நவதானியம்

இன்றியமையாத சத்துக்கள் அடங்கிய ஒன்பது தானியங்கள்

நவதானியங்கள் (Navdhānya) என்பன கோதுமை, நெல், துவரை, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, மொச்சை, எள், உளுந்து மற்றும் கொள்ளு ஆகியவையாகும்.[1][2] நவதானியங்கள் என்பது பல இந்திய மொழிகளில் "ஒன்பது தானியங்கள்" என்று பொருள்படும். இந்த ஒன்பது தானிய வகைகளும் இந்திய உணவு பண்டங்களில் பெரும்பான்மையாக உபயோகப்படுத்தப்படும் முக்கிய பொருட்களாகும்.[3]

இந்து இறையியல்

இந்து அண்டவியலில், நவதானியங்கள் என்பது நவக்கிரகங்களை (ஒன்பது கிரகங்கள்) குறிப்பவையாக கருதப்படுகிறது.[4] முறையே தானியங்கள் பின்வரும் கிரகங்களை குறிக்கின்றன:[5]

எண். படிமம் பெயர் உணவு தானியம்
1.   சூரியன் கோதுமை
2.   சந்திரன் நெல்
3.   செவ்வாய் மொச்சை
4.   புதன் பாசிப்பயறு
5.   குரு கொண்டைக்கடலை
6.   சுக்ரன் துவரை
7.   சனி எள்
8.   இராகு உளுந்து
9.   கேது கொள்ளு

வழிபாடு மற்றும் சடங்குகள்

இந்து சமய நம்பிக்கையுடையோர் புதிதாக வீடு கட்டுதல், திருமணம் மற்றும் சுப நிகழ்வுகளுக்காக வீடுகளின் முன்பு பந்தல் அமைத்தல் போன்ற நிகழ்வுகளுக்கான சில வழிபாடுகளின் போது நவதானியத்தை வழிபாட்டுப் பொருளாக வைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது.[6][7] உபநயனம் மற்றும் வித்யாரம்பம் போன்ற பாரம்பரிய இந்து சடங்குகள் நவதானியங்கள் வழங்குவதை அல்லது படைப்பதை உள்ளடக்கியன.[8] சரஸ்வதி பூஜை போன்ற பண்டிகைகளின் போது, ​​நவதானியத்தில் புதிய எழுத்தோலை மற்றும் எழுதும் கருவிகள் வைக்கப்படுகின்றன.[9]

தென்னிந்தியாவில் பாரம்பரியமாக முலைப்பாரி என்று அழைக்கப்படும் இந்த உணவு தானியங்களின் முளைகள் மாரியம்மன் திருவிழாக்கள் மற்றும் சடங்குகளில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன.[10] இந்த விழாக்களின் போது கோவில்களில் நவதானிய விதைகள் தட்டுகள் அல்லது தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன. விதைகள் ஆரோக்கியமாக முளைத்தால், அது ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகின்றது.[11]

மேற்கோள்கள்

  1. Subrahmanya, Susheela (1992). Southern Economist. Vol. 31. University of Illinois at Urbana-Champaign. p. 26.
  2. Krishna, Nanditha (2017). Hinduism and Nature. Penguin Random House India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-387-32654-5.
  3. The Bloomsbury Handbook of Indian Cuisine. Bloomsbury Publishing. 2023. p. 331. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-350-12865-1.
  4. Talamantez, Inés M. (2006). Teaching Religion and Healing. Oxford University Press. p. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-199-72737-7.
  5. Brouwer, Jan (1995). The Makers of the World:Caste, Craft, and Mind of South Indian Artisans. Oxford University Press. p. 89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-195-63091-6.
  6. Jan Brouwer (1995). The Makers of the World: Caste, Craft, and Mind of South Indian Artisans. Oxford University Press. p. 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-195-63091-6.
  7. Knipe, David M. (2015). Vedic Voices:Intimate Narratives of a Living Andhra Tradition. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-190-26673-8.
  8. Mathur, Nita (2002). Cultural Rhythms in Emotions, Narratives and Dance. University of Michigan. p. 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-121-50993-0.
  9. Aruṇācalam, Mu (1980). Festivals of Tamil Nadu. University of Michigan. p. 74.
  10. Religious Experience in the Hindu Tradition. Mdpi AG. 2019. p. 147. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-039-21050-3.
  11. Journal for the Study of Religion. Vol. 18. Association for the Study of Religion. 2005. p. 56.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவதானியம்&oldid=3937491" இலிருந்து மீள்விக்கப்பட்டது