வகாப் ரியாஸ்

பாக்கித்தானிய துடுப்பாட்ட வீரர்

வகாப் ரியாஸ் (Wahab Riaz, உருது: وہاب ریاض‎, பிறப்பு: சூன் 28, 1985, பாக்கிஸ்தான்) லாகூர் இல் பிறந்த இவர் சகலதுறை ஆட்டக்காரர். பாக்கிஸ்தான் தேசிய அணி, ஹைதராபாத் துடுப்பாட்ட அணி, லாகூர் அணி, லாகூர் சிங்க அணி, லாகூர் ரவி ஆகிய அணிகளுக்காகவும் இவர் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார்

வகாப் ரியாஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்வகாப் ரியாஸ்
பட்டப்பெயர்விகி
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைஇடதுகை விரைவு-மிதம்
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 202)18 ஆகஸ்ட் 2010 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு12 நவம்பர் 2010 எ. தென்னாபிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 168)2 பெப்ரவரி 2008 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாப8 நவம்பர் 2010 எ. தென்னாபிரிக்கா

சர்வதேச போட்டிகள்

தொகு

வங்காளதேசத் துடுப்பாட்ட அணி, இந்தியத் துடுப்பாட்ட அணி மற்றும் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்ற மூன்று நாடுகள் பங்கேற்ற முத்தரப்புத் தொடரில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான துடுப்பாட்டத் தொடரில் இவர் அறிமுகமானார். இதில் 7 ஓவர்களை வீசி 22 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளை வீழ்த்தினார். பின் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் 10 ஓவர்களை வீசி 85 ஓட்டங்களை விட்டுகொடுத்தார். இதில் 2 இலக்குகளை வீழ்த்தினார்.

2010 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் விளையாடியது.இதன் முதல் ஆட்டப் பகுதியில் வகாப் 63 ஓட்டங்களை விட்டு கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார்.பின் மட்டையாட்டத்தில் 27 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.[1]

பின் அக்டோபர், 2010 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடினார். பின் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் கிரயெம் சிமித் மற்றும் அசீம் ஆம்லாவின் இலக்கினைக் கைப்பற்றினார். பின் காயம் காரணமாக இந்தப் போட்டியில் இவரால் பந்துவீச இயலவில்லை. இதனால் மற்ற போட்டிகளில் விளையாட இயலவில்லை.[2]

மார்ச் 2011 ஆம் ஆண்டில் இவர் விளையாடிய நான்கு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார். பின் 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பத் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். சுஐப் அக்தருக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் ஐந்து இலக்குகளை வீழ்த்தியதன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார்.[3]

இதன்பிறகு மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இரண்டு தேர்வுத் துடுப்பாட்டம், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் ஒரு பன்னாட்டு இருபது20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் பாக்கித்தானிய அணியில் இடம்பெற்றார்.[4] இருபது 20 போட்டியில் பாக்கித்தான் அணி தோற்றது.[5] இந்தத் தொடரின் நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் விளையடினார். இதில் 7 இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் பந்துவீச்சு சராசரி 25.28 ஆகும். இந்தத் தொடரில் அதிக இலக்குகள் வீழ்த்திய பாக்கித்தானியப் பந்துவீச்சாளர்களில் முதலிடம் பிடித்தார்[6]. இந்தத் தொடரைப் பற்றி தலைமைப் பயிற்சியாளரான வக்கார் யூனிசு, பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியத்திற்கு அனுப்பிய அறிக்கையில் வகாப் சுமாராக விளையாடியதாகத் தெரிவிக்கப்பட்டது[7]. பின் மே மாதத்தில் அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட பட்டியலில் இடம்பிடித்தார். ஆனால் விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை..[8][9]

சான்றுகள்

தொகு
  1. "3rd Test: England v Pakistan at The Oval, Aug 18–21, 2010". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 December 2011.
  2. "Side strain rules Riaz out of South Africa series". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 September 2012.
  3. "Wahab Riaz Bowling Score Card". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 September 2012.
  4. 'Chance to establish career' – Intikhab Alam, ESPNcricinfo, 18 April 2011, பார்க்கப்பட்ட நாள் 10 July 2011
  5. tt2147 itt199 West Indies v Pakistan: Pakistan in West Indies 2011 (Twenty20), Cricket Archive, பார்க்கப்பட்ட நாள் 10 July 2011
  6. Records / Pakistan in West Indies ODI Series, 2011 / Most wickets, ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 10 July 2011
  7. Yaqoob, Mohammad (9 July 2011), "Waqar calls for grooming of young captain for 2015 World Cup", Dawn, பார்க்கப்பட்ட நாள் 10 July 2011
  8. Records / Pakistan in Ireland ODI Series, 2011 / Most wickets, ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 3 June 2011
  9. Samiuddin, Osman (19 May 2011), Misbah replaces Afridi as ODI captain, ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 10 July 2011

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வகாப்_ரியாஸ்&oldid=3316493" இலிருந்து மீள்விக்கப்பட்டது