நஸ்முல் இஸ்லாம்
முகமது நஸ்முல் இஸ்லாம் (Mohammad Nazmul Islam) வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். பொதுவாக நஸ்முல் இஸ்லாம் என அறியப்படும் இவர் வங்காளதேச அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்,பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.இடதுகை மட்டையாளரான இவர் இடது கை புறத்திருப்பப் பந்து வீச்சாளர் ஆவார். இவர் மார்ச் 21, 1991 இல் தாக்காவில் பிறந்தார். மேலும் இவர் வங்காளதேச அ அணி, 21 வயதிற்கு உட்பட்ட வங்காளதேச அணி,23 வயதிற்கு உட்பட்ட வங்காளதேச அணி பரிசல் பர்னர்ஸ், சிட்டகொங் மாகாண அணி, தாக்கா மாகாண அணி மற்றும் கலாபகன் துடுப்பாட்ட அகாதமி ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.[1]
உள்ளூர்ப் போட்டிகள்
தொகுதேசியத் துடுப்பாட்ட லீக்கில் இவர் தாக்கா மாகாண அணிக்காக விளையாடினார். வங்காளதேச அ அணி, 21 வயதிற்கு உட்பட்ட வங்காளதேச அணி,23 வயதிற்கு உட்பட்ட வங்காளதேச அணிகளில் இவர் விளையாடியுள்ளார். வங்காளதேச கிரிக்கெட் லீக்கில் இவர் கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்காக விளையாடியுள்ளார்.
2018-19 ஆம் ஆண்டுகளில் நடைபெற உள்ள வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் இவர் ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.[2]
சர்வதேச போட்டிகள்
தொகுபெப்ரவரி 2018 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டித் தொடரில் விளையாடுவதற்கான அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பெப்ரவரி 15, 2018 இல் நடைபெற்ற போட்டியில் இவர் அறிமுகமானார்.
ஆகஸ்டு மாதம் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசியக் கிண்ணம் 2018 போட்டித் தொடருக்கான 31 பேர் கொண்ட உத்தேச வங்காளதேச அணி வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றார். பின் அதற்கு அடுத்த மாதத்தில் 15 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்தார்.[3] செப்டம்பர் 23, 2018 இல் நடைபெற்ற ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[4] அபுதாபியில் நடைபெற்ற இந்த சூப்பர் நான்கு போட்டியில் எட்டு ஓவர்கள் வீசி 29 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.இந்தப் போட்டியில் வங்காளதேச அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. அக்டோபர் ,2018 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.[5] நவமப்ர் 3,2018 இல் தனது முதல் போட்டியில் விளையாடினார்.[6]
தேர்வுத் துடுப்பாட்டம்
தொகு2018 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. நவம்பர் 3 இல் சில்ஹெட்டில் நடைபெற்ற போட்டியில் இவர் அறிமுகமானார். இதன் முதல் ஆட்டப் பகுதியில் 23 ஓவர்கள் வீசி 49 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.இதில் 6 ஓவர்களை மெய்டனாக வீசினார். பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 6 ஓவர்கள் வீசி 27 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 1 ஓவரை மெய்டனாக வீசினார். பின் மட்டையாட்டத்தில் முதல் ஆட்டப் பகுதியில் 15 பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்து சிக்கந்தர் இராசா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.[7] பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் சிம்பாப்வே அணி 151 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
சான்றுகள்
தொகு- ↑ "nazmul islam".
- ↑ "Full players list of the teams following Players Draft of BPL T20 2018-19". Bangladesh Cricket Board. Archived from the original on 28 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Mohammad Mithun, Ariful Haque in Bangladesh squad for Asia Cup 2018". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 30 August 2018.
- ↑ "4th Match, Super Four, Asia Cup at Abu Dhabi, Sep 23 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 September 2018.
- ↑ "Bangladesh hand Nazmul, Mithun maiden Test call-ups". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 October 2018.
- ↑ "1st Test, Zimbabwe tour of Bangladesh at Sylhet, Nov 3-7 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 October 2018.
- ↑ "first test match".