நாகூர் தர்கா
நாகூர் தர்கா (Nagore Dargah) (நாகூர் தர்கா அல்லது சையத் சாகுல் அமீது தர்கா அல்லது நாகூர் ஆண்டவர் தர்கா என்றும் அழைக்கப்படுகிறது) என்பது சூபி துறவி சாகுல் அமீதின் [1] (பொது ஊழி 1490-1579 ) கல்லறையின் மீது கட்டப்பட்ட தர்கா ஆகும். இது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் கடலோர நகரமான நாகூரில் அமைந்துள்ளது. தர்காவின் வெளிப்புற கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். உள் கதவுகள் காலை 4:00 மணி முதல் 06:00 மணி வரையிலும், மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையிலும் திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில், கதவுகள் கூடுதலாக 12:00 மணி முதல் 2:30 மணி வரை திறந்திருக்கும்.[2]
நாகூர் தர்கா | |
---|---|
குவி மாடம், புனித தெப்பக்குளம் மற்றும் ஐந்து மினாரெட்டுகளுடன் கூடிய நாகூர் தர்காவின் ஒரு காட்சி | |
அமைவிடம் | நாகூர் (தமிழ் நாடு), தமிழ்நாடு, இந்தியா |
நிர்வாகம் | நாகூர் தர்கா குழு |
கட்டிடக்கலைத் தகவல்கள் | |
கட்டிட மாதிரி | இஸ்லாமியக் கட்டிடக்கலை |
குவிமாடம் | 1 (தங்க முலாம்) |
மினாரா(க்கள்) | 5 |
மினாரா உயரம் | 131 அடி (40 m) (உயரமானது) |
சாகுல் அமீத் நாகூரில் பல அற்புதங்களைச் செய்ததாக நம்பப்படுகிறது. மேலும் 16 ஆம் நூற்றாண்டின் தஞ்சாவூரின் இந்து ஆட்சியாளரான மன்னர் அச்சுதப்ப நாயக்கரின் உடல் ரீதியான துன்பங்களைக் குணப்படுத்தினார். அவர் உள்ளூரில் நாகூர் ஆண்டவர் என்றும் அறியப்படுகிறார். அதாவது "நாகூர் ஆட்சியாளர்" மற்றும் காதிர் வாலி பாபா. நாகூர் தர்கா தற்போது உள்ள நிலையில், சாகுல் அமீதின் பக்தர்களால், இந்துக்களின் பெரும் பங்களிப்புடன் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. தஞ்சாவூரின் இந்து மராத்திய ஆட்சியாளர் பிரதாபசிம்மன் ( ஆட்சி 1739-1763) காலத்தில் தர்காவில் ஐந்து மினாரட்டுகள் கட்டப்பட்டன. தர்கா ஒரு பெரிய புனித யாத்திரை மையமாக உள்ளது. இது சூபி இஸ்லாம் மற்றும் இந்து சமயம் ஆகிய இரண்டிலிருந்தும் யாத்ரீகர்களை ஈர்க்கிறது. இது இரு மதங்களுக்கிடையில் அமைதியான சகவாழ்வையும் குறிக்கிறது.[3]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Hunter, Sir William Wilson (1908). Imperial gazetteer of India, Volume 19. Oxford: Clarendon Press.
- ↑ முனைவர் அஹ்மதுல்லாஹ் (2005). ஆன்மீகம். p. 786.
- ↑ Landis, Dan; Albert, Rosita D. (2012). Handbook of Ethnic Conflict: International Perspectives. London: Springer Science+Business Media, LLC. p. 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4614-0447-7.