நவீன் ஜின்டால்

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி


நவீன் ஜின்டால் (Naveen Jindal) ஓர் இந்தியத் தொழிலதிபர் மற்றும் ஹரியானாமாநிலத்தின் குருச்சேத்திரம் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.[1]. இவர் ஜின்டால் குழுமத்தின் தலைவராவார்[2] ஜின்டால் குழுமம் இவரது தந்தை ஓபி ஜின்டால் என்பவரால் நிறுவப்பட்டது 14வது மற்றும் 15வது மக்களவை உறுப்பினராக குருச்சேத்திரம் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார் [3]

நவீன் ஜின்டால்
Naveen Jindal at the India Economic Summit 2010 cropped.jpg
உலகப் பொருளாதார மன்றத்தில் ஜின்டால்
இந்திய மக்களவை உறுப்பினர் - பதினான்காவது மக்களவை, பதினைந்தாவது மக்களவை மக்களவை (இந்தியா)
முன்னவர் கைலாசோ தேவி
பின்வந்தவர் ராஜ்குமார் ஷைனி
தொகுதி குருஷேத்ரா
தனிநபர் தகவல்
பிறப்பு 9 மார்ச்சு 1970 (1970-03-09) (அகவை 50)
ஹிசார், ஹரியானா, இந்தியா
அரசியல் கட்சி இந்தியதேசியகாங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) ஷல்லு ஜின்டால்
இருப்பிடம் டெல்லி மற்றும் குருசேத்திரா
படித்த கல்வி நிறுவனங்கள் தில்லி பொதுப்பள்ளி, மதுரா தெரு
தில்லி பல்கலைக்கழகம்
டெக்சாசு பல்கலைக்கழகம், டல்லசு
தொழில் தொழிலதிபர்
அரசியல்வாதி


சமயம் இந்து சமயம்
இணையம் Naveen Jindal

ஆரம்பகால வாழ்க்கைதொகு

ஓம் பிரகாசு ஜின்டாலுக்கு மகனாக மார்ச்19,1970ல் ஹரியானா மாநிலத்தின் சஹிசாரில் பிறந்தார். இவரிந் தந்தை மற்றும் தாய் சாவித்ரி ஜின்டால் முன்னாள் ஹரியானா மாநில அமைச்சராவார்கள். [4]

அரசியல்தொகு

படிக்கும் காலங்களில் அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார். மாணவர் தலைவராக டெக்சஸ்பல்கலைகழகத்தில் பொறுப்பு வகித்தார். முதுகலை படிப்பை முடித்து நாடு திரும்பி 2004ம் ஆண்டுஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களவை உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்டார், 2009ம் ஆண்டிலும் தேர்வு பெற்றார். 2014ம் ஆண்டு தேர்தலில் தோல்வியைத் தழுவினார். பதவியின் போது பல்வேறு பாராளுமன்ற குழுக்களில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்

சர்ச்சைகள்தொகு

2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் ஊழல்களில் ஒன்றான நிலக்கரி ஊழலில் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிக விலைக்கு விற்றதாக, தேசிய சனநாயக கூட்டணி ஆட்சி தொடங்கி ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி வரை நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவீன்_ஜின்டால்&oldid=2720298" இருந்து மீள்விக்கப்பட்டது