குல்தீப் யாதவ்
குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) என்பவர் இந்திய ஆடவர் துடுப்பாட்ட அணியைச் சார்ந்தவர். இவர் இடது கை சுழற்பந்து வீச்சாளர். இவர் உத்தரப்பிரேதச மாநிலத்தைச் சார்ந்தவர். இவர் 19-வயதினருக்கான உலகக்கோப்பையில் 2014-ஆம் ஆண்டு விளையாடியுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் 2012-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் 2014-ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கும் விளையாடியுள்ளார். சர்வதேச ஒரு நாள் போட்டிகளைப் பொறுத்தவரை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தைத் தொடங்கினார். இவரது தேர்வு துடுப்பாட்ட அறிமுக ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2017ஆம் ஆண்டில் தொடங்கியது.[1]
2014 இந்திய பிரீமியர் லீக்கின் போது | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 14 திசம்பர் 1994 கான்பூர், உத்தரப்பிரதேசம், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5.511811 அடி 66.14173 அங் (3.36 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடது, சுழல் பந்துவீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 288) | 25 மார்ச் 2017 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 13 பிப்ரவரி 2021 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 217) | 23 ஜூன் 2017 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 23 ஜூலை 2021 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 23 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 7 சனவரி 2020 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 23 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2012 | மும்பை இந்தியன்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014–முதல் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (squad no. 23) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014–முதல் | உத்தரப்பிரதேசம் (squad no. 3) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 20 July 2021 |
சர்வதேசப் போட்டிகள்
தொகு2017 ஆம் ஆண்டில் இந்திய துடுப்பாட்ட அணி சார்பாக ஹேட்ரிக் இலக்கினை வீழ்த்திய மூன்றாது நபர் எனும் சாதனை படைத்தார். இவர் சேத்தன் சர்மா மற்றும் கபில்தேவ் ஆகியோருக்குப் பிரகு இந்தச் சாதனையினைப் புரிந்தார். 2017 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. 2017 ஆம் ஆண்டில் செப்டம்பர் 21 ஆம் நாள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆத்திரேலிய அணிக்கு எதிராக இவர் இந்தச் சாதனையினைப் புரிந்தார்.[2][3]
2014 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவருக்கு அணியில் இடம் கிடைத்தது. ஆனால், விளையாடும் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.[4] பெப்ரவரி 2017 இல் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் அணியில் சேர்க்கப்பட்டார்.[5] ஆனால், அதிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2017 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள் தர்மசாலா அரங்கத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வு போட்டியில் இவர் அறிமுகமானார். அதன் முதல் ஆட்டப் பகுதியில் இவர் நான்கு இலக்குகளைக் கைப்பற்றினார்.[6] இந்தியத் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் விளையாடும் முதல் இடது கை சுழற்பந்துவீச்சாளர் இவர் ஆவார். தனது முதல் போட்டியிலேயே நான்கு இலக்குகளைக் கைப்பற்றினார். தனது அறிமுகப் போட்டியில் நான்கு இலக்குகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் சாதனை படைத்தார்.
2017 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.[7] 2017 ஆம் ஆண்டு சூன் 23 ஆம் நாள் தனது முதல் ஒருநாள் போட்டியினை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விளையாடினார்.[8] இந்திய அணி மட்டையாடிய போது மழை குறுக்கிட்டதானல் ஆட்டம் தடையானது. அதனால் பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த போட்டியில் இவர் மூன்று இலக்குகளைக் கைப்பற்றினார்.[9] அதே ஆண்டில் சூலை 9 இல் நடைபெற்ற பன்னாட்டு இருபது20 போட்டியில் அதே அணிக்கு எதிராக அறிமுகமானார்.[9]
2018 ஆம் ஆண்டில் பன்னாட்டு இருபது20 போட்டியில் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் ப/ இ20 போட்டியில் ஐந்து இலக்குகளை வீழ்த்திய முதல் இடது சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இவர் இந்தச் சாதனையினைப் படைத்தார். மேலும் புவனேசுவர் குமார் மற்றும் யுவேந்திர சகல் ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்தச் சாதனை புரிந்த மூன்றாவது இந்தியர் ஆவார்.[10][11]
2018 ஆம் ஆண்டு சூலை 12 ஆம் நாளில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சினைப் பதிவு செய்த முதல் இடது கை சுழற்பந்து வீச்சாளர் எனும் சாதனை படைத்தார். அந்தப் போட்டியில் 25 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஆறு இலக்குகளைக் கைப்பற்றினார். மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக சகித் அப்ரிதியின் சாதனையினைத் தகர்த்தார்.
சான்றுகள்
தொகு- ↑ https://en.wikipedia.org/wiki/Kuldeep_Yadav
- ↑ "Kuldeep Yadav becomes third Indian bowler to pick up an ODI hat-trick". The Indian Express. 21 September 2017. http://indianexpress.com/article/sports/cricket/kuldeep-yadav-becomes-third-indian-bowler-to-pick-up-a-hat-trick-in-odi-cricket-india-vs-australia-4854947/.
- ↑ "2nd ODI (D/N), Australia tour of India at Kolkata, Sep 21 2017". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 September 2017.
- ↑ "Kuldeep Yadav selected in India's squad for West Indies ODIs". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 26 August 2016.
- ↑ "Kuldeep Yadav replaces inured Mishra". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 February 2017.
- ↑ "Australia tour of India, 4th Test: India v Australia at Dharamsala, Mar 25-29, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 March 2017.
- ↑ "Pant, Kuldeep picked for West Indies tour". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 June 2017.
- ↑ "India tour of West Indies, 1st ODI: West Indies v India at Port of Spain, Jun 23, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 June 2017.
- ↑ 9.0 9.1 "Only T20I, India tour of West Indies at Kingston, Jul 9 2017 | Match Summary | ESPNCricinfo". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 July 2018.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Kuldeep Yadav's hunger for wickets impresses Mohinder Amarnath - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/sports/cricket/india-in-england/kuldeep-yadavs-hunger-for-wickets-impresses-mohinder-amarnath/articleshow/64863660.cms.
- ↑ "Brilliant Kuldeep and KL Rahul give India a perfect start". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 July 2018.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)