நஸ்முல் உசைன் சாந்தோ
நஸ்முல் உசைன் சாந்தோ (Nazmul Hossain Shanto (பிறப்பு: மே 25, 1998) வங்காளதேசத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்.[1] இவர் வங்காளதேச அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இடதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித வேகப் பந்து வீச்சாளரான இவர் 19 வயதிற்கு உட்பட்ட வங்காளதேசத் துடுப்பாட்ட அணி யில் விளையாடியுள்ளார். மேலும் இவர் கலாபகன் துடுப்பாட்ட அகாதமி சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2016 ஆம் ஆண்டிற்கான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் இவர் விளையாடினார்.[2]
உள்ளூர்ப் போட்டிகள்
தொகு2016-17 ஆம் ஆண்டிற்கான வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் இவர் விளையாடினார். நவமபர் 8 இல் நடைபெற்ற போட்டியில் கமில்லா விக்டோரியன்ஸ் அணி சார்பாக இவர் இருபது20 போட்டிகளில் அறிமுகமானார்.[3]
2017-18 ஆம் ஆண்டிற்கான நேஷனல் கிரிக்கெட் லீக் தொடரில் இவர் ராஜ்ஷாகி அணிக்காக விளையாடினார். டிசம்பரில் தாக்கா மெட்ரோபொலிஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிசனூர் ரகுமானுடன் இணைந்து 341 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த வங்காளதேச இணை எனும் சாதனை படைத்தனர்.[4]
மேலும் அதே ஆண்டில் தாக்கா கோட்ட பிரீமியர் லீக் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 749 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.[5]
2018-19 ஆம் ஆண்டிற்கான வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் குல்னா டைடன்ஸ் அணி சார்பாக விளையாடுவார் என அக்டோபரில் அறிவிக்கப்பட்டது.[6]
சர்வதேச போட்டிகள்
தொகுநவம்பர் 2016 இல் நியூசிலாந்துத் தொடருக்கான வங்காளதேச அணியில் 22 பேர் கொண்ட பட்டியலில் இவர் இடம் பெற்றார்.[7] 2017 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. சனவரி 20 இல் கிறிஸ்ட் சர்ச்சில் நடைபெற்ற நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 56 பந்துகளைச் சந்தித்த இவர் 18 ஓட்டங்களை எடுத்து டிம் சௌத்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 60 பந்துகளைச் சந்தித்த இவர் 12 ஓட்டங்கள் எடுத்து போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணி 9 இலக்குகளில் வெற்றி பெற்றது.[8]
ஒருநாள் போட்டிகள்
தொகுஆசியக் கிண்ணம் 2018 தொடருக்கான 31 பேர் கொண்ட உத்தேசப் பட்டியலை வங்காளதேசத் துடுப்பாட்ட வாரியம் ஆகஸ்டு 2018 இல் அறிவித்தது. அதில் இவர் உட்பட 12 புதிய வீரர்கள் இடம் பெற்றனர். 2018 ஆம் ஆண்டில் ஆசியக் கோப்பை ஆ பிரிவில் வங்காளதேச அணி இடம் பெற்றது. செப்டம்பர், 20 இல் அபுதாபியில் நடைபெற்ற ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[9] அந்தப் போட்டியில் லிதன் தாசுடன் இணைந்து துவக்க வீரராக களம் இறங்கினார். 13 பந்துகளைச் சந்தித்த இவர் 7 ஓட்டங்களை எடுத்து முஜீப் உர் ரகுமான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ஆப்கானித்தான் அணி 136 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[10]
சான்றுகள்
தொகு- ↑ "Nazmul Hossain Shanto". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 June 2015.
- ↑ "Mehedi Hasan to lead Bangladesh at U19 WC". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 December 2015.
- ↑ "Bangladesh Premier League, 1st Match: Comilla Victorians v Chittagong Vikings at Dhaka, Nov 8, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 November 2016.
- ↑ "Nazmul, Mizanur craft record stand". The Daily Star (Bangladesh). பார்க்கப்பட்ட நாள் 23 December 2017.
- ↑ "Dhaka Premier Division Cricket League, 2017/18: Most runs". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
- ↑ "Full players list of the teams following Players Draft of BPL T20 2018-19". Bangladesh Cricket Board. Archived from the original on 28 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Bangladesh include Mustafizur in preparatory squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 November 2016.
- ↑ "Bangladesh tour of New Zealand, 2nd Test: New Zealand v Bangladesh at Christchurch, Jan 20-24, 2017". ESPN Cricinfo.
- ↑ "Liton Das recalled as Bangladesh reveal preliminary squad for Asia Cup 2018". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 14 August 2018.
- ↑ "6th Match, Group B, Asia Cup at Abu Dhabi, Sep 20 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 September 2018.
வெளியிணைப்புகள்
தொகு- கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: நஸ்முல் உசைன் சாந்தோ
- Player Profile: நஸ்முல் உசைன் சாந்தோ கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து