நாட்காட்டிச் சட்டம், 1750
நாட்காட்டி (புதிய வடிவம்) சட்டம் 1750 (Calendar (New Style) Act, 1750, அல்லது Chesterfield's Act) பெரிய பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் ஆகும். இச்சட்டம் இங்கிலாந்து மற்றும் பிரித்தானிய ஆள்புலங்களின் நாட்காட்டிக்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தம் ஆகும். இதன் படி மார்ச் 25 இல் கொண்டாடப்பட்டு வந்த புத்தாண்டு சட்டப்படியாக சனவரி 1 இற்கு மாற்றப்பட்டது. அத்துடன் ஏனைய மேற்குலக ஐரோப்பிய நாடுகளைப் போல கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது.
இங்கிலாந்து, மற்றும் வேல்சு
தொகுஇங்கிலாந்து, மற்றும் வேல்சில், சட்டப்படியான 1751 ஆம் ஆண்டு மார்ச் 25 முதல் டிசம்பர் 31 வரையுமே இருந்தது. இதன்படி அவ்வாண்டின் நாட்கள் மொத்தம் 282 ஆகக் குறைக்கப்பட்டது. 1752 ஆம் ஆண்டு சனவரி 1 இல் ஆரம்பமானது. ஏனைய ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த கிரெகொரியின் நாட்காட்டி இங்கிலாந்திலும் பயன்பாட்டுக்கு வந்தது. இதற்காக நாட்காட்டி 11 நாட்கள் முற்போடப்பட்டது: 1752 செப்டம்பர் 2 புதன்கிழமைக்கு அடுத்த நாள் 1752 செப்டம்பர் 14 வியாழக்கிழமையாக மாற்றப்பட்டது.[1] இதனால் 1752 ஆம் ஆண்டு 355 நாட்களை மட்டுமே கொண்டிருந்தது.
ஸ்கொட்லாந்து
தொகுஸ்கொட்லாந்து ஏற்கனவே மாற்றத்தைக் கொண்டு வந்து விட்டது. புத்தாண்டு 1600 ஆம் ஆண்டு சனவரி 1 இல் ஆரம்பித்தது. புதிய சட்டத்தின் படி ஸ்கொட்லாந்து 1752 ஆம் ஆண்டில் கிரெகொரியின் நாட்காட்டியை நடைமுறைக்குக் கொண்டு வந்தது.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ பார்க்க: Cal (Unix) and the Oracle Solaris manual: "An unusual calendar is printed for September 1752. That is the month 11 days were skipped to make up for lack of leap year adjustments".
- ↑ Spathaky, Mike Old Style and New Style Dates and the change to the Gregorian Calendar
- ↑ John James Bond, Handy-book of rules and tables, footnote on pages xvii–xviii (1875). Original text of the Scottish decree.]
வெளி இணைப்புகள்
தொகு- An act for regulating the commencement of the year; and for correcting the calendar now in use, Statutes at Large, volume 20, 1765. The original 1750/51 Act.