நாட்டு நாய்
நாட்டு நாய் (Indian Pariah Dog) என்பது இந்திய துணைக் கண்டத்தில் இயற்கையாக காணப்படும் நாயினமாகும். இதன் பாரம்பரியம் 4,500 ஆண்டுகளுக்கு முன் செல்கிறது. இந்த இனம் உலகின் பழமையான நாய் இனங்களில் ஒன்றாகும். இதன் மூதாதை ஆஸ்திரேலிய மூதாதையாக கருதப்படுகிறது.[1] என்றாலும் இதன் பூர்வீக இடம் உறுதி செய்யப்படவில்லை.
இந்த நாய்கள் தரக்குறைவானவை அல்ல என்றாலும், இவை வணிக ரீதியாக இனப்பெருக்கம் அல்லது அங்கீகாரம் பெற்றவையாக இல்லை.
பெரும்பாலும் தவறுதலாக இவை அனைத்தையும் நகர்ப்புற இந்தியத் தெரு நாய்கள் என்ற பெயரால் குறிக்கப்படுகின்றன. இந்தியாவில் தடையில்லாமல் சுற்றித் திரிகிற நாய்களில் சில இந்த நாட்டு நாய்களுடன் ஒப்பிட இயலாது ஆனால் இவை ஐரோப்பிய காலனி வரலாற்று காலத்துக்குப் பின் அவர்களின் குடியேற்றப்பகுதிகளில் இந்த நாய்கள் ஓரளவுக்கு கலப்புக்கு உள்ளாயின.[2]
பிற பெயர்கள்
தொகுஇந்த நாய்களை ஆங்கிலத்தில் குறிப்பிடும் pariah என்ற சொல் ஆங்கிலோ இந்திய சொல்லான pye அல்லது paë என்ற சொல்லில் இருந்து தோன்றியது. இந்தியால் pāhī என்றால் 'வெளியே', என்பது பொருளாகும் சில சமயம் இது pye-dog என குறிப்பிடப்படுகிறது,[3] (pie அல்லது pi என்றும் உச்சரிக்கப்படுகிறது), the Indian native dog அல்லது INDog என்றும் கூறப்படுகிறது.
அசாமிய மொழியில் இந்த நாட்டு நாய்கள் பூட்டுவா குக்குர் (ভতুৱা কুকুৰ) என அழைக்கப்படுகின்றன.
இந்த நாயை இரட்யார்ட் கிப்ளிங் "பறையா மஞ்சள் நாய்" என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.
இதை மேற்கு வங்காளத்தில் "நேரி குத்தா" ("নেড়ি কুত্তা", Nēṛi kuttā) என குறிப்பிடுகின்றனர்.
வரலாறு
தொகுஇந்தப் பறையா நாய் எனப்படும் நாட்டு நாய்கள் இந்தியா முழுக்கவும், வங்காளதேசம் மற்றும் தெற்கு ஆசியாவுக்கு அப்பாலும் காணப்படுகின்றன. இது நேசனல் ஜியாகிரபிக் சேனலின் படமான, சர்ச் பார் தி பஸ்ட் டாக் என்ற படத்தில் இதே போன்ற பழமையான நாயினங்களான இசுரேலின் கேனன் நாய் மற்றும் ஆத்திரேலியாவின் டிங்கோ நாய் ஆகியவற்றுடன் ஆராயப்பட்டது. இதுவே இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த உண்மையான நாய் இனமாகும். இது ஐரோப்பிய நாய்ளுடனோ அல்லது பிற நாயினங்களுடனோ பெரும்பாலும் இரத்த கலப்பு ஏற்படாமல் உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலும் இதே நிலை உள்ளது.
இது அசல் உள்நாட்டு நாய்களில் மீதமுள்ள சில நாயினங்களின் பிரதிந்தியாகவும் உதாரணமாகவும் உள்ளது. இதன் உடல் அம்சங்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள நாய்களிகளின் தொல்லுயிர் எச்சங்களை ஒத்து உள்ளன. இந்தியாவில் இந்த நாய்கள் இந்திய பழங்குடி மக்களின் வேட்டை பங்காளிகளாக உள்ளன. இந்த நாய்களின் தேர்ந்தெடுக்கப்பட்டு உறவு இனங்கள் இல்லை என்பதால், இவற்றின் தோற்றம், உடல் அம்சங்கள் மற்றும் மனப் பண்புகள் தனியாக இயற்கைத் தேர்வு பணியில் அமைந்துள்ளது. இந்து இனம் எந்த கென்னல் கிளப்பின் அங்கீகாரமும் பெறவில்லை ஆனால் பழங்குடி மற்றும் பழங்குடியினர் நாய் சங்கத்தின் (Primitive and Aboriginal Dog Society (PADS) அங்கீகாரம் கிடைத்துள்ளது, என அமெரிக்காவை சார்ந்த உலகளவிலான ஆர்வலரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.[4]
பண்பு
தொகுஇது மிகவும் எச்சரிக்கை உணர்வு கொண்ட சமூக நாய் ஆகும். இதன் கிராமப்புற பரிணாம வளர்ச்சி, காடுகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் அடிக்கடி புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் போன்ற விலங்குகளிடமிருந்து தப்பிக்க வேண்டிய நிலையே இவற்றை மிக எச்சரிக்கையாக கொண்ட இனமாக பரிணாமம் பெற்றுள்ளது. இவை சிறந்த காவல் நாய்கள் மற்றும் தனது பிராந்தியத்தையும், குடும்பத்தையும் தற்காக்கக்கூடியவையாக உள்ளன. இவற்றின் குட்டிகள் நல்ல சமுதாயமாகவும், குடும்பங்கள் மற்றும் குழந்தைகளிடம் நன்கு பழகக்கூடியனவாகவும் உள்ளன. இவை மிகவும் அறிவார்ந்த மற்றும் எளிதாக பழக்கப்படுத்தக் கூடியவையாக உள்ளன ஆனால் அதே சமயம் எளிதான ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்ய சலித்துக் கொள்ளக்கூடியது, மற்றும் "கொண்டுவருதல்" போன்ற வழக்கமான, மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய நாய் விளையாட்டுகள் விளையாட விரும்புவதில்லை.
இவை சாதாரணமாக உண்கின்றன அரிதாகவே கூடுதலாக உண்கின்றன. மிக சுறுசுறுப்பான இனம், வழக்கமான உடற்பயிற்சி வாழ்க்கை வாழ்பவை, இவை சிறிதளவும் சந்தேகம் அடைந்தாலோ அல்லது ஆத்திரமூட்டப்பட்டாலோ சத்தமாக குரைப்பவை.
உடல்நலம்
தொகுஇவை இயற்கையாக உருவான இனமாக இருப்பதால், இவை குறித்த நலவாழ்வு கவலைகள் குறைவே மற்றும், வெப்பமண்டல கால நிலையில் குறைந்த "பராமரிப்பு" தேவைப்படுபவை.
இவை ஒப்பீட்டளவில் தங்களை சுத்தமாக வைத்துக் கொள்கின்றன. இவை உடல் நாற்றமற்றவை. இடுப்பு பிறழ்வு மற்றும் இது போன்ற மரபணு சுகாதார நோய்கள், மிகவும் அரிதாகவே தோன்றுகின்றன.
இவை இயல்பாகவே நல்ல உடல்நலம் கொண்டவை, நல்ல பராமரிப்பில் 15 ஆண்டுகள்வரை வாழக்கூடியவை.[4]
தோற்றம்
தொகுஇது நடுத்தர அளவுள்ள நாய் இது இரட்டை தோல் அமைப்பைக் கொண்டது, கரடு முரடான மேல்தோலையும் மென்மையான உட்தோலையும் கொண்டது. பொதுவாக இவை பழுப்பு நிறம் கொண்டு கரும்பழுப்பில் இருந்து சிவப்பு கலந்த பழுப்பாகவும் அதில் வெள்ளைக் கோடுகளைக் கொண்டோ அல்லது இல்லாமலோ இருக்கும். முழுக்க கறுப்பு நிற நாய்கள் அபூர்வமாக இருக்கிறன, சில நாய்கள் பல வண்ணங்களைக் கொண்டதாக உள்ளன.
இவற்றின் தலை நடுத்தர அளவுள்ளதாகவும், ஆப்பு வடிவில் உள்ளதாக இருக்கும். முகவாய் கூரானதாக மற்றும் தலை அளவுக்கு சமமானதாக அல்லது சற்று அதிகமாக நீளம் உடையதாக இருக்கும். கழுத்து தடிமனாகவும், நிமிர்ந்தும் உள்ளது. கண்கள் பாதாம் வடிவமாக மற்றும் அடர் பழுப்பு வண்ணத்திலும் உள்ளன. காதுகள், பரந்த அடிப்பகுதையைக் கொண்டு நிமிர்ந்த நிலையிலும் உள்ளன. வால் நடுத்தர நீளம் மற்றும் வால் சுருண்டும் இருக்கும்.
நடத்தை
தொகுஇந்த நாய்கள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் காணப்படுகின்றன, பின்தங்கிய கிராமங்களில் செல்லப் பிராணிகளாக வைத்திருக்கிறார்கள். பரந்து விரிந்த நகரங்களில் இவை வளர்போர் இன்றி தோட்டி விலங்குகளாக காணப்படுகின்றன. இந்த நாய்கள் வருடம் ஒருமுறை இனப்பெருக்கம் செய்ய முனைகின்றன. சினைப்பருவச் சுழற்சி காலத்தில், சினைப்பருவ பெண் நாய் பல ஆண் நாய்களுடன் புணர்ச்சியில் இருக்கும். இனப்பெருக்கக் காலத்தில் (ஜனவரி, ஆகஸ்ட்) போது, இந்த நாய்கள் கூடுதலாக குழு இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ LK Corbett, The Dingo in Australia and Asia, University of New South Wales Press, 1995
- ↑ Proceedings of the Asiatic Society of Bengal. Royal Asiatic Society of Bengal, Asiatic Society (Calcutta, India), 1876
- ↑ Merriam-Webster Dictionary
- ↑ 4.0 4.1 "INDog, The Indian Pariah Dog Project". October 2010.
- ↑ Pal, S. K.; Ghosh, B.; Roy, S. (1998a). "Agonistic behaviour of free-ranging dogs (Canis familiaris) in relation to season, sex and age". Applied Animal Behaviour Science 59 (4): 331–348. doi:10.1016/S0168-1591(98)00108-7. http://www.appliedanimalbehaviour.com/article/S0168-1591%2898%2900108-7/abstract.