ஆசியக் கிண்ணம் 2018
ஆசியக் கிண்ணம் 2018 (2018 Asia Cup) அல்லது யுனிமோனி ஆசியக் கிண்ணம் ( Unimoni Asia Cup)[1] போட்டித் தொடர் 2018 செப்டம்பரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடராகும்.[2] இது ஆசியக் கிண்ணத் தொடரின் 14-வது பதிப்பாகும். ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னதாக 1984, 1995 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது. 2016 போட்டியில் வாகையாளராக வெற்றி பெற்ற இந்தியா,[3] இறுதிப் போட்டியில் வங்காளதேசத்தை மூன்று இலக்குகளால் வென்று மீண்டும் வாகையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[4]
நாட்கள் | 15 – செப்டம்பர் 28, 2018 |
---|---|
நிர்வாகி(கள்) | ஆசியத் துடுப்பாட்ட அவை |
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | தொடர் சுழல்முறை, ஒற்றை வெளியேற்றம் |
நடத்துனர்(கள்) | ஐக்கிய அரபு அமீரகம் |
வாகையாளர் | இந்தியா |
இரண்டாமவர் | வங்காளதேசம் |
மொத்த பங்கேற்பாளர்கள் | 6 |
மொத்த போட்டிகள் | 13 |
தொடர் நாயகன் | சிகர் தவான் |
அதிக ஓட்டங்கள் | சிகர் தவான் (342) |
அதிக வீழ்த்தல்கள் | ரசீத் கான் (10) முசுத்தாபிசூர் ரகுமான் (10) குல்தீப் யாதவ் (10) |
ஆசியத் துடுப்பாட்ட அவையின் ஐந்து முழு உறுப்பு நாடுகள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபெற்றன. அவையாவன: ஆப்கானித்தான், இலங்கை, இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம் ஆகியனவாகும். இவற்றுடன், 2018 ஆசியக் கிண்ணத் தேர்வுச் சுற்றில் வெற்றியடைந்த ஆங்காங் அணியும் பங்குபெற்றது.[5] 2018 உலகக்கோப்பை தகுதிகாண் சுற்றில் பத்தாவதாக வந்ததை அடுத்து, ஆங்காங் அணி ஒருநாள் விளையாட்டுத் தகுதியை 2018 மார்ச்சில் இழந்தது.[6][7] ஆனாலும், 2018 செப்டம்பர் 9 இச்சுற்றில் விளையாடப்படும் அனைத்து ஆட்டங்களுக்கும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை ஒருநாள் தகுதியை வழங்கியது.[8]
ஆரம்பத்தில், இச்சுற்றுப் போட்டி இந்தியாவில் விளையாடுவதாக இருந்தது.[9][10] ஆனாலும், இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் நிலவி வந்த தொடர்ச்சியான அரசியல் கொந்தளிப்புகளை அடுத்து இப்போட்டிகளை அமீரகத்தில் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.[2]
குழு 'ஆ' வில், இலங்கை அணி தமது இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது. ஆப்கானித்தானும், வங்காளதேசமும் சூப்பர் 4 இல் விளையாடத் தகுதி பெற்றன.[11][12] குழு 'அ' வில், ஆங்காங் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்ததை அடுத்து, இந்தியாவும், பாக்கித்தானும் சூப்பர் 4 சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன.[13]
சூப்பர் 4 சுற்றில், இந்தியா பாக்கித்தானை ஒன்பது இலக்குகளாலும், வங்காளதேசம் ஆப்கானித்தானை மூன்று ஓட்டங்களாலும் வென்றன. இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது, ஆப்கானித்தான் வெளியேற்றப்பட்டது.[14][15] அடுத்த ஆட்டத்தில், வங்காளதேசம் பாக்கித்தானை 47 ஓட்டங்களால் வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.[16]
அணிகள்
தொகு- ஆப்கானித்தான், ஐசிசி முழு உறுப்பு நாடு
- வங்காளதேசம், ஐசிசி முழு உறுப்பு நாடு
- இந்தியா, ஐசிசி முழு உறுப்பு நாடு
- பாக்கித்தான், ஐசிசி முழு உறுப்பு நாடு
- இலங்கை, ஐசிசி முழு உறுப்பு நாடு
- ஆங்காங், 2018 ஆசியக்கிண்ண தேர்வுச் சுற்று வெற்றியாளர்
அரங்குகள்
தொகுஐக்கிய அரபு அமீரகம் | |
---|---|
துபாய் | அபுதாபி |
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு | சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு |
ஆள்கூறுகள்: 25°2′48″N 55°13′8″E / 25.04667°N 55.21889°E | ஆள்கூறுகள்: 24°23′47″N 54°32′26″E / 24.39639°N 54.54056°E |
இருக்கைகள்: 25,000 | இருக்கைகள்: 20,000 |
ஆட்டங்கள்: 8 | ஆட்டங்கள்: 5 |
குழு நிலை
தொகுபிரிவு அ
தொகுஅணி | ஆ | வெ | தோ | ச | முஇ | பு | நிஓவி |
---|---|---|---|---|---|---|---|
இந்தியா | 2 | 2 | 0 | 0 | 0 | 4 | +1.474 |
பாக்கித்தான் | 2 | 1 | 1 | 0 | 0 | 2 | +0.284 |
ஆங்காங் | 2 | 0 | 2 | 0 | 0 | 0 | –1.748 |
எ
|
||
ஐசாசு கான் 27 (47)
உசுமான் கான் 3/19 (7.3 ஓவர்கள்) |
இமாம்-உல்-ஹக் 50* (69)
ஏசான் கான் 2/34 (8 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆங்காங் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- பாபர் அசாம் (பாக்) ஒருநாள் போட்டிகளில் விரைவாக 2,000 ஓட்டங்களைக் கடந்தவர்கள் வரிசையில் இரண்டாம் இடம் பெற்றார்.[17]
எ
|
||
ஷிகர் தவான் 127 (120)
கிஞ்சித் சா 3/39 (9 ஓவர்கள்) |
நிசாக்கத் கான் 92 (115)
யுவேந்திர சகல் 3/46 (10 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆங்காங் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- கலீல் அகமது (இந்) தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.
- நிசாக்கத் கான், அன்சுமான் ரத் இணை ஆங்காங் அணிக்காக அதிக ஒருநாள் ஓட்டங்களைப் (174) பதிவு செய்தனர்.[13]
எ
|
||
ரோகித் சர்மா 52 (39)
சதாப் கான் 1/6 (1.3 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- பாக்கித்தானுக்கு எதிரான போட்டியில், எஞ்சியுள்ள பந்துகளின் அடிப்படையில், இந்தியா பெற்ற பெரும் வெற்றி இதுவாகும் (126).[18]
பிரிவு ஆ
தொகுஅணி | ஆ | வெ | தோ | ச | முஇ | பு | நிஓவி |
---|---|---|---|---|---|---|---|
ஆப்கானித்தான் | 2 | 2 | 0 | 0 | 0 | 4 | +2.270 |
வங்காளதேசம் | 2 | 1 | 1 | 0 | 0 | 2 | +0.010 |
இலங்கை | 2 | 0 | 2 | 0 | 0 | 0 | –2.280 |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் இலங்கை அணி வங்காளதேசத்துக்கு எதிரான மிகக்குறைந்த ஓட்டங்களை இப்போட்டியில் பெற்றது[19]
எ
|
||
ரகுமத் சா 72 (90)
திசாரா பெரேரா 5/55 (9 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இப்போட்டி ஆப்கானித்தானுக்கு எதிரான இலங்கையின் முதலாவது ஒருநாள் தோல்வியாகும்.[11]
எ
|
||
அசுமத்துல்லா சாகிதி 58 (92)
சகீப் அல் அசன் 4/42 (10 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- அபு ஐதர் (வங்), நசுமுல் சாண்டோ (வங்) தமது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினர்.
சூப்பர் 4
தொகுஅணி | ஆ | வெ | தோ | ச | முஇ | பு | நிஓவி |
---|---|---|---|---|---|---|---|
இந்தியா | 3 | 2 | 0 | 1 | 0 | 5 | +0.863 |
வங்காளதேசம் | 3 | 2 | 1 | 0 | 0 | 4 | –0.156 |
பாக்கித்தான் | 3 | 1 | 2 | 0 | 0 | 2 | –0.599 |
ஆப்கானித்தான் | 3 | 0 | 2 | 1 | 0 | 1 | –0.044 |
எ
|
||
மெகெதி அசன் 42 (50)
ரவீந்திர ஜடேஜா 4/29 (10 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
அசுமத்துல்லா சாகிதி 97* (118)
முகம்மது நவாசு 3/57 (10 ஓவர்கள்) |
இமாம்-உல்-ஹக் 80 (104)
ரஷீத் கான் 3/46 (10 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- சகீன் அபிரிதி (பாக்) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
எ
|
||
ஷிகர் தவான் 114 (100)
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- யுவேந்திர சகல் (இந்) தனது 50-வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[20]
- ரோகித் சர்மா (இந்) ஒருநாள் போட்டிகளில் 7,000 ஓட்டங்களை எடுத்தார்.[21]
- இது இந்தியாவின் பாக்கித்தானுக்கு எதிரான (இலக்குகள் வாரியாக) பெரும் வெற்றி ஆகும்.[22]
எ
|
||
அசுமத்துல்லா சாகிதி 71 (99)
முசுத்தாபிசூர் ரகுமான் 2/44 (9 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- நசுமுல் இசுலாம் (வங்) தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
- முசாரப் முர்தசா (வங்) தனது 250-வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[23]
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முத்லில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- தீபக் சாகர் (இந்) தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
- மகேந்திரசிங் தோனி (இந்) 200-வது போட்டியில் தலைவராக விளையாடினார்.[24]
எ
|
||
இமாம்-உல்-அக் 83 (105)
முசுத்தாபிசூர் ரகுமான் 4/43 (10 ஓவர்கள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- ஆசியக்கோப்பையில் பாக்கித்தானுக்கு எதிராக வங்காளதேசம் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.[25]
இறுதிப் போட்டி
தொகுஎ
|
||
லித்தன் தாசு 121 (117)
குல்தீப் யாதவ் 3/45 (10 ஓவர்கள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- லித்தன் தாசு (வங்) தனது முதலாவது ஒருநாள் சதத்தை எடுத்தார்.[26]
சான்றுகள்
தொகு- ↑ "Unimoni to title sponsor UAE’s Asia Cup" (in en). SportBusiness Group. 15 August 2018. https://www.sportbusiness.com/sport-news/unimoni-title-sponsor-uaes-asia-cup.
- ↑ 2.0 2.1 "2018 Asia Cup moved from India to UAE". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 April 2018.
- ↑ "India to host Asia Cup 2018 in UAE". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 10-04-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "India creep home in final-over thriller to defend Asia Cup title". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 28-09-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Hong Kong hold their nerve to clinch Asia Cup berth". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 6-09-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Norman Vanua, Charles Amini help PNG defend 200". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9-09-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Asia Cup participation highlights the ironies of Hong Kong's ODI existence". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15-09-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ICC awards Asia Cup ODI status". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 9-09-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 24-08-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "IPL now has window in ICC Future Tours Programme". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12-12-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 11.0 11.1 "Afghanistan knock Sri Lanka out of the Asia Cup". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 17-09-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Rahmat, spinners knock Sri Lanka out of Asia Cup". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17-09-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 13.0 13.1 "Hong Kong give India a scare, but Dhawan century proves just enough". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18-09-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Bangladesh edge out Afghanistan in last-ball thriller". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 24-09-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Mustafizur defends seven in last over to knock out Afghanistan". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24-09-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Bangladesh stun Pakistan to reach Asia Cup final and set up showdown with India". The National. பார்க்கப்பட்ட நாள் 26 September 2018.
- ↑ "Red-hot Pakistan swat Hong Kong aside". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 16-09-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Bhuvneshwar, Jadhav's three-wicket hauls set up easy win for India". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20-09-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Bangladesh pull off their biggest ODI win away from home". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 16-09-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Dhawan and Sharma make short work of Pakistan". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 23-09-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Rohit Sharma completes 7000 runs in ODI". India Blooms. பார்க்கப்பட்ட நாள் 23 September 2018.
- ↑ "India's biggest win by wickets against Pakistan". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 24-09-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Asia Cup 2018, Bangladesh vs Afghanistan: Statistical highlights of AFG innings". Hindustan Times (in ஆங்கிலம்). 24-09-2018. பார்க்கப்பட்ட நாள் 24-09-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "MS Dhoni captains India for 200th time in one-day internationals". India Today. பார்க்கப்பட்ட நாள் 25-09-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Mushfiqur Rahim and Mustafizur Rahman lift Bangladesh into Asia Cup final". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27-09-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Asia Cup 2018 final: Liton Das slams maiden ODI hundred". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 28-09-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)