முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஜுனைத் கான் (Junaid Khan;உருது: جنید خان பிறப்பு: 24 டிசம்பர் 1989) பாக்கித்தானியப் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரரும், இடக்கை விரைவுப் பந்து வீச்சாளரும் ஆவார்.[1] பாகித்தானிய வீரர் சொகைல் தன்வீர் காயமடைந்ததைத் தொடர்ந்து 2011 உலகக்கோப்பையில் முதன் முதலாகப் பன்னாட்டு துடுப்பாட்டப் போட்டியில் விளையாட அழைக்கப்பட்டார்.[2] இத்தொடரில் அவர் விளையாடவில்லை. 2011 ஏப்ரலில் இவர் முதன்முதலாக ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதே ஆண்டு சூன் மாதத்தில் லங்காசயர் நகரத் துடுப்பாட்ட அணியில் சேர்க்கப்பட்டார்.சுவாபி பகுதியில் இருந்து பாக்கித்தான் அணிக்கு முதலில் தேர்வானவர் எனும் பெருமை பெற்றார்.[3] இதன்பின் இவரது உறவினர் யாசிர் ஷாவும் பாக்கித்தான் அணியில் இடம் பெற்றார்.[4][5]

ஜுனைத் கான்
Junaid Khan
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் முகம்மது ஜுனைத் கான்
வகை பந்து வீச்சாளர்
பந்துவீச்சு நடை இடக்கை விரைவு வீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 208) செப்டம்பர் 1, 2011: எ சிம்பாப்வே
கடைசித் தேர்வு சனவரி 20, 2014: எ இலங்கை
முதல் ஒருநாள் போட்டி (cap 181) ஏப்ரல் 23, 2011: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒருநாள் போட்டி மார்ச் 8, 2014:  எ இலங்கை
சட்டை இல. 83
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2008/09 அபொட்டபாத் பால்கன்சு
2011- 2014 லங்காசயர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு1நாமுதபஅ
ஆட்டங்கள் 16 46 61 84
ஓட்டங்கள் 98 50 676 235
துடுப்பாட்ட சராசரி 7.00 5.55 11.26 9.40
100கள்/50கள் 0/0 0/0 0/2 0/0
அதிக ஓட்டங்கள் 17 25 71 32
பந்து வீச்சுகள் 3,538 2,165 12,476 3,982
இலக்குகள் 56 74 273 129
பந்துவீச்சு சராசரி 29.07 24.37 22.67 25.86
சுற்றில் 5 இலக்குகள் 4 0 19 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0 3 n/a
சிறந்த பந்துவீச்சு 5/38 4/12 7/46 4/12
பிடிகள்/ஸ்டம்புகள் 3/– 5/– 10/– 8/–

மே 11, 2014 தரவுப்படி மூலம்: ESPN Crickinfo

ஜுனைத் கான் 2007 சனவரி 24 இல் முதல்-தரப் போட்டியில் தனது 17வது அகவையில் அபொட்டாபாத் அணிக்காக விளையாடினார்.[6] 2011 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சென்ற போது ஜுனைத் கான் பாக்கித்தான் அணியில் சேர்க்கப்பட்டார். 2011 ஏப்ரல் 23 இல் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். .[7]

சர்வதேச போட்டிகள்தொகு

பாகித்தானிய வீரர் சொகைல் தன்வீர் காயமடைந்ததைத் தொடர்ந்து 2011 உலகக்கோப்பையில் முதன் முதலாகப் பன்னாட்டு துடுப்பாட்டப் போட்டியில் விளையாட அழைக்கப்பட்டார்.[2] இத்தொடரில் அவர் விளையாடவில்லை.[8]

பின் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டு தேர்வுத் துடுப்பாட்டம், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் ஒரு பன்னாட்டு இருபது20 போட்டி கொண்ட தொடரில் பாக்கித்தான ணியின் 15 பேர்கொண்ட அணியில் இடம்பிடித்தார். ஏப்ரல் 21 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அரிமுகமானார். ஆனால் அந்தப் போட்டியில் இலக்கினைக் கைப்பற்றவில்லை.[9]

பின் இரண்டு நாட்கள் கழித்து முகம்மது சல்மான் மற்றும் ஹம்மத் அசாம் ஆகியோருடன் இணைந்து மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். பின் வகாப் ரியாசுடன் இணைந்து துவக்க ஓவர்களை வீசினார். 10 ஓவர்கள் வீசி 49 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.[10] இந்தத் தொடரை பாக்கித்தான் அணி 3-2 எனும் கணக்கில் வென்றது. ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஜுனைத் கான் 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தத் தொடரில் அதிக இலக்குகளை வீழ்த்திய பாக்கித்தானிய பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இவர் நான்காவது இடம் பிடித்தார். மார்லன் சாமுவேல்சின் இலக்கினை முதல் இலக்காகக் கைப்பற்றினார்.[11]

மே மாதத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி அயர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட முடிவானது. இந்தத் தொடரின் 15 பேர்கொண்ட அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 12 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றி பாக்கித்தான் அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.இந்தப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருதினை வென்றார். [12]இந்தத் தொடரை பாக்கித்தான் அணி 2-0 எனும் கணக்கில் கைப்பற்றியது. இதிலதிக இலக்குகள் வீழ்த்திய பாக்கித்தானியப் பந்டுவீச்சாளர்களில் இவர் இரண்டாம் இடம் பிடித்தார். இவர் 6 இலக்குகளை 10.83 எனும் சராசரியில் வீழ்த்தினார்.[13][14]

பின் பாக்கித்தானிய அணி இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக மூன்று தேர்வுத் துடுப்பாட்டம், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் ஒரு பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியது. இதன் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல்நாள் ஆட்டம் மட்டையாட்டத்திற்கு சாதகமாக இருந்தபோதிலும் இவர் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.[15]பின் இரண்டாவது தேர்வுப் போட்டி சமனில் முடிந்தது.இந்தத் தொடரை பாக்கித்தான் அணி 1-0 எனும் கணக்கில் கைப்பற்றியது.

சான்றுகள்தொகு

  1. Pak bowler Junaid's action questionable: Basit Ali Retrieved 18 February 2011
  2. 2.0 2.1 Sohail Tanvir out of the World Cup, ESPNcricinfo, 9 February 2011, http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/content/current/story/500081.html, பார்த்த நாள்: 2011-04-25 
  3. "Pak bowler Junaid's action questionable: Basit Ali – Rediff.com Cricket" (2011-02-16). பார்த்த நாள் 2016-06-02.
  4. "How Fawad Ahmed's cousin stitched up Australia" (2014-10-29). பார்த்த நாள் 2016-06-02.
  5. Family, friends back Fawad Ahmed to bamboozle England at Ashes NDTV 3 July 2013; retrieved 3 October 2015.
  6. f49863 Multan v Abbottabad: Quaid-e-Azam Trophy Silver League 2006/07, CricketArchive, http://cricketarchive.com/Archive/Scorecards/113/113376.html, பார்த்த நாள்: 2011-06-07 
  7. ODI no. 3152 Pakistan in West Indies ODI Series – 1st ODI: West Indies v Pakistan, ESPNcricinfo, http://www.espncricinfo.com/ci/engine/match/489213.html, பார்த்த நாள்: 2011-04-25 
  8. Sohail Tanvir out of the World Cup, ESPNcricinfo, 9 February 2011, http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/content/current/story/500081.html, பார்த்த நாள்: 25 April 2011 
  9. T20I no. 199 Pakistan in West Indies T20I Match: West Indies v Pakistan, ESPNcricinfo, http://www.espncricinfo.com/ci/engine/match/489212.html, பார்த்த நாள்: 25 April 2011 
  10. ODI no. 3152 Pakistan in West Indies ODI Series – 1st ODI: West Indies v Pakistan, ESPNcricinfo, http://www.espncricinfo.com/ci/engine/match/489213.html, பார்த்த நாள்: 1 June 2016 
  11. Records/Pakistan in West Indies ODI Series, 2011/Most wickets, ESPNcricinfo, http://stats.espncricinfo.com/ci/engine/records/bowling/most_wickets_career.html?id=6342;type=series, பார்த்த நாள்: 12 July 2011 
  12. Junaid Khan stars in easy Pakistan win, ESPNCricinfo, 1 June 2016, http://www.espncricinfo.com/ireland/content/story/516999.html, பார்த்த நாள்: 3 June 2011 
  13. Records/Pakistan in Ireland ODI Series, 2011/Most wickets, ESPNcricinfo, http://stats.espncricinfo.com/ci/engine/records/bowling/most_wickets_career.html?id=6532;type=series, பார்த்த நாள்: 1 June 2016 
  14. Siggins, Ger (31 May 2011), What lies ahead for Ireland?, ESPNcricinfo, http://www.espncricinfo.com/ireland/content/story/517307.html, பார்த்த நாள்: 1 June 2016 
  15. Purohit, Abhishek (18 October 2011), Junaid's five-for caps Pakistan's day, Cricinfo, http://www.espncricinfo.com/pakistan-v-sri-lanka-2011/content/story/536908.html, பார்த்த நாள்: 1 June 2016 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுனைத்_கான்&oldid=2532771" இருந்து மீள்விக்கப்பட்டது