கலீல் அகமது

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

கலீல் அகமது (Khaleel Ahmed (பிறப்பு: டிசம்பர் 5, 1997) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்.[1]

கலீல் அகமது
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கலீல் கிசித் அகமது
பிறப்பு5 திசம்பர் 1997 (1997-12-05) (அகவை 27)
தோங், இராசத்தான், இந்தியா
மட்டையாட்ட நடைவலதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடைஇடதுகை மித வேக பந்து வீச்சாளர்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 222)18 செப்டம்பர் 2018 எ. ஆங்காங்
கடைசி ஒநாப25 செப்டம்பர் 2018 எ. ஆப்கானித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2016-தற்போது வ்ரைராசத்தான் மாநிலத் துடுப்பாட்ட அணி
2017டெல்லி டேர்டெவில்ஸ் (squad no. 313)
2018சன்ரைசர்ஸ் ஐதராபாத் (squad no. 13)
மூலம்: ஈ எஸ் பி என் கிரிக் இன்ஃபோ, 25 செப்டம்பர், 2018

உள்ளூர்ப் போட்டிகள்

தொகு

பெப்ரவரி 5,2017இல் மாநிலங்களுக்கு இடையேயான இருபது20 போட்டியில் இராசத்தான் மாநில அணிக்காக முதல் போட்டியில் விளையாடினார்.[2] இதற்கு முன்பாக 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால் விளையாடும் அணியில் இடம் கிடைக்கவில்லை.[3] 2017 -2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். அக்டோபர் 6, 2017 இல் நடைபெற்ற போட்டியில் ராசத்தான் மாநில அணிக்காக விளையாடினார்.[4]

சனவரி, 2018 இல் 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது.[5]

பெப்ரவரி 5, 2018 இல் நடைபெற்ற விஜய் அசாரே கோப்பைக்கான (பட்டியல் அ துடுப்பாட்டம்) தொடரில் ராசத்தான் அணிக்காக விளையாடினார்.[6]

சர்வதேச போட்டிகள்

தொகு

செப்டம்பர், 2018 இல் ஆசியக் கிண்ணம் 2018 தொடருக்கான இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. செப்டம்பர் 18, 2018 இல் ஹொங்கொங் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[7]

சான்றுகள்

தொகு
  1. "Khaleel Ahmed". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 February 2017.
  2. "Inter State Twenty-20 Tournament, Central Zone: Railways v Rajasthan at Jaipur, Feb 5, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 February 2017.
  3. "Ishan Kishan to lead India at U19 World Cup". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 December 2015.
  4. "Group B, Ranji Trophy at Jaipur, Oct 6-9 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
  5. "List of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.
  6. "Group C, Vijay Hazare Trophy at Chennai, Feb 5 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 February 2018.
  7. "4th Match, Group A, Asia Cup at Dubai, Sep 18 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 September 2018.

வெளியினைப்புகள்

தொகு

ஈஎஸ் பி என் வலைத்தளத்தில் கலீல் அகமது

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலீல்_அகமது&oldid=3920018" இலிருந்து மீள்விக்கப்பட்டது