நாக வாகனம்

உரிய கடவுள்: விஷ்ணு

நாகவாகனம் என்பது இந்து சமயப் புராணங்களின்படி விஷ்ணுவின் வாகனமாகும்.[1] விஷ்ணு பாம்புப் படுக்கையில் படுத்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இந்துக்கோயில்களில் திருவிழாக்களின் பொழுது அந்தந்த கோயில் உற்சவமூர்த்திகள் ஊர்வலத்தில் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாக நாக வாகனமும் உள்ளது. தமிழ்நாட்டின். கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூர் சந்திர சூடேசுவரர் கோயில் மாசி மாதம் நடக்கும் தேர் திருவாழாவின்போது தேர்த் திருவிழாவுக்கு முந்தைய நாட்களில் நடக்கும் உற்சவங்களில் நாக வாகன உற்சவமும் ஒன்று.

இவ்வாறு நாகவாகனத்தில் கடவுளர் ஊர்வலம் வருதலை நாகவாகன சேவை என்று அழைக்கின்றனர்.

வாகன அமைப்பு

தொகு

நாக வாகனமானது மரத்தால் செய்யப்பட்டு, மேற்புரம் உலோகத் தகடுகளால் காப்பும், அழகும் செய்யப்பட்டுகின்றன. நாகமானது தனது உடல்பகுதியை வட்ட வடிவில் ஒரு மேடைபோல சுருட்டி வைத்து நாகம் ஏழு தலைகளுடன் படமெடுத்தாடுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது, நாக வாகனத்தில் நாகம் தன் உடலை சுருட்டியுள்ள பீடத்தின் மீது உற்சவரை அமர்த்த ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

படக்காட்சியகம்

தொகு

இவற்றையும் காண்க

தொகு
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hindu Gods Vaganas drawings
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆதாரங்கள்

தொகு
  1. "எந்தக் கடவுளுக்கு என்ன வாகனம்?". https://tamilandvedas.com. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகவாகனம்&oldid=3700853" இலிருந்து மீள்விக்கப்பட்டது