந்தியப் பக்கத்தில் உள்ள கடைசி நகரமாக கருதப்படுகிறது.[1] கடல் மட்டத்தில் இருந்து 308 மீட்டர் உயரத்தில் உள்ளது. அருணாச்சலத்தின் 60 தொகுதிகளில் நம்போங்கு தொகுதியும் ஒன்றாகும். 2016 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் நம்போங்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக லைசம் சிமாய் பணிபுரிந்தார்.[2]

நம்போங்கு
Nampong
நகரம்
நம்போங்கு Nampong is located in அருணாசலப் பிரதேசம்
நம்போங்கு Nampong
நம்போங்கு
Nampong
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் அமைவிடம்
நம்போங்கு Nampong is located in இந்தியா
நம்போங்கு Nampong
நம்போங்கு
Nampong
நம்போங்கு
Nampong (இந்தியா)
ஆள்கூறுகள்: 27°17′N 96°08′E / 27.28°N 96.13°E / 27.28; 96.13
நாடு இந்தியா
Stateஅருணாசலப் பிரதேசம்
மாவட்டம்சங்லங்கு
ஏற்றம்
308 m (1,010 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்4,424
மொழிகள்
 • அலுவல்ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அகுஎண்
792123
தொலைபேசிக் குறியீடு03800
ஐஎசுஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
வாகனப் பதிவுஏஆர்
காலநிலைஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலை

வரலாறு

தொகு

இரண்டாம் உலகப்போர் காலத்தில் இந்தியாவையும் சீனாவையும் இணைப்பதற்காகப் போடப்பட்ட பிரபலமற்ற லெடோ சாலையில் உள்ள நகரங்களில் நம்போங்கும் ஒன்றாகும். அமெரிக்க இராணுவத் தளபதியான இயோசப் இசுடில்வெல்லின்[3] நினைவாக இச்சாலை இசுல்வெல் சாலை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இங்குள்ள ஓர் ஆற்றின் மீது ஒரு பாலமும் அப்போது கட்டப்பட்டது.[4] அடிக்கடி நிலச்சரிவுகள் மற்றும் கடுமையான பணிச்சூழல்கள் காரணமாக போரின் போது இந்த கணவாய் நரகக் கணவாய் என்று செல்லப்பெயர் பெற்றது. மேலும் நரக வாயில் என்று அழைக்கப்படும் ஓர் இடமும் நகரத்தில் அமைந்துள்ளது.[5] தாங்சாக்கள் என்ற இனக்குழுவினர் நம்போங்கில் வசிக்கின்றனர். மியான்மருடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியாவின் கிழக்கு மூலையில் உள்ள கடைசி நகரம் என்ற சிறப்பும் நம்போங்கு நகருக்கு உண்டு. ஒவ்வொரு மாதமும் நரகக் கணவாய் என்று அழைக்கப்படும் "பாங்சாவ் கணவாய் " என பெயரிடப்பட்ட கணவாய் வழியாக மியான்மருக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிகழ்வு ஒவ்வொரு மாதமும் 10, 20 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நிகழ்கிறது.

மக்கள் தொகையியல்

தொகு

அருணாச்சலப் பிரதேசத்தின் முக்கிய பழங்குடியினங்களில் ஒன்றான தாங்சாக்கள் நம்போங்கின் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். தாங்சாவிற்குள் திகாக், முக்லோம், அவி, லங்சங், மோசாங், இயூக்லி, கிம்சிங், ரொன்ராங், முங்ரே, லாங்பி, லாங்ரி, பொந்தை, சங்வால், யோங்குக்கு, சாகியெங்கு, தம்பாங்கு, போன்ற பல்வேறு துணைப் பழங்குடியினர் உள்ளனர். இவர்கள் மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்களாவர். மியான்மரில் உள்ள மசோய் சினரூபம் என்ற மலையில் இவர்கள் உருவானதாக புராணங்கள் கூறுகின்றன. 1740 ஆம் ஆண்டுகளில் மியான்மரின் வடக்கிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர். 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மட்டுமே தற்போதைய வாழ்விடத்திற்கு இவர்கள் குடிபெயர்ந்தனர். பாரம்பரியமாக, தாங்சாக்கள் ஆவி மற்றும் விலங்கு படுகொலைகளால் சித்தரிக்கப்படும் மத நம்பிக்கை விசுவாசிகளாவர்ர். ஆயினும்கூட, பல ஆண்டுகளாக, பலர் பௌத்தம் மற்றும் கிறித்துதவ மதத்திற்கு மாறியுள்ளனர்.

பொருளாதாரம்

தொகு

தாங்சாக்கள் உழைப்பு மற்றும் அமைதியை விரும்புகிறார்கள். கைவினைப் பொருட்களில் குறிப்பாக மர வேலைப்பாடுகளில் வல்லுநர்களாக உள்ளனர். தாங்சாவின் முக்கிய மக்கள் தொழில் மூலம் விவசாயம் செய்கின்றனர்.

பண்பாடு

தொகு

நம்போங்கின் வாழ்க்கை முறை சிக்கலற்றது. உயிர்வாழ்வதும் எளிது

பாங்சாவ் கணவாய் குளிர்கால விழா

தொகு

பாங்சாவ் கணவாய் குளிர்கால விழா என்பது ஒவ்வொரு ஆண்டும் நம்போங்கில் 20, 21 சனவரி மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் ஓர் உலகளாவிய கிராம நிகழ்வாகும்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Nampong, last Indian town on way to Pan Saung Burma
  2. "Nampong MLA". Archived from the original on 19 August 2016. பார்க்கப்பட்ட நாள் 14 August 2016.
  3. The Stilwell Road, A Historical View
  4. Coordinates: 27°17'35"N 96°7'24"E - Nampong Bridge
  5. Nampong Hell Gate
  6. Pangsau Pass Winter Festival

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்போங்கு&oldid=3588548" இலிருந்து மீள்விக்கப்பட்டது