நாடாளுமன்றக் குன்று

நாடாளுமன்றக் குன்று (Parliament Hill, பிரெஞ்சு மொழி: Colline du Parlement), பொதுவழக்கில் தி ஹில், ஒன்ராறியோ மாகாணத்தின் ஒட்டாவாவில் நகரமையத்தில் ஒட்டாவா ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள அரசு நிலப்பகுதி ஆகும். இதன் கோதிக் மறுமலர்ச்சிப் பாணிக் கட்டிடங்களில் கனடிய நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இங்கு பல முக்கியமானத் தேசியக் குறியீடுகளை கட்டிட வடிவமைப்பில் காணலாம். இதனைச் சுற்றிப் பார்க்க ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 3 மில்லியன் பார்வையாளர்கள் வருகின்றனர்.[1]

நாடாளுமன்றக் குன்று
கொல்லீனு டு பார்லெமென்ட்
கெட்டினோவிலிருந்து சூலை 2014இல் பொழுதுசாயும் நேரத்தில் காண்கையில் நாடாளுமன்றக் குன்று
அமைவிடம்ஒட்டாவா ஆறு / வெல்லிங்டன் சாலை, டவுன்டவுன், ஒட்டாவா
கட்டப்பட்டது1859-
க்காக கட்டப்பட்டதுகனடா மாகாண சட்டப்பேரவை, கனடிய நாடாளுமன்றம்
கட்டிடக்கலைஞர்கால்வெர்ட் வோக்சு, மார்சல் உட் (நிலத்தோற்றங்கள்)
தாமசு இசுக்காட் (மேற்பார்வை)
பார்வையாளர்களின் எண்ணிக்கைஆண்டுக்கு 3 மில்லியன்
நிர்வகிக்கும் அமைப்புதேசிய தலைநகர் ஆணையம்
அலுவல் பெயர்நாடாளுமன்றக் கட்டிடங்கள் கனடாவின் தேசிய வரலாற்றுச்சிறப்புமிக்க இடம்
தெரியப்பட்டது1976
அலுவல் பெயர்நாடாளுமன்றக் கட்டிடங்கள் மைதானங்கள் கனடாவின் தேசிய வரலாற்றுச்சிறப்புமிக்க இடம்
தெரியப்பட்டது1976
நாடாளுமன்றக் குன்று
நூற்றாண்டுத் தீயும் பின்னால் அமைதிக் கோபுரமும்.

18ஆவது, 19ஆவது நூற்றாண்டுகளில் இந்நிலப்பகுதி படைத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1859இல் ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா கனடா மாகாணத்தின் தலைநகரமாக பைடவுனை அறிவித்த பிறகு இதனை அரசு நிலமாக மேம்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் பல விரிவாக்கங்களையும் துறைசார் கட்டிடங்களையும் 1916இல் தீவிபத்தில் அழிபட்ட மைய வளாகத்தையும் அடுத்து நாடாளுமன்றக் குன்று தற்போதுள்ள வடிவைக் கொண்டுள்ளது; 1927இல் அமைதிக் கோபுரம் கட்டப்பட்டது. 2002 முதல் விரிவான $1 பில்லியன் செலவுள்ள புதுப்பித்தல், சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; இது 2020 வரை தொடரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கட்டிடத் தொகுதியில் மூன்று வளாகங்கள் உள்ளன: மேற்கு வளாகம், கிழக்கு வளாகம் மற்றும் மைய வளாகம்.

1916இல் ஏற்பட்ட தீ விபத்தொன்றில் மைய வளாகம் முழுமையாக அழிபட்டது; நூலகத்தை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. இந்தக் கட்டிடம் மீண்டும் கட்டப்பட்டு அமைதிக் கோபுரம் 1927இல் முடிவுற்றது. கட்டிடங்களின் கூரைகள் செப்பாலானவை; இவை காலப்போக்கில் பச்சையாக மாறியுள்ளன.

இவ்வளாகத்தைச் சுற்றிலும் பல சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல முன்னாள் பிரதமர்களுக்கும் கனடாவில் பெண்களின் சம உரிமைகளுக்காக போராடிய 5 முதன்மைப் பெண்களுக்கும் இங்கு சிலைகள் உள்ளன. கனடா நிறுவப்பட்டு நூறாண்டுகள் நிறைவுபெற்றதை போற்றும் வகையில் நூற்றாண்டுத் தீ ஏற்றப்பட்டுள்ளது.

மேற்சான்றுகள் தொகு

  1. Canadian Press (6 May 2007). "Parliament Hill tourist facilities overwhelmed". CTV இம் மூலத்தில் இருந்து 16 டிசம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081216075631/http://www.ctv.ca/servlet/ArticleNews/story/CTVNews/20070506/hill_tourists_070506/20070506?hub=Politics. பார்த்த நாள்: 9 January 2009. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடாளுமன்றக்_குன்று&oldid=3359526" இலிருந்து மீள்விக்கப்பட்டது