நாட்டாணி என்னும் கிராமம் தஞ்சைக்கு மேற்கே சுமார் 20கிமீ தொலைவில் அமைந்துள்ளது. எனினும் இது புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டத்தைச் சார்ந்தது. முற்றிலும் இயற்கை சூழலோடு அமைந்துள்ள இக்கிராமத்தில் விவசாயமும் கூலியுமே முதன்மையான தொழில்கள்.

—  கிராமம்  —
ஆள்கூறு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
பஞ்சாயத்து தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மக்கள்

தொகு

சுமார் 200 குடும்பங்களை கொண்ட இக்கிராமத்தில் இரண்டு சமுதாய மக்களே வாழ்கின்றனர். கள்ளர் சமுதாய மக்களும் பறையன் சமுதாய மக்களும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றர். சுற்றுவட்ட கிராமங்களோடு நல்லிலக்கணத்தோடும் மரியாதையோடும் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பிடத்தக்கவர்கள்

தொகு

இந்த ஊரில் பிறந்த ச.சு.பழனிமாணிக்கம் இந்திய அரசில் நடுவண் இணை அமைச்சராக இருந்துள்ளார்[3]. கள்ளர் சமுதாயத்தில் 'வன்னியர்' என்ற பட்டப் பெயர் கொண்டவர் இவர்.

சுற்றுலாத்தலம்

தொகு

இந்த கிராமத்தில் "அணை" அமைந்திருக்கிறது, இது சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் மாறி வருகிறது.

கோயில்கள்

தொகு

பண்டைய சோழர் நாடான இங்கு நான்குபுறமும் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கிராமத்தில் காவல் தெய்வமாக 'கருப்பையாவும் மதுரை வீரனும்' வணங்கப்படுகிறார்கள். படத்தளத்தியம்மன், முருகன் திருக்கோயில்கள் இங்கு உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. http://tamil.oneindia.in/news/2009/05/28/tn-central-ministers-from-tn-and-puducherry.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்டாணி&oldid=4129520" இலிருந்து மீள்விக்கப்பட்டது