நாகீத் அபிதி
நாகீத் அபிதி (Naheed Abidi) என்பவர் இந்திய சமசுகிருத அறிஞர்[1] மற்றும் எழுத்தாளர் ஆவார். 2014ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கத்தால் இலக்கியத் துறையில் நாகீத் அபிதி ஆற்றிய பங்களிப்பிற்காக நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[2]
நாகீத் அபிதி Naheed Abidi | |
---|---|
பிறப்பு | 1961 இந்தியா |
பணி | எழுத்தாளர், ஆய்வாளர் |
வாழ்க்கைத் துணை | எ. அபிதி |
பிள்ளைகள் | 1 மகன், 1 மகள் |
விருதுகள் | பத்மசிறீ |
வாழ்க்கை
தொகுநாகீத் அபிதி 1961-ல், இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூரில் சியா முஸ்லீம் ஜமீந்தார்[3] குடும்பத்தில் பிறந்தார்.[4] சமசுகிருதத்தைத் தனது பாடமாகத் தேர்ந்தெடுத்து, அபிதி கமலா மகேசுவரி பட்டயக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். மிர்சாபூரில் உள்ள கே. வி. பட்ட கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3]
மிர்சாபூர் நகர் வழக்கறிஞரான எஹ்தேஷாம் அபிதியுடன் திருமணத்திற்குப் பிறகு சமசுகிருத புலமையின் பண்டைய இடமான வாரணாசிக்கு குடிபெயர்ந்தார்.[5][3] வாரணாசி இந்து நூலான கருட புராணத்தால் புனிதமாகக் கருதப்படுகிறது.[6] இவர் இந்நகரத்தில் உள்ள பொதுப் பல்கலைக்கழகமான மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தில் முனைவர் பட்டம் பெற்றார். மேலும் வேத சாஹித்ய மே அஷ்வினியோன் கா ஸ்வரூப் (வேத இலக்கியத்தில் அஷ்வினிகளின் வடிவம்) என்ற தலைப்பில் தனது ஆய்வறிக்கையை 1993-ல் வெளியிட்டார்.[7]
2005ஆம் ஆண்டில், பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் எந்த ஊதியமும் இல்லாமல் விரிவுரையாளராகப் பணியாற்றத் தொடங்கினார். விரைவில், நாள் முறை ஊதிய திட்டத்தில் பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றுவதற்காக மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தில் சேர்ந்தார். இருப்பினும், சமசுகிருதத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய முதல் முஸ்லீம் பெண் என்று அறியப்படும் சமசுகிருத அறிஞர், என்ற வழக்கமான வேலையைக் கண்டுபிடிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டார்.[7] இவரது முதல் புத்தகம் 2008-ல் சமஸ்கிருத சாஹித்யா மே ரஹீம் என்று பெயரில் வெளியிடப்பட்டது. இது புகழ்பெற்ற கவிஞரான அப்துல் ரஹீம் கான்-இ-கானாவின் சமசுகிருத சார்புகளின் கணக்காகும்.[1] This was followed by Devalayasya Deepa,[8] இதைத் தொடர்ந்து தேவாலயஸ்ய தீபா, கவிஞரான மிர்சா காலிப் எழுதிய சாய்ராக்-இ-டெய்ரின் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை வெளியிட்டார். மூன்றாவது புத்தகம் சிர்-இ-அக்பர்,[5] 50 உபநிடதங்களின் இந்தி மொழிபெயர்ப்பாக வெளியிடப்பட்டது. இதற்கு முன்பு முகலாய அரசர்கள் தாரா சிக்கோவால் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.[9] தாரா சிகோவால் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாந்தத்தின் இந்தி மொழிபெயர்ப்பையும், இளவரசரின் சூபி நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.[1][5][7][10]
வாரணாசியின் சிவபுரி பகுதியில் உள்ள வி. டி. ஏ. குடியிருப்பில் நாகீது அபிதி தனது கணவர் எஹ்தேஷாம் அபிதி மற்றும் தனது இரண்டு குழந்தைகள் (ஒரு மகன் மற்றும் ஒரு மகள்)[5][3] உடன் வசித்து வருகிறார்.[11] சம்பூர்ணநாடு சமசுகிருத பல்கலைக்கழகத்தில் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.[3]
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
தொகுநாகீது அபிதி 2014-ல், இந்திய அரசின், இலக்கியத்திற்கான சேவைகளுக்காக பத்மசிறீ விருதினைப் பெற்றார்.[2] இவர் இலக்னோ பல்கலைக்கழகத்தால் டிலிட் (மதிப்புறு முனைவர்) விருதையும் பெற்றுள்ளார்.[3] அபிதி, 9 செப்டம்பர் 2014 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துத் தான் எழுதிய இரண்டு புத்தகங்களை வழங்கினார்.[12] இந்த சந்திப்பு குறித்து மோதி தனது கூகுள்+ பக்கத்தில் புகைப்படம் மூலம் அறிவித்தார்.[13] மேலும் இந்த சந்திப்பின் காணொலி பிரதமரின் தனிப்பட்ட இணையதளத்தில் வெளியானது.[10] 2016ஆம் ஆண்டு, லக்னோவில் நடைபெற்ற விழாவில், உ.பி. அரசாங்கத்தால் யஷ் பாரதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[4]
இலக்கியப் பங்களிப்புகள்
தொகு- Naheed Abidi (2008). Devalayasya dipah. Rashtriya Sanskrit Sansthan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788186111536.
- Naheed Abidi (2006). Sanskrit Sahitya Mein Rahim. Hindi Book Centre. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788186111321.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Elets Online". Elets Online. 2014. பார்க்கப்பட்ட நாள் 1 October 2014.
- ↑ 2.0 2.1 "Padma Awards Announced". Circular. Press Information Bureau, Government of India. 25 January 2014. Archived from the original on 22 February 2014. பார்க்கப்பட்ட நாள் 23 August 2014.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "TOI". TOI. 30 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 October 2014.
- ↑ 4.0 4.1 Singh, Binay (21 March 2016). "Sanskrit scholar Dr Naheed Abidi gets Yash Bharati award". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/varanasi/Sanskrit-scholar-Dr-Naheed-Abidi-gets-Yash-Bharati-award/articleshow/51497899.cms.
- ↑ 5.0 5.1 5.2 5.3 Singh, Binay (30 January 2014). "Sanskrit has a special place in the heart of Padma Shri awardee Naheed Abidi". Times of India. பார்க்கப்பட்ட நாள் 30 April 2017.
- ↑ "Garuḍa Purāṇa XVI 114". பார்க்கப்பட்ட நாள் 9 November 2012.
- ↑ 7.0 7.1 7.2 "One India". One India. 13 June 2007. பார்க்கப்பட்ட நாள் 1 October 2014.
- ↑ Naheed Abidi (2008). Devalayasya Dipah. Rashtriya Sanskrit Sansthan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788186111536.
- ↑ "Sirr-e-Akbar". Internet Archive. 2014. பார்க்கப்பட்ட நாள் 1 October 2014.
- ↑ 10.0 10.1 "Narendra Modi". Narendra Modi. 2014. பார்க்கப்பட்ட நாள் 1 October 2014.
- ↑ "Wikimapia". Wikimapia. 2014. பார்க்கப்பட்ட நாள் 1 October 2014.
- ↑ "DNA India". DNA India. 8 September 2014. பார்க்கப்பட்ட நாள் 1 October 2014.
- ↑ "Modi Google Plus". Google Plus. 2014. பார்க்கப்பட்ட நாள் 1 October 2014.
வெளி இணைப்புகள்
தொகு- "Civil Investiture Ceremony". Indian Express. 2014. பார்க்கப்பட்ட நாள் 1 October 2014.
- "News report". DNA India. 2014. பார்க்கப்பட்ட நாள் 1 October 2014.
- "News report". Veooz. 2014. Archived from the original on 14 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 1 October 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - "Eminent Sanskrit Scholar, Dr. Naheed Abidi calls on PM Modi - YouTube video". YouTube. 8 September 2014. பார்க்கப்பட்ட நாள் 1 October 2014.