நரேஷ் கௌர்
நரேஷ் கௌர்(Naresh Gaur) (பிறப்பு 5 அக்டோபர் 1952) ஒரு இந்திய அரசியல்வாதியும், வழக்கறிஞரும்[1] ஆவார். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான[2][3][4][5] இவர் தற்போது பாபர்பூர் தொகுதியிலிருந்து தில்லி சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார்.
நரேஷ் கௌர் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் Member தில்லி சட்டமன்றம் பாபர்பூர் உறுப்பினர் | |
பதவியில் 29 அக்டோபர் 2008 – 2015 | |
முன்னையவர் | வினய் சர்மா |
பின்னவர் | கோபால் ராய் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 அக்டோபர் 1952 புலந்தசகர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | மணி கௌர் |
பிள்ளைகள் | சுவாதி, வருண், அருண் |
பெற்றோர் | ராகவா சரண் கௌர், சஞ்சாவதி கௌர் |
முன்னாள் கல்லூரி | தில்லி பல்கலைக்கழகம் (இளங்கலை) சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகம் (இளங்கலைச் சட்டம்) |
வேலை | வழக்கறிஞர் |
தில்லி பல்கலைக்கழகம் மற்றும் மீரட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் பாபர்பூரில் இருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்; 2003ல் ஒரே ஒரு முறை தோற்றார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுநரேஷ் கௌர் 5 அக்டோபர் 1952[1] அன்று உத்தரபிரதேச மாநிலம் புலந்தசகரில் பிறந்தார். தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்த சியாம் லால் கல்லூரியில் இளங்கலை பட்டமும்[1] பின்னர் மீரட் பல்கலைக்கழகத்தில் (தற்போது சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகம்) சட்டத்தில் இளங்கலை பட்டமும் பெற்றார்.[6]
அரசியல் வாழ்க்கை
தொகுதொடர்ந்து நான்கு தேர்தல்களில் பாபர்பூர் தொகுதியில் போட்டியிட்டார். 1993 இல் தில்லியின் முதல் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 15,301 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய தேசிய காங்கிரசின் போபால் சிங்கை தோற்கடித்தார். 1998 மாநில சட்டமன்றத் தேர்தலில், காங்கிரசின் இரண்டாம் இடத்தைப் பிடித்த அப்துல் ஹமீதை விட இவரது வெற்றி வித்தியாசம் 963 வாக்குகள் கணிசமாகக் குறைந்தது. 2003ல் காங்கிரசு வேட்பாளர் வினய் சர்மாவிடம் 4,259 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2008 மாநில சட்டமன்றத் தேர்தலில், பாபர்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 3,826 வாக்குகள் வித்தியாசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஹாஜி தில்ஷாத் அலியை தோற்கடித்து மூன்றாவது முறையாக வென்றார்.[6]
சொந்த வாழ்க்கை
தொகுகௌர் மணி கௌர் என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் (வருண் மற்றும் அருண்) மற்றும் ஒரு மகள் (சுவாதி) உள்ளனர். இவர்கள் வடகிழக்கு தில்லியின் சதாராவின் நவீன் சதாரா பகுதியில் வசிக்கிறார்.
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "List of members – Naresh Gaur". Delhiassembly.nic.in. Legislative Assembly of Delhi. பார்க்கப்பட்ட நாள் 4 November 2013.
- ↑ "Babarpur Assembly Constituency". Eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 5 November 2013.
- ↑ "State Elections 2008 – Babarpur — NCT OF Delhi". Eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 5 November 2013.
- ↑ "India's main opposition party names PM candidate for 2014 polls". Xinhua News Agency. News.xinhuanet.com. 13 September 2013 இம் மூலத்தில் இருந்து 30 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130930014418/http://news.xinhuanet.com/english/world/2013-09/13/c_125386810.htm. பார்த்த நாள்: 19 November 2013.
- ↑ Pandit Ambika & Jha, Durgesh Nandan (14 August 2012). "Congress, BJP's poll rhetoric over Anna party". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Times News Network (New Delhi) இம் மூலத்தில் இருந்து 3 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131203012510/http://articles.timesofindia.indiatimes.com/2012-08-14/delhi/33200357_1_manish-sisodia-team-anna-political-alternative. பார்த்த நாள்: 19 November 2013.
- ↑ 6.0 6.1 "Know Your MLA – Naresh Gaur, BJP". The Hindustan Times (New Delhi: via HighBeam Research). 22 October 2013 இம் மூலத்தில் இருந்து 11 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131111045407/http://www.highbeam.com/doc/1P3-3104751001.html. பார்த்த நாள்: 4 November 2013.(subscription required)