நாடாளுமன்ற அருங்காட்சியகம்

நாடாளுமன்ற அருங்காட்சியகம் (Parliament museum) இந்தியாவில்புதுதில்லியில் சன்சாத் பவனுக்கு அருகில் அமைந்துள்ள இந்திய நூலக கட்டிடத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.[2] இந்த அருங்காட்சியகம் 29 டிசம்பர் 1989 ஆம் நாளன்று அப்போதைய மக்களவைத் தலைவரால் நாடாளுமன்ற மாளிகை இணைப்புக் கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது, பின்னர் அது தற்போதைய இடமான சன்சாடியா ஞானபீத்தின் சிறப்பு மண்டபத்தில் உள்ள, நாடாளுமன்ற நூலகக் கட்டடத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டது., அங்கு இந்த அருங்காட்சியகம் 7 மே 2002 ஆம் நாளன்று இந்திய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது., .[3] ஊடாடும் அருங்காட்சியகத்தை ஜனாதிபதி ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் 15 ஆகஸ்ட் 2006 ஆம் நாளன்று திறந்து வைத்தார்.[4]

நாடாளுமன்ற அருங்காட்சியகம்
संसदीय संग्रहालय
நாடாளுமன்ற அருங்காட்சியகம் is located in டெல்லி
நாடாளுமன்ற அருங்காட்சியகம்
Location within டெல்லி
நிறுவப்பட்டது14 ஆகஸ்டு 2006
அமைவிடம்புதுதில்லி
ஆள்கூற்று28°37′07″N 77°12′26″E / 28.618658°N 77.207172°E / 28.618658; 77.207172
வகைபாரம்பரியம்
வருனர்களின் எண்ணிக்கை28 பிப்ரவரி 2013இல் 1,74,003[1]
உரிமையாளர்இந்திய அரசு
பொது போக்குவரத்து அணுகல்மையச் செயலக மெட்ரோ ஸ்டேஷன்
வலைத்தளம்www.parliamentmuseum.org

இது ஒரு ஊடாடும் அருங்காட்சியகம் என்ற நிலையில் அமைந்த அருங்காட்சியகம் ஆகும். இது இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் கதையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. மக்களவை சபாநாயகருக்கு வெளிநாட்டு பிரதிநிதிகள் அன்பளிப்பாகத் தந்த அரிய பரிசுகள் இங்கு உள்ளன.

பார்வையாளர் நேரம் தொகு

அருங்காட்சியகம் செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 11.00 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். ஒவ்வொரு ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளிலும், அமர்வுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த அருங்காட்சியகம் மூடப்பட்டிருக்கும். நாடாளுமன்றம் அமர்வில் இருக்கும் காலகட்டத்தில் திங்கட்கிழமைகளில் இந்த அருங்காட்சியகம் பார்வையாளர்களின் வசதிக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

புதுதில்லியில் உள்ள இந்த நாடாளுமன்ற அருங்காட்சியகம் ஜனநாயகப் பாரம்பரியம் கொண்டு அமைந்துள்ள 2,500 கால இந்திய ஜனநாயக வரலாற்றை கதை மூலமாக விளக்குகின்றது. ஒலி ஒளி காட்சி அமைப்புடன் வரலாறானது விளக்கப்படுகிறது. பெரிய திரைகளைக் கொண்டு அமைந்துள்ள, கணினி ஊடக அமைப்பானது அனைத்து நிகழ்வுகளையும் காட்சி அளவில் சிறப்பாக பார்வையாளர்களின் முன் வைக்கிறது.[5]

வரலாறு தொகு

2004 ஆம் ஆண்டில், மக்களவை சபாநாயகர் பதவியை ஏற்றுக்கொண்ட பிறகு, சோம்நாத் சட்டர்ஜி இந்தியாவில் ஜனநாயக பாரம்பரியம் குறித்த ஒரு அருங்காட்சியகத்தை அமைப்பதில் தனக்கு இருந்த மிகுந்த தனிப்பட்ட ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இந்த அருங்காட்சியகம் நவீன, உயர் தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையாக அமைய வேண்டும் என்று அவர் விரும்பினார். பாரிஸின் சர்வதேச அருங்காட்சியக கவுன்சிலின் முன்னாள் தலைவரும், இந்தியாவின் தேசிய அறிவியல் அருங்காட்சியகங்களின் ஓய்வு பெற்ற இயக்குநருமான டாக்டர் சரோஜ் கோஸ் இதற்கான பொருத்தமான ஒரு முன்மொழிவை சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். இறுதி முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், நாடாளுமன்ற அலுவலர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கட்டுமானப் பணிகள் தொடங்க ஆரம்பித்தன. 14 ஆகஸ்ட் 2006 ஆம் நாளன்று, இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது பின்னர் அப்போது இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த பேராசிரியர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களால் அப்போதைய துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத், அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி மற்றும் பல புகழ்பெற்ற விருந்தினர்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. செப்டம்பர் 5, 2006 ஆம் நாளன்று, அருங்காட்சியகம் பொது மக்களின் பார்வைக்காகத் திறந்துவிடப்பட்டது.[6]

குறிப்புகள் தொகு

  1. "Website of Parliament Museum". Parliament Museum. Archived from the original on 8 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 9 April 2013.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 2020-01-03.
  3. "Parliamentary Museum And Archives". Parliament of India.
  4. "Past meets present in Parliament". http://www.indianexpress.com/news/past-meets-present-in-parliament/10630/. 
  5. "Parliament Museum, New Delhi, India". Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 2020-01-03.
  6. "The Historiacal Background: Calendar of Events". Parliament Museum. பார்க்கப்பட்ட நாள் 9 April 2013.

வெளி இணைப்புகள் தொகு

மேலும் காண்க தொகு