நாசுரா, ராணாகாட்
நாசுரா (Nasra) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நதியா மாவட்டத்தில் அமைந்துள்ள ராணாகாட் உட்கோட்டத்தில் இடம்பெற்றுள்ள ராணாகாட் காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்[1].
நாசுரா
Nasra নাসড়া | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | நதியா |
அரசு | |
• வகை | கணக்கெடுப்பில் உள்ள ஊர் |
ஏற்றம் | 7 m (23 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 10,560 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | வங்காளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
புவியியல் அமைப்பு
தொகுபாகிரதி என்றழைக்கப்படும் ஊக்லி ஆற்றின் கிழக்கில் நதியா மாவட்டம் பெரும்பாலும் வண்டல் சம்வெளிகளால் ஆனது. இவ்வண்டல் சமவெளிகளின் குறுக்கே யாலங்கி, சுர்னி மற்றும் இச்சமதி துணையாறுகள் பாய்கின்றன. இந்நதிகளால் வண்டலைப்பெறும் இப்பகுதியில் வெள்ளம் ஒரு தொடர்ச்சியான வளமாக இருக்கிறது[2]
23.18° வடக்கு 88.58° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் நாசுரா நகரம் பரவியுள்ளது.
மக்கள் தொகையியல்
தொகுஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[3] நாசுரா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 10,560 ஆகும் இம்மக்கள் தொகையில் 50% பேர் ஆண்கள் மற்றும் 50% பேர் பெண்கள் ஆவர். இம்மக்கள் தொகையில் கல்வியறிவு சதவீதம் 77% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 83 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 72 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 9% அளவில் உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "District Wise List of Statutory Towns". Census of India 2001, Urban Frame. Directorate of Census Operations, West Bengal. Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-10-06.
- ↑ Gangopadhyay, Basudev, Paschimbanga Parichay, 2001, (வங்காள மொழியில்), p. 73, Sishu Sahitya Sansad
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.